மாதம் ரூ.50,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணியில் இருந்து ஒய்வுபெறும் காலத்தில் கட்டாயம் யாரும் யாரையும் நம்பி வாழ விரும்பமாட்டார்கள், இந்த எண்ணம் உங்களுக்கும் இருந்தால் இப்போதே ஓய்வுக் காலத்திற்குத் தேவையான பணத்தைச் சேமிக்கத் துவங்குங்கள்.

 

சரி எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது, எந்த நிறுவனம் நம்பகமாக இருக்கும் போன்ற எந்தக் குழப்பம் உங்களுக்கு வேண்டாம், உங்களுக்கு இந்தச் செய்தி முழு வழிகாட்டியாக இருக்கும். ஓய்வுகாலத்தில் காட்டாயம் மருத்துவச் செலவுகள் இருக்கும், இதைத் தவிர உணவு, இருக்க இடம், போக்குவரத்து எனப் பல முக்கியச் செலவுகள் இருக்கும் காரணத்தால் உறுதியான தொகை ஓய்வூதியமாகப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

இதனால் நாம் தேர்ந்தெடுக்கும் முதலீட்டுத் திட்டமும் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

நின்ஜாகார்ட்: பிளிப்கார்ட், வால்மார்ட் போட்டிப்போட்டு முதலீடு செய்த பெங்களூரு ஸ்டார்அப்..!

 National Pension Scheme

National Pension Scheme

அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு சிறப்பான முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது, National Pension Scheme (NPS) என்னும் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு நிலையான வருமானம் கிடைக்கும்.

 பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை

பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை

இந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்ய முடியும். இதனால் இளம் முதலீட்டாளர்கள் சிறிய முதலீட்டுத் தொகை உடன் அதிகப்படியான ஓய்வூதிய தொகையை ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.

விலைவாசி
 

விலைவாசி

தற்போதைய விலைவாசியைக் கணக்கிடும் போது மாதம் 50000 ரூபாய் இருந்தால் மட்டுமே ஓய்வுக் காலத்தில் வாழ்க்கை எவ்விதமான நிதி நெருக்கடியும் இல்லாமல் இருக்க முடியும் என நம்பப்படுகிறது. இளம் வயதில் NPS போன்ற முதலீட்டுத் திட்டத்தில் நீங்க முதலீடு செய்யத் தவற விட்டாலும், 35 வயதாகும் ஒருவர் எவ்விதமான சுமையும் இல்லாமல் மாதம் 50000 ரூபாய் பென்ஷன் பெறும் வாய்ப்பு உள்ளது.

 35 வயதாகும் ரகுவரன்

35 வயதாகும் ரகுவரன்

35 வயதாகும் ரகுவரன் மாதம் 15,000 ரூபாய் தொகையை நேஷ்னல் பென்ஷன் திட்டத்தில் 60 வயது வரையில் அதாவது 25 வருடம் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம்.

NPS திட்டத்தில் மாத முதலீடு : 15000 ரூபாய்
25 வருடத்திற்கு முதலீட்டுத் தொகை : 45 லட்சம் ரூபாய்
சராசரியாக முதலீட்டில் கிடைக்கும் வருமானம் : 10 சதவீதம்
25 வருடத்திற்குப் பின் கிடைக்கும் முதிர்வு தொகை : 2.0 கோடி ரூபாய்

 Annuity purchase அளவீடு

Annuity purchase அளவீடு

இதில் Annuity purchase என்ற ஒன்று உள்ளது. அதாவது NPS திட்டம் முதிர்வு அடைந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு முதலீடு செய்துகொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும், இதில் குறைந்தபட்ச அளவு 40 சதவீதம்.

 மாதம் 50,171 ரூபாய் பென்ஷன்

மாதம் 50,171 ரூபாய் பென்ஷன்

எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் இந்த அளவீட்டை அதிகரிக்கிறீர்களோ அந்த அளவிற்கு மாத பென்ஷன் தொகை அதிகமாகக் கிடைக்கும். அந்த வகையில் தற்போது ரகுவரன் Annuity purchase அளவீட்டை 50 சதவீதமாக நிர்ணயம் செய்தால், அதற்கு 6 சதவீதம் வட்டி அடிப்படையில் 60 வயதிற்குப் பின்பு மாதம் 50,171 ரூபாய் பென்ஷன் ரகுவரனுக்குக் கிடைக்கும்.

 ரூ.2.0 கோடி முதிர்வு தொகை

ரூ.2.0 கோடி முதிர்வு தொகை

இதுமட்டும் அல்லாமல் 60 வயதாகும் போது முதிர்வு தொகையான 2.0 கோடி ரூபாயில் 50 சதவீதம் Annuity purchase அடிப்படையில் 1 கோடி ரூபாய் மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும், மீதமுள்ள 1 கோடி ரூபாய் தொகையை அரசு முதலீடு செய்து அதற்கு 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் 50,171 ரூபாயை பென்ஷனாகப் பெறுவார் ரகுவரன்.

 வருமான வரிச் சலுகை

வருமான வரிச் சலுகை

என்பிஎஸ் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுடையவர்கள் முதலீடு செய்யலாம், இந்த முதலீட்டுத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80CCD(1B) பிரிவில் கீழ் வருடம் 50000 ரூபாய் வரையில் வரிச் சலுகை கிடைக்கிறது. இது 80C பிரிவில் கிடைக்கும் 1,50,000 லட்சம் ரூபாய்க்கு அப்பாற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Safest retirement scheme-NPS: Easy way to earn Rs 50,000 pension per month

Safest retirement scheme-NPS: Easy way to earn Rs 50,000 pension per month மாதம் ரூ.50,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!
Story first published: Tuesday, December 21, 2021, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X