இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குச் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் குறிப்பாகக் கடன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகவும் எளிய முறையில் கடன் அளிக்க உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் மாற்றம்.. ஏப்ரல் 4 முதல் அமல்.. கவனமா இருங்கப்பு!

PNB இன்ஸ்டா லோன்
PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட திட்டம் தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சுமார் 8 லட்சம் ரூபாய் தொகையைத் தனிநபர் கடன் வேண்டுபவர்களுக்கு அளிக்க உள்ளது. இந்தக் கடனை பெற வெறும் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும் என்பது தான் கூடுதல் சிறப்பு.

8 லட்சம் ரூபாய் கடன்
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தச் சிறப்பு வாய்ந்த PNB இன்ஸ்டா லோன் குறித்துத் தனது டிவிட்டர் கணக்கிலும் தெரிவித்து இருந்தது. இந்தக் கடனை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொபைல் செயலியான PNB One வாயிலாகப் பெறலாம் அல்லது 18001808888 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்தும் பெற முடியும்.

யாருக்கு லாபம்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த 8 லட்சம் ரூபாய் எளிய கடனை மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எளிதாகப் பெற முடிவது மட்டும் அல்லாமல் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாகக் கல்வி செலவுகள், திருமணச் செலவுகள், 2வது ஹனிமூன், வெளிநாட்டு சுற்றுலா, கார், பைக், நகைகள் வாங்குவதற்குக் கூடப் பயன்படுத்த முடியும்.

வாங்குவது எப்படி
நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த 8 லட்சம் ரூபாய் எளிய கடன் பெற விண்ணப்பிக்க விரும்பினால், இணைப்பைப் பின்தொடரவும், அதாவது https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#! இங்கே சென்று நேரடியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

தனிநபர் கடன்
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோனுக்கான வட்டி விகிதத்தின் முழு விபரம், மறக்காமல் பஞ்சாம் நேஷ்னல் வங்கியின் வட்டி விகிதத்தைப் பாருங்க.
- HDFC வங்கி : 10.5% - 21.00%
- சோழா-வின் டர்போலோன் : 15.00% (fixed)
- யெஸ் வங்கி : 13.99% - 16.99%
- சிட்டி பேங்க் : 9.99% - 16.49%
- கோட்டக் மஹிந்திரா வங்கி : 10.25% மேல்
- ஆக்சிஸ் வங்கி : 12% - 21%
- இண்டஸ்இந்த் வங்கி : 11.00% - 31.50%
- எச்எஸ்பிசி வங்கி : 9.75% - 15.00%
- IDFC முதல் வங்கி : 12% - 26%
- டாடா கேபிடல் : 10.99% முதல்
- ஹோம் கிரெடிட் கேஷ் லோன் : 19% - 49%
- உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி : 11.49% - 16.49%
- ஆதித்யா பிர்லா தலைநகர் : 14% -26%
- பாரத ஸ்டேட் வங்கி : 9.60% - 15.65%
- கர்நாடக வங்கி : 12% - 17%
- பேங்க் ஆஃ பரோடா : 10.50% - 12.50%
- பெடரல் வங்கி : 10.49% - 17.99%
- ஐஐஎஃப்எல் : 24% முதல்
- பேங்க் ஆஃப் இந்தியா : 10.75% - 12.75%
- புல்லர்டன் இந்தியா : 11.99% - 36% p.a
- ஐடிபிஐ வங்கி : 8.30% - 11.05%
- கரூர் வைஸ்யா வங்கி : 9.40% - 19.00%
- சவுத் இந்தியன் வங்கி : 10.25% - 14.15%
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி : 9.30% - 10.80%
- ஆர்பிஎல் வங்கி : 14% - 23%
- பஞ்சாப் நேஷனல் வங்கி : 8.95% - 14.50%
- மகாராஷ்டிரா வங்கி : 9.55% - 12.90%
- இந்திய மத்திய வங்கி : 9.85% மேல்
- சிட்டி யூனியன் வங்கி : 11.25%
- தனலக்ஷ்மி வங்கி : 11.90% - 15.7%
- ஜே & கே வங்கி : 11.80% மேல்