பொதுவாக இந்த நெருக்கடியான காலகட்டங்களில் கார் கடனிற்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரும் கார் வாங்க இது உதவிகரமாக இருக்கும்.
அந்த வகையில் இன்று நாம் குறைந்த வட்டியில் கார் கடனைகளை வழங்கும் வங்கிகளை பற்றித் தான் பார்க்க விருக்கிறோம்.
அதோடு கொரோனாவிற்கு பிறகு சமூக இடைவெளி என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் பலரும் பொது போக்குவரத்தினை நாடமல், குறைந்த பட்ஜெட்டில் கார்களை எடுக்க தொடங்கியுள்ளனர். இது குடும்பத்துடன் பயணம் செய்ய ஏற்ற ஒன்றாக இருக்கும்.

குறைந்த வட்டி விகிதம்
அந்த வகையில் நாம் இன்று 10 வங்கிகளில் கார் லோனுக்கான வட்டி விகிதத்தினை பார்க்கவிருக்கிறோம். பஞ்சாப் & சிந்த் வங்கியில் வருடத்திற்கு 7.10% ஆகவும், இதே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வருடத்துக்கு 7.25% ஆகவும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதே கனரா வங்கியில் வட்டி விகிதம் 7.30% வரையில் வசூலிக்கப்படுகிறது.

மற்ற வங்கிகளில் எவ்வளவு?
இதே பேங்க் ஆஃப் பரோடாவில் வருடத்திற்கு 7.35% ஆகவும், இதே யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 7.40% ஆகவும், இதே பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.45% ஆகவும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் வருடத்திற்கு 7.50% ஆகவும், ஐடிபிஐ வங்கியில் வருடத்திற்கு 7.50% ஆகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வருடத்திற்கு 7.55% ஆகவும் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

என்ன தகுதி?
கார் கடனை பெற 21 - 60 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். 60 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எனினும் சில வங்கிகளில் இந்த வயது தகுதி வேறுபடுகின்றது. இதே சுயதொழில் புரிபவர்கள் 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு தனி நபர் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் வருமானத்தினை கொண்டு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். இதே சுயதொழில் செய்பவர்கள் எனில் ITR பதிவு கட்டாயம் தேவை.

என்னென்ன ஆவணங்கள் தேவை?
அதெல்லாம் சரி என்னென்ன ஆவணங்கள் தேவை. அடையாள சான்றாக ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், தேர்தல் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை கொடுக்கலாம். இதே முகவரி ஆவணமான ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை தேவைப்படும். வருமான சான்றிதலாக சம்பள சீட்டு கடைசி மூன்று மாதம், வருமான வரி பதிவு செய்த ஆவணம், ஆறு மாத வங்கி ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவை தேவைப்படும்.