அரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்தவரையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்புண்டு.

 

ஏனெனில் ரிஸ்கும் குறைவு, பாதுகாப்பான முதலீடு, வரி சலுகை, எல்லாற்றவற்றிற்கும் மேலாக குறைந்த வருவாயானலும், நிலையான கணிசமாக வருவாய் உண்டு.

இப்படி அரசின் சலுகைகளோடு நல்ல லாபம் தரும் சிறந்த 12 திட்டங்களைப் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கின்றோம்.

யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை! தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்! Chris Wood கருத்து!

சேமிப்பு எதற்காக?

சேமிப்பு எதற்காக?

உங்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய, உங்கள் தற்போதைய வருமானத்தின் ஒரு பகுதியினை ஒதுக்கி வைப்பது தான் சேமிப்பு. இவ்வாறு சேமிக்கப்படும் சேமிப்பு தொகை, பணவீக்கத்தின் காரணமாக முதலீட்டுக்கே பங்கம் வந்து விடக்கூடாது என்பது தான் அனைத்து முதலீட்டாளர்களின் எண்ணம். அரசின் திட்டங்களில் அந்த ஆபத்து இல்லை. அதோடு ஏற்ற இறக்கமானஏற்ற இறக்கமான பங்குச் சந்தைக்கு பாதிக்கப்படுவதில்லை. ஆக உங்களது பணத்தினை சேமிக்க இது தான் சரியான திட்டம்.

இது பாதுகாப்பான முதலீடு

இது பாதுகாப்பான முதலீடு

ஆபத்து குறைவாகவே உள்ளதே அப்படின்னா? வருமானமும் குறைவாக இருக்குமோ? என்ற உணர்வும் வேண்டாம். இல்லை. நீங்கள் பங்கு சந்தை போன்ற சற்று ரிஸ்க்கான முதலீடுகளில் முதலீடு செய்வதை விட, அரசின் திட்டங்கள் மிக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உங்களின் மூலதனம் மிக முக்கியம். அதோடு சிறந்த வட்டி விகிதம். ஆக வேறென்ன வேண்டும்.

அரசின் தேசிய சேமிப்பு பத்திரம்
 

அரசின் தேசிய சேமிப்பு பத்திரம்

அரசின் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். ஜனவரி - மார்ச் 2019 நிலவரப்படி வட்டி விகிதம் 8% ஆகும்.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத சிறந்ததொரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.

இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியாது.

இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும். ஏப்ரல் 1,2018 நிலவரப்படி, வட்டி விகிதம் 8% ஆகும்.

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி

ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் உங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால், நீங்கள் உங்களது விருப்பப்படி தன்னார்வ வருங்கால வைப்பு நிதியாக (VPF) பங்களிப்பு செய்யலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தினை திட்டமிட ஒரு சிறந்த அம்சமாக இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது. இந்த இபிஎஃப்க்கு 2019 - 20ம் நிதியாண்டு நிலவரப்படி வட்டி விகிதம் 8.50% ஆகும். .

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்களது பிஎஃப் தொகைய வித்ட்ரா செய்தால் அதற்கு வரி உண்டு. அதாவது ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிக்கும் முன்பு நீங்கள் நிதிகளைத் திரும்ப பெற விரும்பினால், சேமித்த தொகை மற்றும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

உங்களது ஓய்வு காலத்தினை சுகமாக கழிக்க அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் தான் சிறந்த திட்டமாக இருக்க முடியும். இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது.

அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் வந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது.

இதில் நீங்கள் 1000, 2000, 5000, என்ற முறையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 18 வயது முதல் 60 வயது வரை இணைந்து கொள்ள முடியும். இதில் வரிச்சலுகை உண்டு.

அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டம்

தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதோடு தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய் இருந்தால் கூட போதும்.

இதன் மூலம் செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் விலக்கு உண்டு.

அதே போல இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. எனினும் வருடத்திற்கு ஒருமுறை தான் வாடிக்கையாளர்களுக்கு பலன் வழங்கப்படுகிறது.

மாதாந்திர வருமான கணக்கு திட்டம்

மாதாந்திர வருமான கணக்கு திட்டம்

தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு

அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு

இது மிகவும் பிரபலமான திட்டம். இன்று வங்கிகளில் காணப்படுகின்ற தொடர்வைப்புக் கணக்கு திட்டங்களுக்கு இதுவே ஒரு முன்னோடி. இந்தத் திட்டத்தில் மாதம் 10 ரூபாய்கூட சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு மாதத்துக்கு வெறும் 50 ரூபாய் செலுத்தி வந்தால், 5 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு வட்டியுடன் சேர்த்து கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா

அடல் பென்ஷன் யோஜனா

மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இது கடந்த 2015 - 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.

அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாத வந்துள்ளது எனலாம்.

அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா

சுகன்யா சம்ரிதி யோஜனா

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது.

ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்திலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும்.

இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

அரசின் கிசான் விகாஸ் பத்திரம்

அரசின் கிசான் விகாஸ் பத்திரம்

இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள் தான். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை.

கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். மைனர் பெண் அல்லது சிறுவர்களின் பெயரில், அவரது பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு கால,ம் 5 வருடம். ஆண்டுக்கு 83 % சதவீத லாபத்தினை அளிக்கிறது. இது வயதான காலத்தில் ஒரு பாதுகாப்பினை வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 12 govt savings scheme in india. Check all details

Top 12 govt savings scheme in india. Please Check here all details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X