வெறும் 55 பைசா வட்டியில் வீட்டு கடன்.. சொந்த வீடு வாங்க இது பொற்காலம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகள் வாராக் கடன் பிரச்சனையில் தவித்து வரும் காரணத்தால், நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதை விடவும், ரீடைல் வர்த்தகக் கடன் பிரிவில் அதிகக் கவனத்தைச் செலுத்தி வருகிறது.

அதிலும் மிகவும் பாதுகாப்பான கடன் பிரிவான ஹோம் லோன் பிரிவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் போட்டிப்போட்டு வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்து அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

 ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை
 

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைக்குப் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது மட்டும் அல்லாமல் பலவேறு நிதி பிரச்சனையின் காரணமாக முடங்கியுள்ள கட்டுமான திட்டங்களை முடிக்க வேண்டும் என்பதற்காகவும் பிரத்தியேகமாகச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

 வாராக் கடன் பிரச்சனை

வாராக் கடன் பிரச்சனை

இதேவேளையில் இந்திய வங்கிகள் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகப் பாதுகாப்பான வர்த்தகப் பிரிவு தேர்வு செய்யும் விதமாகவும், அரசின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனுக்கான வட்டியைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.

 பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்

பொதுவாகப் பொதுத்துறை வங்கிகள் தான் குறைவான வட்டியில் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றைக் கொடுக்கும். ஆனால் தற்போது பொதுத்துறை வங்கியை விடவும் தனியார் வங்கி குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது.

 சொந்த வீடு
 

சொந்த வீடு

இதனால் மக்களுக்குச் சொத்து வீடு வாங்குவதற்கு இது பொற்காலமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. வீடு வாங்கவோ அல்லது கட்டவோ நீங்கள் திட்டமிட்டு இருந்தால் உங்களுக்கு இதுதான் சரியான நேரம். மேலும் முதல் முறையாகச் சொந்து வீடு வாங்குவோருக்கு PMAY திட்டத்தின் கீழ் சலுகையும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

 வங்கிகள் போட்டி

வங்கிகள் போட்டி

வீட்டுக்கடன் பிரிவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கி போட்டிப்போட்டு வட்டியைக் குறைத்து வருகிறது. இதனால் பிற தனியார் வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்க ஆயத்தமாகியுள்ளது.

 எஸ்பிஐ வங்கியின் வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கியின் வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கியில் தற்போது 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனுக்கு 6.7 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் கடன் வழங்குகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வரலாற்றிலேயே இதுதான் மிகவும் குறைவான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 எஸ்பிஐ-யின் சிறப்புச் சலுகை

எஸ்பிஐ-யின் சிறப்புச் சலுகை

6.7 சதவீத வட்டியில் எஸ்பிஐ வங்கி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு கடன் அளிக்கிறது, ஆனால் மற்றவர்களுக்கு 6.75 சதவீதம் என்ற துவக்க நிலையில் இருந்து வீட்டுக் கடன் அளிக்கிறது. மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமான எஸ்பிஐ வீட்டு கடனுக்கான processing கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது.

 கோட்டாக் மஹிந்திரா வங்கி அதிரடி

கோட்டாக் மஹிந்திரா வங்கி அதிரடி

இதேவேளையில் எஸ்பிஐ வங்கிக்குப் போட்டியாகத் தனியார் வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கி 6.65 சதவீதத்தில் வீட்டுக் கடன் அளிப்பதாக அறிவித்துள்ளது. கோட்டாக் மஹிந்திரா வங்கி அறிவித்துள்ள இந்தக் குறைந்தபட்ச வட்டி விகிதம் புதிய கடன்களுக்கும் சரி, பேலென்ஸ் டிரான்பர் சேவைக்கும் அளிப்பதாக அறிவித்துள்ளது.

 இந்திய ரியல் எஸ்டேட் துறை

இந்திய ரியல் எஸ்டேட் துறை

இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மகாராஷ்டிரா உட்படப் பல மாநிலங்கள் பத்திர கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களில் அதிகளவிலான சலுகையை அளித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு புதிதாகச் சொந்து வீடு வாங்குவோருக்கு அளிக்கப்படும் நிதி சலுகை திட்டத்திற்குக் கூடுதலாக இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

 வட்டி நிலவரம்

வட்டி நிலவரம்

இந்நிலையில் இந்திய வங்கிகளில் தற்போது வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி அளவீடுகளின் விபரம் உங்களுக்காக

கோட்டார் மஹிந்திரா வங்கி - 6.65 சதவீதம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 6.7 சதவீதம்

ஆக்சிஸ் வங்கி - 6.75 சதவீதம்

சிட்டி வங்கி - 6.75 சதவீதம்

ஹெச்டிஎப்சி - 6.8 சதவீதம்

ஐசிஐசிஐ வங்கி - 6.8 சதவீதம்

பாங்க் ஆ பரோடா - 6.85 சதவீதம்

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் - 6.9 சதவீதம்

டிபிஎஸ் பேங்க் - 7.3 சதவீதம்

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் - 7.35 சதவீதம்

6.65 சதவீத வட்டியை ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் வெறும் 0.55 பைசா வட்டி மட்டுமே. ஒரு ரூபாய் வட்டியெனில் 12 சதவீதம் வட்டி.

 ஈஎம்ஐ கால்குலேட்டர்

ஈஎம்ஐ கால்குலேட்டர்

மேலும் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைக் கணக்கிட ஒரு எளிய வழி நம்முடைய தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் சிறப்புச் சேவை உள்ளது. 30 வருடக் கடனுக்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும், மொத்த கடன் அடைப்புத் தொகை, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு செலுத்த வேண்டும், மொத்த வட்டி தொகை கணக்கு எனப் பல முக்கியமான விஷயங்களை நொடிகளில் தெரிந்துகொள்ள முடியும்.

https://tamil.goodreturns.in/home-loan-emi-calculator.html

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI, Kotak Mahindra banks cut home loan rates to new low

SBI, Kotak Mahindra banks cut home loan rates to new low
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X