10 வருடத்தில் 4 மடங்கு லாபம்.. வரி சலுகையும் உண்டு.. இதை விட வேற என்ன வேண்டும்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ELSS ஃபண்டுகள் என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் வரி சலுகை திட்டமாகும். இந்த திட்டத்தில் வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்யப்படும் வரிச்சலுகையும் உண்டு.

 

பொதுவாக இந்த மாதிரியான வரிச்சலுகை பெறும் திட்டங்களில் லாக் இன் காலம் உண்டு. அந்த காலம் வரையில் முதலீட்டினை வெளியே எடுக்க முடியாது. ஆனால் இந்த ELSS திட்டங்களில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகாலம் மட்டுமே.

ELSS திட்டங்களில் பெறப்படும் முதலீடானது பெரும்பாலும் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும். சிறிய அளவிலான தொகை மட்டும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நீண்டகால நோக்கில் இந்த திட்டங்கள் நல்ல வருவாயை கொடுக்க கூடியவை. எனினும் மீடியம் டெர்மில் சற்று ரிஸ்க் உள்ளதாக கருதப்படுகிறது.

குறுகிய கால மூலதன ஆதாய வரி

குறுகிய கால மூலதன ஆதாய வரி

இந்த திட்டத்தினை பொறுத்தவரையில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. சரி இந்த திட்டங்களில் வரி விகிதம் எப்படி வாருங்கள் பார்க்கலாம். நீங்கள் செய்யும் முதலீடு லாபமாக இருந்து, அதனை முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் வெளியேற்றினால் குறுகிய கால மூலதன ஆதாயமாக (STCG) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான வரி விகித 15% ஆக உள்ளது. இதே ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கபப்டும் தொகை நீண்டகால மூலதன ஆதாயமாக கருதப்படும்.

நீண்டகால மூலதன ஆதாயம்

நீண்டகால மூலதன ஆதாயம்

நீண்டகால மூலதன ஆதாயமாக கருதப்படும் தொகையானது 1 லட்சத்திற்கும் மேலாக இருந்தால், அந்த தொகைக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனினும் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை. மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை திறந்த வெளி பண்டுகளுக்கு முதிர்வு தொகை என எதுவும் இல்லை. பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நாம் வெளியேற முடிவெடுக்கும் போது, அன்றைய நாளில் உள்ள மதிப்பு அதன் லாப நஷ்டத்தினை தீர்மானிக்கும்.

லட்சங்களில் லாபம்
 

லட்சங்களில் லாபம்

அந்த வகையில் நாம் இன்று சில இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளை பார்க்கவிருக்கிறோம். இந்த ஃபண்டுகள் பிப்ரவரி 10, 2011 அன்று, நிலவரப்படி 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு 4 லட்சத்திற்கும் மேல். இது ஏற்கனவே லாபம் கொடுத்த ஃபண்டுகள் என்றாலும், இது அடுத்ததாக நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது உங்களுக்கு ஒரு ஐடியாவினை கொடுக்கும்.

AXIS long term equity fund லாப விகிதம்

AXIS long term equity fund லாப விகிதம்

AXIS long term equity fund-ன் அண்மையிலான AUM மதிப்பு 27,181 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஃபண்டின் 3 ஆண்டு CAGR லாப விகிதம் 15.40%, 5 ஆண்டில் CAGR லாப விகிதம் 16.75%, 10 ஆண்டில் CAGR லாப விகிதம் 18.64% ஆகவும் பெருக்கியுள்ளது. இந்த ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பு 5,53,204 ரூபாயாகும்.

Invesco india tax plan எவ்வளவு?

Invesco india tax plan எவ்வளவு?

Invesco india tax plan-ன் அண்மையிலான AUM மதிப்பு 1,377 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஃபண்டின் 3 ஆண்டு CAGR லாப விகிதம் 12.70%, 5 ஆண்டில் CAGR லாப விகிதம் 16.58%, 10 ஆண்டில் CAGR லாப விகிதம் 15.69% ஆகவும் உருவாக்கியுள்ளது. இந்த ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பு 4,29,890 ரூபாயாகும்.

DSP tax saver fundல் லாபம்

DSP tax saver fundல் லாபம்

DSP tax saver fund-ன் அண்மையிலான AUM மதிப்பு 7,332 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஃபண்டின் 3 ஆண்டு CAGR லாப விகிதம் 11.82%, 5 ஆண்டில் CAGR லாப விகிதம் 17.64%, 10 ஆண்டில் CAGR லாப விகிதம் 15.43% ஆகவும் உருவாக்கியுள்ளது. இந்த ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு 4,20,492 ரூபாயாகும்.

BNP Paribas long term equity fund எவ்வளவு லாபம்?

BNP Paribas long term equity fund எவ்வளவு லாபம்?

BNP Paribas long term equity fund-ன் அண்மையிலான AUM மதிப்பு 476 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஃபண்டின் 3 ஆண்டு CAGR லாப விகிதம் 11.82%, 5 ஆண்டில் CAGR லாப விகிதம் 17.64%, 10 ஆண்டில் CAGR லாப விகிதம் 15.43% ஆகவும் உள்ளது. இந்த ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 4,15,129 ரூபாயாகும்.

IDFC tax advantage fund நிலவரம்

IDFC tax advantage fund நிலவரம்

IDFC tax advantage fund-ன் அண்மையிலான AUM மதிப்பு 2,678 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஃபண்டின் 3 ஆண்டு CAGR லாப விகிதம் 8.38%, 5 ஆண்டில் CAGR லாப விகிதம் 16.74%, 10 ஆண்டில் CAGR லாப விகிதம் 15.05% ஆகவும் உள்ளது. இந்த ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் செய்திருந்தால், இன்றைய அதன் மதிப்பு சுமார் 4,06,705 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Save tax and growth your wealth: Rs.1 lakh invested these ELSS funds grow up to Rs.6 lakhs in 10 years

Investment latest updates.. Save tax and growth your wealth: Rs.1 lakh invested these ELSS funds grow up to Rs.6 lakhs in 10 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X