எகிறிய லாபம்.. 2020ல் முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்த சில ஃபண்டுகள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்திலும் பலருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றாலே சிக்கலானதாகவோ அல்லது அச்சத்துக்குரியதாகவோ தான் உள்ளது என நினைக்கிறார்கள். ஆனால் அடிப்படையில் பங்கு சந்தையுடன் ஒப்பிடும்போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிக எளிதானவை.

 

ஏனெனில் பொதுவாக முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளார்களிடம் இருந்து, பணத்தினை திரட்டுகின்ற ஒரு டிரஸ்டாக ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பர். இவர்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப முதலீடுகளை பிரித்து, ஈக்விட்டிகள், பத்திரங்கள், மற்ற பிற முதலீடுகள் என பலவற்றிலும் முதலீடு செய்வர். இதிலும் பல வகையான ஃபண்டுகள் உள்ளன.

இது முதலீட்டாளார்களின் ரிஸ்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட பண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. உதாரணாத்திற்கு, செக்டோரல் ஃபண்டுகள், ஹெல்த்கேர் ஃபண்டுகள், டெப்ட் ஃபண்ட்கள் என பலவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது.

பார்மா & ஐடி துறை

பார்மா & ஐடி துறை

எனினும் கடந்த 2020ல் சிறந்த லாபம் கொடுத்த பங்குகளில் பார்மா துறையும், ஐடி துறையும் உண்டு. ஏனெனில் கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து தங்களது பணிகளை செய்த துறைகளாகும். இதனால் இவை கடந்த ஆண்டில் நல்ல லாபம் கொடுத்தன. உண்மையில் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்த பட்டியலில், இத்துறைசார்ந்த ஃபண்டுகள் முதலிடம் பிடித்துள்ளன.

50% லாபம் கொடுத்த ஃபண்டுகள்

50% லாபம் கொடுத்த ஃபண்டுகள்

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மிட் கேப் ஃபண்டுகள், ஸ்மால் கேப் ஃபண்டுகள் தொடக்கத்தில் பின் தங்கின. எனினும் பின்னர் பார்மா மற்றும் ஐடி துறைக்கு பிறகு நல்ல லாபம் கொடுத்த ஃபண்டுகளாக மாறின. அந்த வகையில் கடந்த ஆண்டில் 50% மேல் லாபம் கொடுத்த சில ஃபண்டுகளை பற்றித் தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

பலத்த லாபம் கொடுத்த ஹெல்த்கேர் ஃபண்ட்
 

பலத்த லாபம் கொடுத்த ஹெல்த்கேர் ஃபண்ட்

மேற்கண்ட வகையில் நாம் இன்று முதலில் பார்க்கவிருப்பது, DSP ஹெல்த்கேர் ஃபண்ட். இது பார்மா துறையை சார்ந்த ஒரு ஃபண்ட் ஆகும். இது கடந்த ஆண்டில் 78% லாபம் கொடுத்துள்ளது.

Mirae asset Healthcare fund, Pharma, ஹெல்த்கேர் ஃபண்டான இது, பார்மா துறையை சார்ந்த ஒரு ஃபண்ட் ஆகும். இது கடந்த ஆண்டில் 75% லாபம் கொடுத்துள்ளது.

ICICI pru pharma healthcare and diagnostics fund, இதுவும் பார்மா துறையை சார்ந்த ஒரு ஃபண்ட் ஆகும். இது கடந்த ஆண்டில் 72% லாபம் கொடுத்துள்ளது.

ஸ்மால் கேப் ஃபண்டுகள்

ஸ்மால் கேப் ஃபண்டுகள்

Quant Small cap fund. ஸ்மால் கேப் ஃபண்டான இது கடந்த ஆண்டில் 76% லாபம் கொடுத்துள்ளது.

ஸ்மால் கேப் வகையை சேர்ந்த BOI AXA Small Cap Fund, கடந்த ஒரு ஆண்டில் 54% லாபம் கொடுத்துள்ளது.

இதே மிட் கேப் வகையான PGIM India Midcap Opportunities Fund, 50% லாபம் கொடுத்துள்ள ஒரு ஃபண்ட் ஆகும்.

பார்மா ஃபண்டுகள்

பார்மா ஃபண்டுகள்

பார்மா துறையை சேர்ந்த Nippon India Pharma Fund, கடந்த ஒரு ஆண்டில் 67% லாபம் கொடுத்துள்ளது.

பார்மா துறையை சேர்ந்த SBI Healthcare Opportunities Fund, கடந்த ஆண்டில் 67% லாபம் கொடுத்துள்ளது

Tata India Pharma & HealthCare Fund, Pharma, பார்மா துறையை சேர்ந்த இந்த ஃபண்ட் ஒரு ஆண்டில் 65% லாபம் கொடுத்துள்ளது. இதே IDBI Healthcare Fund கடந்தாண்டில் 59% லாபம கொடுத்துள்ளது.

ஐடி துறை பண்டுகள்

ஐடி துறை பண்டுகள்

இதே ஐடி துறையை சேர்ந்த Aditya Birla Sun Life Digital India Fund, கடந்த ஆண்டில் 59% லாபத்திலும், இதே Franklin India Technology Fund, ஒரு ஆண்டில் 57% லாபமும் கொடுத்துள்ளன. இதே டாடா டிஜிட்டல் வகையான Tata Digital India Fund ஃபண்டானது 54% லாபமும் கொடுத்துள்ளது.

சர்வதேச பங்கு சந்தை சார்ந்த பங்குகள்

சர்வதேச பங்கு சந்தை சார்ந்த பங்குகள்

இது தவிர, Edelweiss Greater China Equity Off-shore Fund, international equities, 57% லாபமும், Aditya Birla Sun Life Pharma & Healthcare Fund, international equities, 55% லாபமும், Motilal Oswal Nasdaq 100 FOF, International equities, 51% லாபமும், Motilal Oswal NASDAQ 100 Exchange Traded Fund, International equities, 51% லாபமும் கொடுத்துள்ளது. மேற்கண்ட இந்த பங்குகள் ஏற்கனவே லாபம் கொடுத்த பங்குகள் என்றாலும், வரும் காலத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளார்களுக்கு ஒரு கணிப்பினைக் கொடுக்கும். நிச்சயம் இது பயனுள்ளதாகவே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These Mutual funds gave over 50% returns in 2020

Investment updates.. These Mutual funds gave over 50% returns in 2020
Story first published: Sunday, January 3, 2021, 15:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X