ஐந்து வருடத்தில் அள்ளிக் கொடுத்த தங்கம்! இன்னும் எதை எல்லாம் மிஸ் பண்ணிருக்கீங்க பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை ஏறும் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் இந்த தங்கத்தினால் ஏகப்பட்ட நன்மை இருக்கிறது என்றால் நம்புவீர்களா..?

 

பொதுவாக தங்கத்தில், நகை நட்டு செய்து கெத்தாக போட்டுக் கொள்ளலாம். இதைத் தாண்டி பயங்கரமாக லாபம் கொடுக்கும் என்பதை அறிவீர்களா..?

அது எப்படி..? தங்கத்தில் செய் கூலி, சேதாரம் தானே வரும்..? எப்படி லாபம் வரும்..? வாங்க பாப்போம்.

நோ செய்கூலி சேதாரம்

நோ செய்கூலி சேதாரம்

மத்திய அரசு சார்பாக ஆர்பிஐ Sovereign Gold Bond வெளியிடுகிறது. இந்த தங்க பத்திரத்தில் செய் கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. அதுவும் தங்கத்துக்கான விலையை முன்பே நிர்ணயித்து இருப்பார்கள். எனவே கண்ணை மூடிக் கொண்டு அந்த விலைக்கு தங்கத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரலாம்.

2.5 % வருமானம்

2.5 % வருமானம்

அது போக Sovereign Gold Bond-ல் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வருமானம் வேறு கொடுப்பார்கள். இப்படி நாம் வாங்கி வைத்திருக்கும் தங்க நகைகளுக்கு அல்லது தங்க காசுகளுக்கு யாராவது வட்டி கொடுப்பார்களா..? நிச்சயம் கொடுக்கமாட்டார்கள். ஆனால் இந்த தங்க பத்திரத்துக்கு கொடுக்கிறார்கள்.

விலை ஏற்றம்
 

விலை ஏற்றம்

கடந்த ஐந்து ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 72 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. ஆக எப்படி..? 2015 - 16-ல் ஒரு கிராம் தங்கத்துக்கு 2,687 ரூபாய் வசூலித்தார்கள். இன்று 2020 - 21 நிதி ஆண்டில் ஒரு கிராம் தங்கத்துக்கு 4,639 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆக 72 % விலை ஏற்றம் கண்டு இருக்கிறது தங்கம். ஆக இந்த விலை ஏற்றம் அப்படியே நமக்கு லாபமாக கிடைக்கும்.

வரி

வரி

இந்த Sovereign Gold Bond-ஐ வாங்கி 8 வருடம் வைத்திருக்க வேண்டும். 8 வருடத்துக்குப் பின் வரும் வருமானத்துக்கு எந்த வரியும் செலுத்தத் தேவை இல்லை. எனவே மக்களே, Sovereign Gold Bond வாங்குங்க. செமயா லாபம் பாருங்க. ஒருவேளை அவசரம் என்றால், வாங்கி 5 வருடத்துக்குப் பின் விற்று பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அப்போது வரி செலுத்த வேண்டி இருக்கும்.

பத்திரம் பயன்பாடு

பத்திரம் பயன்பாடு

இந்த பத்திரத்தை சாதாரண தங்கம் போல, வங்கிகளில் அடகு வைத்து கடன் கூட வாங்கலாம். தங்கத்தில் இருக்கும் எல்லா வசதிகளும் இந்த Sovereign Gold Bond பத்திரத்திலும் இருக்கிறது. எனவே தைரியமாக தங்க பத்திரத்தை வாங்கி லாபம் பார்க்கலாம்.

முழு விவரம்

முழு விவரம்

இந்த Sovereign Gold Bond-ஐ யார் வெளியிடுகிறார்கள். இந்த தங்க பத்திரத்தில் தங்கத்தின் சுத்தம் என்ன, விலை என்ன, அடுத்து 2020 - 21 நிதி ஆண்டில் எப்போது எல்லாம் வெளியிட இருக்கிறார்கள் என்கிற முழு விவரத்தை "Sovereign Gold Bond எப்படி வாங்குவது? எதை எல்லாம் கவனிக்க வேண்டும்? முழு விவரங்கள் இதோ!" என்கிற தலைப்பில் எழுதி இருக்கிறோம். அதை நிதானமாக படித்துப் பாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sovereign Gold Bond gave around 72 percent returns in the last 5 years other benefits

The Sovereign Gold Bond gave around 72 percent returns in the last 5 years and their is no making charges, no wastage and we will get 2.5 percent interest also.
Story first published: Monday, May 4, 2020, 18:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X