9.25% வரை வட்டி கொடுக்கும் FD திட்டங்கள்! மூத்த குடிமக்களுக்கு ஜாலி தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதில் தைரியமாக ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்களில் கூட டிரேட் செய்யலாம். ஆனால் 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் போடுவதே பொதுவான விதி.

 

அம்பானி மகன், அதானி மருமகன்களுக்கு எல்லாம் இது பொருந்தாது. ஆனால் நம்மைப் போன்ற சாதாரண வெகு ஜன மக்களுக்கு, இந்த விதி கச்சிதமாகப் பொருந்தும்.

நம் தாத்தா பாட்டி போன்றவர்களைத் தாண்டி, பலருடைய அம்மா அப்பாக்களே இன்று 60 வயதுக்கு மேல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கான சூப்பர் ஃபிக்ஸாட் டெபாசிட் திட்டங்கள் இது.

நல்ல முதலீடு

நல்ல முதலீடு

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் கையில் இருக்கும் ஒரு சில ஆயிரம் ரூபாய் தொடங்கி பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் பணத்தில் ஏதாவது வருமானம் பார்க்க வேண்டும், ஆனால் பெரிய ரிஸ்க் இருக்கக் கூடாது என்று நினைத்தால் அவர்களுக்கான நல்ல முதலீட்டுத் திட்டங்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தான்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

பொதுவாக, இந்திய வங்கிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு என்று தனியாக கூடுதல் வட்டி விகிதங்களைக் கொடுப்பார்கள். அப்படி நல்ல வட்டி விகிதங்களைக் கொடுக்கும் சில ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். முதலில் எஸ்பிஐயில் இருந்து தொடங்குவோம்.

எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்
 

எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம்

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக 6.2 % தான் வட்டி கொடுக்கிறார்கள். இந்த வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய் வரைக்குமான டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். 27 மே 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுத்து வருவதாகச் சொல்கிறது எஸ்பிஐ வலைதளம்.

SBI FD interest rates

SBI FD interest rates

மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இதோ.

7 days to 45 days 3.4%

46 days to 179 days 4.4%

180 days to 210 days 4.9%

211 days to less than 1 year 4.9%

1 year to less than 2 year 5.6%

2 years to less than 3 years 5.6%

3 years to less than 5 years 5.8%

5 years and up to 10 years 6.2%

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

2 கோடி ரூபாய் வரைக்குமான, மூத்த குடிமக்க்ளுக்கு மட்டுமே இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும். Fincare Small finance Bank என்கிற வங்கி மூத்த குடி மக்களுக்கு அதிகபட்சமாக 48 மாதங்கள் - 59 மாதங்கள் வரையான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.0% வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே பாருங்கள். 22 ஜூன் 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள்.

Fincare Small finance Bank FD Interest rates

Fincare Small finance Bank FD Interest rates

மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு இந்த வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ..!

7 Days to 45 Days 4.0%

46 Days to 90 Days 4.5%

91 Days to 180 Days 5.5%

181 Days to 364 Days 6.75%

12 months - 15 months 7.45%

15 months 1 day - 18 months 7.5%

18 months 1 day - 24 months 7.6%

24 months 1 day - 36 months 7.7%

36 months 1day - 48 months 7.8%

48 months 1day - 59 months 8.0%

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

03 ஜூலை 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள். இது 2 கோடி ரூபாய் வரைக்குமான சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும். Utkarsh Small Finance Bank என்கிற வங்கி மூத்த குடிமக்களுக்கு, அதிகபட்சமாக 700 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.5 % வட்டி கொடுக்கிறார்கள். மற்ற டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.

Utkarsh Small Finance Bank FD Interest rates

Utkarsh Small Finance Bank FD Interest rates

60 வயதுக்கு மேற்பட்ட, மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு இந்த வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ..!

7 Days to 45 Days 4.0%

46 Days to 90 Days 4.5%

91 Days to 180 Days 5.0%

181 Days to 364 Days 7.0%

365 Days to 699 Days 8.25%

700 Days 8.5%

701 Days to 3652 Days 8.25%

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

01-05-2020 முதல் மூத்த குடிமக்களுக்கு, இந்த வட்டி விகிதங்களைக் கொடுப்பதாக சூர்யோதய் வங்கியின் வலைதளம் சொல்கிறது. 2 கோடி ரூபாய் வரைக்குமான மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். மூத்த குடி மக்களுக்கான, 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9.25% வட்டி கொடுக்கிறார்கள்.

Suryoday Small Finance Bank FD interest rates

Suryoday Small Finance Bank FD interest rates

மூத்த குடிமக்களுக்கு சூர்யோதய் வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ.

7 days to 45 days 4.5%

46 days to 90 days 5.5%

91 days to 6 months 6.0%

6 months to 9 months 7.0%

9 months to less than 1 Year 7.5%

1 Year to 2 years 7.75%

2 Years to 3 Years 8.0%

3 Years to less than 5 Years 8.25%

5 Years 9.25%

Above 5 years to 10 years 7.75%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Suryoday Small Finance Bank giving up to 9.25% for senior citizen fixed deposit

Suryoday Small Finance Bank giving 9.25 percent interest for 5 years senior citizen fixed deposit schemes.
Story first published: Tuesday, July 28, 2020, 18:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X