இனி வங்கிக்கு போகமலே கடன் வாங்கலாம்.. எஸ்பிஐ-யின் புதிய சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்குனரான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக நல்ல செய்தியே. இனி வங்கிகளுக்கு சென்று அலைந்து கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை.

 

அதற்கான ஏற்பாட்டினை தான் எஸ்பிஐ செய்துள்ளது. எஸ்பிஐ-யின் முன் அங்கீகரிக்கப்பட்ட (SBI's pre-approved personal loan), தனி நபர் கடனை வழங்குகிறது.

அமெரிக்காவில் புதிய மசோதா.. ஹெச்1பி விசா-வில் கடும் கட்டுப்பாடுகள்...!

இந்த வசதிகளை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதன் மொபைல் ஆப்பில் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் முன் அங்கீகரிக்கப்பட்ட தனி நபர் கடனையும் வாங்கிக் கொள்ளலாம்.

யோனோவில் தனிநபர் கடன்

யோனோவில் தனிநபர் கடன்

எஸ்பிஐ-யின் பிரபலமான மொபைல் ஆப்பான யோனோவில் கடன் பெறுவதற்கான செயல்முறை முழுவதுமாக டிஜிட்டல் முறையிலானது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளுக்கு சென்று மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது தனியார் வங்கிகளில் இந்த ஆப்சன் ஏற்கனவே இருந்தாலும், பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ இந்த வசதியை கொடுத்திருப்பது பல லட்சம் வாடிக்கையாளார்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

24 மணி நேர சேவை

24 மணி நேர சேவை

எஸ்பிஐ ஏற்கனவே யோனோ ஆப்பின் கீழ் பல சேவைகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ-யின் முன் அங்கீகரிக்கப்பட்ட இந்த கடன் வசதி 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு உகந்த நேரத்தில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கி நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

கிரெடிட் ஸ்கோரை பொருத்து கடன்
 

கிரெடிட் ஸ்கோரை பொருத்து கடன்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL வங்கியின் 4 இலக்க கடைசி நம்பரை டைப் செய்து எஸ்.எம்.எஸ் செய்து, நீங்கள் இந்த முன் அங்கீகரிக்கப்பட்ட கடனுக்கு தகுதியானவரா என்பதை சரிபார்க்கலாம். ஆக இதன் மூலம் நீங்கள் இந்த கடன் வாங்க தகுதியானவரா? என்பதை தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் தகுதியானவரா?

நீங்கள் தகுதியானவரா?

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 567676 என்ற எண்ணுக்கு PAPL வங்கியின் 4 இலக்க கடைசி நம்பரை டைப் செய்து எஸ்.எம்.எஸ் செய்து, நீங்கள் இந்த முன் அங்கீகரிக்கப்பட்ட கடனுக்கு தகுதியானவர் தான என்பதை சரிபார்க்கலாம்.

ஆக இதன் மூலம் நீங்கள் இந்த கடன் வாங்க தகுதியானவரா? என்பதை தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன சலுகைகள்

என்னென்ன சலுகைகள்

இந்த திட்டத்தில் செயல்பாட்டு கட்டணம் ஜனவரி 31, 2022 வரையில், முழுமையாக 100% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு உங்களுக்கு கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

வாடிக்கையாளார்கள் உடனடியாக இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற முடியும்.
கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் பிசிகலாக எந்த ஆவணமும் கொடுக்க தேவையில்லை. எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.
இதற்காக வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
வட்டி விகிதம் இந்த கடனுக்கு 9.60%ல் இருந்து ஆரம்பிக்கிறது. மற்ற பர்சனல் கடன்களுடன் ஒப்பிடும்போது இங்கு குறைவு தான்.

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த கடனுக்காக யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் மெனு பாரில் Avail Now என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதில் கடன் தொகை எவ்வளவு, கால அவகாசம் எவ்வளவு என்பதை தேர்தெடுக்கவும்.
அதன் பிறகு உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். உங்களது பரிவர்த்தனை, மற்ற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, சரியாக இருப்பின் விரைவில் உங்களது கடன் தொகை கிரெடிட் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI launches pre approved personal loan: check details

SBI launches pre approved personal loan: check details / எஸ்பிஐ-யின் புதிய சேவை.. இனி வங்கிக்கு போகமலே கடன் வாங்கலாம்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X