கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிர்ணயிக்க பயன்படும் MCLR விகிதத்தினை, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இது ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
எஸ்பிஐ-யின் இந்த வட்டி அதிகரிப்பு நடவடிக்கை காரணமாக ஹோம் லோன், கார் லோன் உள்ளிட்ட பல கடன்களுக்கான மாத தவணை தொகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோம் லோன்: எஸ்பிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் இதுதான்..!

MCLR என்றால் என்ன?
MCLR விகிதம் என்பது Marginal Cost ofFunds Based Lending Rates என்பார்கள். இது வங்கிகள் நுகர்வோர் கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ஒரு உட்புற குறிப்பு விகிதமாகும். இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன் மற்றும் புதிய கடன்களுக்கும் வட்டி விகிதம் மாறும்.

மீடியம் டெர்மில் என்ன விகிதம்
இது குறித்து எஸ்பிஐ தனது அதிகாரபூர்வ அறிப்பினை அதன் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஓவர் நைட், ஒரு மாதம் மற்றும் மூன்று மாத தவணைகளுக்கும் எம் சி எல் ஆர் விகிதம் 6.65%ல் இருந்து 6.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே ஆறு மாதங்களுக்கான எம் சி எல் ஆர் விகிதம் 6.95 சதவீதத்தில் இருந்து, 7.05 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால கால கடனுக்கு MCLR விகிதம்
இதே ஒரு வருடத்திற்காக விகிதம் 7ல் இருந்து 7.10 சதவீதமாகவும், இதே இரண்டு வருடத்திற்கு 7.20 சதவீதத்தில் இருந்து, 7.30 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே மூன்று ஆண்டுகளுக்கான விகிதம் 7.30 சதவீதத்தில் இருந்து, 7.40 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா
கடந்த வாரத்தில் பேங்க் ஆப் பரோடா அதன் எம் சி எல் ஆர் விகிதத்தினை அதிகரித்தது. இது 0.05 சதவீதம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ஏப்ரல் 12 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது இவ்வங்கி பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் ஒரு வருடத்திற்கான விகிதமானது 7.35% ஆகவும் இதே ஓவர் நைட், ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம், ஆறு மாதங்களுக்கான விகிதம் முறையே 6.50%, 6.95% மற்றும் 7.10%, 7.20% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை என்ன?
வங்கிகளின் இந்த அறிவிப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் மாத தவணை விகிதத்தில் கூடுதலாக இன்னும் செலுத்த வேண்டியிருக்கும். எஸ்பிஐயின் இந்த முடிவால், இனி அடுத்தடுத்து மற்ற வங்கிகளும் இதனை அதிகரிக்க முடிவு எடுக்கலாம். மொத்தத்தில் கடன் வாங்கியோருக்கும் இன்னும் சுமை அதிகரிக்கலாம்.

இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?
SBI-யின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் தற்போது 2.36% குறைந்து, 505.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 515 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 505 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 549 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 321.30 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் 2.20% குறைந்து, 506.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்ச விலை 515.10 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 505 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 549.05 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 321.15 ரூபாயாகும்.