வட்டி மிக குறைவு.. உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க பிஎன்பி தான் சரியான சாய்ஸ்.. எவ்வளவு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை கால பருவத்தினை ஒட்டி பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. ஆக இது உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க சரியான நேரம் எனலாம்.

 

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்கான நிதியினை கையில் வைத்துக் கொண்டு, இந்த ஆசையை நிறைவேற்றுவது இயலாத காரியம்.

கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் அம்சங்கள்..!

ஆனால் இதற்கு மிக உதவிகரமாக இருப்பது வீட்டுக் கடன் தான். அதிலும் தற்போது வரலாறு காணாத அளவு வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், இது இன்னும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று நாம் பார்க்கவிருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டி விகிதத்தினை பற்றி தான்.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

வீடு என்றவுடனே பலருக்கும் சவாலான விஷயமாக இருப்பது நிதி பிரச்சனை தான். கொரோனாவினால் சரிந்துள்ள பொருளாதாரத்தினை மீட்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ள நிலையில், பஞ்சாப் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 5 அடிப்படை புள்ளிகள் நவம்பர் 4 அன்று குறைத்துள்ளது.

எப்போது முதல் அமல்?

எப்போது முதல் அமல்?

இதன் மூலம் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் குறையலாம். இந்த வட்டி விகிதம் நவம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பண்டிகை காலத்தினை முன்னிட்டு வட்டி விகிதமானது குறைக்கப்பட்டிருந்தது.

வீட்டுக் கடன் வட்டி
 

வீட்டுக் கடன் வட்டி

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. தற்போதைய வட்டி விகிதம் என்பது 6.50%ல் இருந்து ஆரம்பமாகிறது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 17 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆர் எல் எல் ஆர் விகிதத்தினை 6.80%ல் இருந்து 6.55% ஆக குறைத்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

கார் கடன் விகிதம்

கார் கடன் விகிதம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடன் மட்டும் அல்ல, கார் கடனுக்கான வட்டி விகிதம் 6.65% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக குறைந்த வட்டியில் கார் வாங்க இது தான் சரியான வாய்ப்பு எனலாம். மேற்கண்ட இந்த கடன்களுக்கான விவரங்கள் பற்றி அறிய 1800 - 180 - 5555 என்ற எண்ணுக்கு அழைத்தும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இது சரியான நேரம்

இது சரியான நேரம்

வங்கிகள் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், தொடர்ந்து பல சலுகைளை வாரி வழங்கி வருகின்றன. பல முன்னணி வங்கிகளிலும் தற்போது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. கூடவே விற்பனை இல்லாமல் டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறையில், தற்போது விலையும் சற்று குறைந்துள்ளது. ஆக மொத்தத்தில் உங்கள் கனவு இல்லத்தை கட்ட, வாகனம் வாங்க இது தான் சரியான நேரம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Punjab national bank cuts lending rate to 6.50% home loan car loans to become cheaper

Banks latest updates.. Punjab national bank cuts lending rate to 6.50% home loan car loans to become cheaper/ வட்டி மிக குறைவு.. உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க பிஎன்பி தான் சரியான சாய்ஸ்.. எவ்வளவு தெரியுமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X