டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு, யோனோ ஆப் மூலம் இலவசமாக வருமான வரி தாக்கல் செய்து கொள்ள அனுமதிக்கிறது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன் படி எஸ்பிஐ-யில் ஆப்பான யோனோ செயலியின் வழியாக, ஆன்லைன் வருமான வரி தாக்கல் போர்டலான https://tax2win.in/ மூலம் இலவசமாக உங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் கடைசி தேதி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), கொரோனா தக்கத்தின் காரனமாக வருமான வரி தாக்கல் செய்வதற்காக கடைசி தேதியினை டிசம்பர் 31 வரை நீட்டித்திருந்தது. பொதுவாக வருமான வரி தாக்கல் செய்வோர் ஜூலை 31க்குள் செய்ய வேண்டும். ஆனால் கொரோனாவின் காரணமாக, இந்த ஆண்டு அரசு கால அவகாசத்தினை நீட்டித்தது.

எப்படி யோனோ ஆப் மூலம் ITR தாக்கல் செய்வது?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ள வேண்டும். அதில் ஷாப் & ஆர்டர் என்பதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு டேக்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதனை நீங்கள் க்ளிக் செய்யும் போது, இது நேரடியான tax2win தளத்திற்கு செல்லும்.

தேவையான விவரங்கள் கொடுக்க வேண்டும்
tax2win தளத்திற்கு சென்ற பின்னர் உங்களது வருமான வரி தாக்கல் செய்வதற்கான விவரங்களை பதிவிட வேண்டும். ஒரு வேளை உங்களது பதிவில் ஏதேனும் பிரச்சனை என்றால், உதவிக்கு 9660996655 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம். அல்லது support@tax2win.in என்ற மெயில் ஐடியினையும் தொடர்பு கொள்ளலாம்.

இது எளிதான வழி?
நாளை வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும் இந்த நிலையில், உங்களுக்கு இந்த ஆப்சன் எளிதானதாக இருக்கலாம். மியக் பயனுள்ளதாகவும் இருக்கலாம். அதோடு வெளியில் இதே சேவைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகையில், இங்கு இலவசமாகவே பதிவு செய்து கொள்ள முடியும். உண்மையில் எஸ்பிஐயின் இந்த சேவை மிக பயனுள்ளது தான். எனினும் இந்த சேவையானது எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் என்பது கவனிக்கதக்கது.