டபுள் மடங்கு லாபம் தரும் திட்டங்கள்.. அதுவும் அரசின் திட்டங்கள்.. இது போதுமே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையானது மிக மோசமான அலையாக பரவி வருகின்றது. மக்கள் கூட்டம் கூட்டமாய் மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆங்காங்கே மரண ஓலங்களையும் கேட்க முடிகிறது.

 

ஆனால் இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் நம்மில் பலருக்கும் தோன்றும் ஒரு எண்ணம், திடீரென அவசர தேவை, வேலை போய்விட்டது என்றால் அடுத்து என்ன செய்ய போகிறோம். அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலை உள்ளதே. சேமிக்க வேண்டிய காலகட்டங்களில் சேமிக்கவில்லை. இனியாவது இதனை செய்வோமே என்ற எண்ணம் வந்திருக்கலாம்.

ஆனால் அதிலும் பலருக்கும் குழப்பமே எதில் முதலீடு செய்வது? எது பாதுகாப்பானது. எது லாபகரமானது? முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக எது சிறந்த முதலீட்டு திட்டங்கள், எப்படி முதலீடு செய்யலாம், யாரெல்லாம் முதலீடு செய்யலாம். இப்படி பல கேள்விகள் எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. வாருங்கள் பார்க்கலாம்.

அஞ்சலக திட்டங்கள்

அஞ்சலக திட்டங்கள்

இன்றைய காலகட்டத்தில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது அஞ்சல சேமிப்பு திட்டங்கள் தான். ஏனெனில் வரி சலுகையுடன் உள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கான திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், இது தவிர இன்னும் பல சேமிப்பு திட்டங்கள் என பலவற்றையும் வழங்கி வருகின்றது.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு. இதி குறைந்தபட்சம் டெபாசிட் 1000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் 1.5 லட்சம் ரூபாய் வரையில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டு வைப்பு தொகை திட்டத்தில் கிட்டதட்ட 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

அஞ்சலக சேமிப்பு திட்டம்
 

அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலகங்களிலும் வங்கிகளில் உள்ளதை போலவே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதோடு இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது வங்கிகளில் பெரியளவில் இல்லை. இந்த சேமிப்பு கணக்குகளில் செக் மற்றும் செக் அல்லாத வசதிகளும் உண்டு. இந்த சேமிப்பு கணக்கில் 80TTA கீழ் வரி சலுகை உண்டு. இதற்கு தற்போது 4% வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்களது தொகை 18 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

அஞ்சலக தொடர் வைப்பு கணக்கு

அஞ்சலக தொடர் வைப்பு கணக்கு

தபால் நிலையங்களில் குழந்தைகளின் பெயரில் கூட தொடர் வைப்பு நிதி கணக்கை துவங்கலாம். குறிப்பாக 10 வயது குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம். இந்த தொடர் வைப்பு கணக்கிற்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 12 வருடம் 5 மாதங்களில் உங்கள் முதலீடு இருமடங்காக மாறும்.

அஞ்சலக மாத வருமான திட்டம்

அஞ்சலக மாத வருமான திட்டம்

அஞ்சலத்தின் இந்த மாத வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம் , 6.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும். இந்த திட்டத்திலும் காலாண்டுக்க ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும்.

போஸ்ட் ஆபிஸ் - மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபிஸ் - மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலகத்தில் உள்ள முக்கிய சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமும் (SCSS ) ஒன்று. இது முதலில் அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.

அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. தற்போது வட்டி விகிதம் 7.10% ஆக உள்ளது. இந்த திட்டத்தில் 10.14 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இருமடங்காக மாறும்.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

அஞ்சலகத்தில் உள்ள மற்றொரு சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தொடர்ந்து கொள்ளலாம்.

இந்த பிபிஎஃப் திட்டத்தில் 80சியின் கீழ் வரிச்சலுகை உண்டு. இந்த வரி சலுகை கிடைக்கும் லாபத்திற்கு உண்டு. இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இதில் 10.14 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

குழந்தைகளுக்கான சுகன்யா சமிரிதி யோஜனா

குழந்தைகளுக்கான சுகன்யா சமிரிதி யோஜனா

குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்க, பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.

இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு. இந்த திட்டத்திற்கு தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 9 ஆண்டு, 6 மாதங்களில் இரு மடங்காக மாறும்.

அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு பத்திரம்

அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு பத்திரம்

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.7 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Post office investment: these schemes will double your money soon

Post office savings schemes.. Post office investment: these investment schemes will double your money soon
Story first published: Thursday, May 6, 2021, 12:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X