ரூ.3.45 கோடி கார்பஸ்.. மாதம் ரூ.1.15 லட்சம் பென்சன்.. எவ்வளவு முதலீடு.. எந்த திட்டத்தில் செய்யலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய ஓய்வூதிய திட்டம் தனியார் ஊழியர்களுக்கு சிறந்த பென்சன் திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டாலும், 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

 

இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாதுகாப்பான திட்டமாகும்.

6-வது நாளாக வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இனியும் குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

இலக்கு சாத்தியமா?

இலக்கு சாத்தியமா?

இந்த ஓய்வூதிய திட்டத்தில் மாதம் 10,000 ரூபாய் முதலீட்டின் மூலம் ரூ.3.45 கோடி கார்பஸ்.. மாதம் ரூ.1.15 லட்சம் பென்சன்..சாத்தியமா? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த திட்டத்தில் 21 வயதில், ஒருவர் மாதம் 10,000 ரூபாய் முதலீட்டினை செய்யத் தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் அவர்களது இலக்கினை அடைய முடியும். ஆக ஆரம்ப காலத்திலேயே முதலீடு செய்ய தொடங்கினால் மட்டுமே இது சாத்தியம்.

கணக்கீடு இது தான்

கணக்கீடு இது தான்

ஒரு இளம் முதலீட்டாளர் தனது பணியினை தொடங்கும் காலத்திலேயே, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அதன் மூலம் அவரின் 60 வயது வரையில் முதலீடு செய்தால் 39 ஆண்டுகள் முதலீடு செய்திருப்பார்.

மாதம் முதலீடு - ரூ.10,000 (ஆண்டுக்கு ரூ.1,20,000)

39 ஆண்டுகள் முதலீடு செய்தால் - ரூ.46.80 லட்சம்

வருமானம் - சுமார் 10%

மொத்த கார்ப்பஸ் - 5.76 கோடி ரூபாய்

வருடாந்திர திட்டத்திற்கு - 40%

வருடாந்திர திட்டத்தில் வருவாய் - 6%

மாத பென்சன் - ரூ.1.15 லட்சம்

(இந்த கணக்கீடு ஒவ்வொரு கால்குலேட்டரருக்கும் சற்று மாறுபடும். இது ஒரு சுமாரான கணக்கீடு தான்.)

 பெறப்படும் தொகை (Lump sum amount) எவ்வளவு?
 

பெறப்படும் தொகை (Lump sum amount) எவ்வளவு?

உங்களது கார்பஸ் 5.76 கோடி ரூபாயில் Lump sum தொகையாக 3.45 கோடி ரூபாய் கிடைக்கும். இதே 2.30 கோடி ரூபாய் வருடாந்திர தொகையாக இருக்கும். இதன் மூலம் முதலீட்டாளர் 60 வயதிற்கு பிறகு, மாதம் 1,15,217 ரூபாய் ஓய்வூதியமாக மாத மாதம் பெறலாம். இதே உங்களது வருடாந்திர தொகை அதிகரிக்கும்போது, இன்னும் உங்களின் பென்சன் தொகையும் அதிகரிக்கும்.

வயது வரம்பு எவ்வளவு?

வயது வரம்பு எவ்வளவு?

18 வயது முதல் 65 வரையிலானவர்கள் யார் வேண்டுமானாலும், இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

.இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக 80CCD(1B)ன் கீழ் 50,000 வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு கிடைக்குமிது 80சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான சலுகையும் கிடைக்கும். அதோபோல் முதிர்வுக்கு பிறகு கிடைக்கும் 60% Lump sum தொகைக்கு வரி கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 3.45 crore corpus, Rs 1.15 lakh pension per month, how much investment should be made in NPS

Rs 3.45 crore corpus, Rs 1.15 lakh pension per month, how much investment should be made in NPS / ரூ.3.45 கோடி கார்பஸ்.. மாதம் ரூ.1.15 லட்சம் பென்சன்.. எவ்வளவு முதலீடு.. எந்த திட்டத்தில் செய்யலாம்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X