பட்ஜெட் குடும்பத்திற்கான ஜியோ ஆஃபர்.. கூடுதலாக 28ஜிபி டேட்டா..! #Tips

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாத சம்பளத்தில் பட்ஜெட் போட்டுக் குடும்பத்தை நடத்தும் அனைவருக்கும் விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பாக உள்ளது. உணவு பொருட்கள் முதல் அனைத்து சேவைகளின் விலையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும், பெறும் போதும் குடும்பப் பட்ஜெட்-ல் துண்டு விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது நடுத்தரக் குடும்பங்கள்.

 

இப்படிக் கோடு போட்டுக் குடும்பத்தை நடத்தும் அனைவருக்கும் தற்போது அத்தியாவசியமாக மாறியுள்ள டெலிகாம் சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ள 20-25 சதவீத கட்டண உயர்வு பெறும் சுமையாக உள்ளது.

இந்த நிலையில் ஜியோ நிறுவனத்தின் டெலிகாம் சேவையைப் பயன்படுத்தும் பலருக்கு 20 ரூபாய் குறைவான கட்டணத்தைச் செலுத்தி அதிகப்படியான லாபம் கிடைக்கும் ஒரு திட்டம் பற்றித் தெரிவது இல்லை. இதைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

 டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகக் கட்டணத்தைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதில் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் என எந்த ஒரு நிறுவனமும் விதிவிலக்கல்ல.

 நடுத்தரக் குடும்பங்கள்

நடுத்தரக் குடும்பங்கள்

இதனால் நடுத்தரக் குடும்பங்கள் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டு முக்கியமான திட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கவிருக்கிறோம்.

 ஜியோவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்
 

ஜியோவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும், அதன்படி மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதிவேக இண்டர்நெட் டேட்டா தீர்ந்த பிறகு 64 Kbps வேகத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்கும். வேலிடிட்டி பொறுத்த வரையில் இந்த 479 ரூபாய் திட்டத்திற்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

 

 ஜியோவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

இதேபோல் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.499 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வரம்பை அடைந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ்கால் வசதி உள்ளது. இந்தத் திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே என்பது தான் பிரச்சனை.

இதே நேரத்தில், இந்தத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு Disney + Hotstar சந்தா வழங்கப்படுகிறது, இது தான் ஜியோவின் 499 திட்டத்தின் மிகப்பெரிய நன்மையாகும்.

 20 ரூபாய் வித்தியாசம்

20 ரூபாய் வித்தியாசம்

ஜியோ நிறுவனத்தின் இவ்விரு திட்டங்களுக்கு வெறும் 20 ரூபாய் மட்டுமே வித்தியாசம், ஆனால் டேட்டா மற்றும் வேலிடிட்டி-யில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ரூ.479 திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது, அதே சமயம் ரூ.499 திட்டமானது 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி உள்ளது.

 நன்மைகள்

நன்மைகள்

உங்களுக்கு Disney + Hotstar சந்தா வேண்டாம் என நீங்கள் நினைத்தால் 20 ரூபாய் குறைவான 479 ரூபாய் திட்டத்தில், 499 ரூபாய் திட்டத்தை விடவும் 28 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி, 28 ஜிபி இண்டநெட் டேட்டா இலவசமாகக் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio 479 plan, Good for budget families to save money

Reliance Jio 479 plan, Good for budget families to save money பட்ஜெட் குடும்பத்திற்கான ஜியோ ஆஃபர்.. கூடுதலாக 28ஜிபி டேட்டா..! #Tips
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X