அசத்தலான PPF திட்டம்.. அக்கவுண்ட் ஹோல்டர் இறப்புக்கு பிறகு எப்படி க்ளைம் செய்வது.. விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசின் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் மிக வரவேற்பை பெற்றது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான்.

 

ஏனெனில் இது மக்களின் முதுமை காலத்திற்கு ஏற்ற ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. அதோடு நிரந்தர வருமானம் உள்ள அரசின் ஒரு சிறந்த திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

திபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில்.. இந்திய எல்லைக்கு அருகில் அமைத்த சீனா..!

அதுவும் குறைந்த ரிஸ்க், அரசின் ஒரு பாதுகாப்பான திட்டம், கணிசமான வருவாய் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா? என்னதான் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் பலருக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அது அரசின் திட்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பர்.

அரசின் அம்சமான திட்டம்

அரசின் அம்சமான திட்டம்

இப்படி எல்லா அம்சங்களும் பொருந்திய நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இது ஒரு நல்ல திட்டம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைத்து வருகின்றது.

எவ்வளவு பங்களிப்பு செய்யலாம்?

எவ்வளவு பங்களிப்பு செய்யலாம்?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம்.

இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ளலாம்.

குழந்தைகளின் பேரில் தொடங்கிக் கொள்ளலாமா?
 

குழந்தைகளின் பேரில் தொடங்கிக் கொள்ளலாமா?

மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும்.

இந்த கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம்.

என்னென்ன ஆவணங்கள்?

என்னென்ன ஆவணங்கள்?

பார்ம் ஏ (FORM A)வினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-A_%20(PPF%20OPENING).pdf). பதிவிறக்கம் செய்யப்பட்ட பார்ம், இதனுடன் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், போட்டோ மற்றும் நாமினேஷன் பார்ம் (FORM E) (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-E_(PPF%20NOMINATION).pdf) இதனையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் அல்லது அஞ்சலகங்களில் கொடுக்கலாம்.

அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால் க்ளைம்?

அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால் க்ளைம்?

துரதிஷ்டவசமாக ஒரு வேளை பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் பார்ம் ஜி (FORM G - https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-G_(PPF%20DECEASED%20CLAIM).pdf) கொடுக்க வேண்டியிருக்கும்.

ஆபத்தான நோய் & உயர் கல்விக்காக எடுக்கலாம்

ஆபத்தான நோய் & உயர் கல்விக்காக எடுக்கலாம்

பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டரின் நாமினி அல்லது சார்புடையவர்கள் (குழந்தைகள்) உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால், அந்த சமயத்தில் பிபிஎஃப்-பில்; உள்ள முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதே அக்கவுண்ட் ஹோல்டருக்கோ அல்லது அவரின் குழந்தைகளுக்கோ உயர் கல்வித் தேவைக்காக பணம் தேவைப்பட்டால், பிபிஎஃப் கணக்கினை மூட அனுமதிக்கப்படுகிறது.

கணக்கினை முடிக்க என்னென்ன ஆவணங்கள்?

கணக்கினை முடிக்க என்னென்ன ஆவணங்கள்?

இதற்கான சரியான ஆவணங்களை கொடுத்து கணக்கினை முடித்துக் கொள்ளலாம். அது இந்தியாயாவகாக இருந்தாலும் சரி, வெளி நாடாக இருந்தாலும் சரி, கணக்கினை முடித்துக் கொள்ள சரியான ஆவணத்தினை கொடுத்தால் போதுமானது. அக்கவுண்ட் ஹோல்டர் வேறு நாட்டிற்கு சென்றால், பாஸ்போர்ட், விசா அல்லது வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம்

பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம்

உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் டிசம்பர் 15, 2005 அன்று கணக்கினை தொடங்கினாலும், மார்ச் 31, 2006லிருந்து தான் உங்களது 15 வருடம் தொடங்கும். உங்களது கணக்கு முதிர்வடையும் நாள் ஏப்ரல் 1, 2021 ஆக இருக்கும்.

இடையில் பணம் எடுக்க முடியாதா?

இடையில் பணம் எடுக்க முடியாதா?

பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?

முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?

இந்த பொது வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளருக்கு நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக மீண்டும் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம்.

இன் ஆக்டிவ் அக்கவுண்டினை என்ன செய்யலாம்?

இன் ஆக்டிவ் அக்கவுண்டினை என்ன செய்யலாம்?

உங்களது கணக்கினை இன் ஆக்டிவில் இருந்து பின்னர் ஆக்டிவாக செயல்படுத்தி கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ அல்லது அஞ்சலகத்திலோ ஒரு எழுத்துபூர்வமான கோரிக்கையை கொடுக்க வேண்டும். அதோடு செயல்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா?

கணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா?

பிபிஎஃப் வைப்பு நிதி கணக்கினை வங்கியில் இருந்து அஞ்சலகத்திற்கு மாற்றலாம். ஒரு வங்கியின் கிளையிலிருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதோடு கணக்கினை தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் மூடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதன் பிறகு சில காரணங்களினால் கணக்கினை மூடிக்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Public provident fund: how do you withdraw amount after ppf account holder death? Check detail

PPF account updates.. Public provident fund: how do you withdraw amount after ppf account holder death? Check detail
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X