எஸ்பிஐ கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மலிவான வட்டியில் வீட்டுக்கடன்.. எப்படி பயன் பெறுவது.. விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

 

எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும்போது தான், இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலும், வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி

வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தரப்பில் வெளியான அறிக்கையில், ஏற்கனவே 100% செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் எஸ்பிஐ பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, 30 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனிற்கு, வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

முந்தைய சலுகை

முந்தைய சலுகை

இது முன்பு 10 அடிப்படை புள்ளிகளாக வழங்கப்பட்டு வந்தது. அதோடு முன்பு மூன்று கோடி வரையிலாக வீட்டுக்கடனுக்கு 8 மெட்ரோ நகரங்களில் 10 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்கப்பட்டும் வந்தது. இந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இதில் கூடுதலாக யோனோ ஆப் மூலம் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் அளிக்கப்பட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச வட்டி விகிதம்
 

குறைந்தபட்ச வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கி தற்போது 30 லட்சம் ரூபாய் வரை 6.90 சதவீதம் என குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகும். அதோடு வாடிக்கையாளர்கள் இந்த வீட்டுக்கடன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலும் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை வரை சலுகை பெற முடியும்.

தொடர்ந்து சலுகை

தொடர்ந்து சலுகை

எஸ்பிஐ-யின் நிர்வாக அதிகாரி சி.எஸ்.ஷெட்டி இது குறித்து கூறுகையில், எஸ்பிஐயின் மலிவான வீட்டுக் கடன் மூலம், வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவை நனவாக்க முடியும். இப்போது நாடு கோவிட் -19 க்கு பிந்தைய சுற்றுக்கு தயாராகி வருகிறது. நுகர்வோர் தேவை இப்போது மேம்பட்டு வருகிறது. இதனால் எஸ்பிஐ தொடர்ந்து தனது சலுகைகளை வழங்கி வருகின்றது.

கடந்த மாதமே பல சலுகைகள்

கடந்த மாதமே பல சலுகைகள்

எஸ்பிஐ கடந்த மாதமே வங்கி தனது சில்லறை கடன் வாடிக்கையாளர்களுக்காக பல பண்டிகை கால சலுகைகளை அறிவித்தது. இதன் கீழ், யோனோ செயலி மூலம் கார், தங்கம் அல்லது தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செயலாக்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதோடு வட்டி விகிதங்களிலும் பல சலுகைகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI announces festival season interest rate concession up to 25 bps on home loans

State bank of india announces festival season interest rate concession up to 25 bps on home loans, check here full details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X