சம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

 

ரிசர்வ் வங்கி தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியமைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இனி எல்லா நாட்களும்

இனி எல்லா நாட்களும்

அதாவது, இப்போது நீங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கடந்து செல்ல காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். அதாவது NACH வசதிகள் இப்போது முழு வாரமும் கிடைக்கும்.

காத்திருக்க வேண்டிய அவசியம்

காத்திருக்க வேண்டிய அவசியம்

பொதுவாக பலமுறை மாதத்தின் முதல் நாள் வார இறுதியில் வருவது வழக்கம். இதன் காரணமாக சம்பளம் பெறும் சம்பளதாரர்கள் தங்கள் சம்பளக் கணக்கில் வரவுக்காக அடுத்த வேலை நாட்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

கடந்த மாதம் அறிவிப்பு
 

கடந்த மாதம் அறிவிப்பு

கடந்த மாதம் ஜூன் மாத கடன் கொள்கை மறுஆய்வின் போது, வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்கும், 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ், நன்மைகளைப் பெறுவதற்கும், தற்போது வங்கி வேலை நாட்களில் மட்டும் இயக்கத்தில் உள்ள NACH, இனி வாரம் முழுவதும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

பயனுள்ளதாக இருக்கும்

பயனுள்ளதாக இருக்கும்

ஆக சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, ஆகஸ்ட் 1ல் இருந்து சம்பளம், ஓய்வூதியம், ஈ.எம்.ஐ கட்டணம் போன்றவற்றை இப்போது வார இறுதி நாட்களிலும் பெற முடியும்

NACH என்பது NPCIல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டமாகும். ஆக ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் விடுமுறை நாட்களிலும் இந்த சேவை இயங்கும் என்பதால், பலருக்கும் மிக உபயோகமானதாக இருக்கும்.

ஊழியர்களுக்கு பயன் தான்

ஊழியர்களுக்கு பயன் தான்

இது ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஆர்டிஜிஎஸ் சேவை கிடைப்பதை போல, NACH சேவையும் அனைத்து நாட்களும் கிடைக்கும் வகையில் தான் முன்மொழியப்பட்டுள்ளது.

பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் என்பது விடுமுறை நாள் வந்துவிட்டாலே, அடுத்த வேலை நாளில் தான் அனுப்புவார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் பல லட்சம் ஊழியர்கள் தங்களது சம்பளத்தினை வார இறுதி நாட்களிலும் பெறுவர். சம்பளம் மட்டும் அல்ல, டிவிடெண்ட் போன்ற பலவற்றையும் இனி முன்னதாக பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salary, pension and bank EMIs rule to change from august 1, 2021; check details here

RBI changed the rules of the NACH; these changes will come into effect from August 1, 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X