இன்றைய காலகட்டத்தில் தனி மனித இடைவெளியை எவ்வளவு அவசியம் என்று கட்டாயம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஏனெனில் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் பொது போக்குவரத்துகளில் தனி மனித இடைவெளி, சுகாதாரம், விருப்பம் போல் பயணம், இப்படி எதனையும் நம்மால் கடைபிடிக்க இயலாது.
ஆனால் அதுவே இன்று பலரை புதிய வாகனங்களை வாங்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக வட்டி குறைவு, சமூக இடைவெளி என்பது என்பது பலரையும் ஒரு புதிய வாகனம் வாங்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

விவரம் என்ன?
இரு சக்கர வாகனமானலும் சரி, நான்கு சக்கர வாகனமானலும் சரி? இன்று பலரும் வங்கிகளில் லோன் பெற்று தான் வாங்குகிறோம். ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எங்கு குறைவு? எதில் எளிதாக கடன் கிடைக்கும்? இப்படி எதனையும் தெரிந்து கொள்ளமல் சென்று வாங்கி விடுகிறோம்.

பல விதமான சலுகைகள்
அதிலும் இன்றைய காலகட்டத்தில் வாகன நிறுவனங்கள், கடந்த பல மாதங்களாக கொரோனாவால் விற்பனை முடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் பண்டிகை காலத்தினை ஒட்டி டீலர்களும், வாகன நிறுவனங்களும் பல வகையான தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இதே வங்கிகள் பல வகையான சலுகைகள், வட்டி தள்ளுபடி, பெண்களுக்கென வட்டி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அதோடு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி என பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் & சிந்த் வங்கி & சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
பஞ்சாப் & சிந்த் வங்கி 7.1 - 7.9 வட்டி வீதம் வழங்கி வருகின்றது. இது உங்களின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இது செயல்பாட்டு கட்டணத்தினை இந்த விழாக்கால சலுகையாக தள்ளுபடி செய்துள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.25 - 7.45% வட்டி வீதம் வரையில் வழங்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் என்பது இல்லை.

கனரா வங்கி & பேங்க் ஆஃப் இந்தியா
கனரா வங்கியில் வட்டி வீதம் 7.3 - 9.9% வரையில் வசூலிக்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டு கட்டணமாக கடன் விகிதத்தில் 0.25 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இது மினிமம் 1000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.
இதே பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.35 - 7.95% வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவ்வங்கியிலும் செயல்பாட்டு கட்டணமாக கடன் விகிதத்தில் 0.25 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இது மினிமம் 1000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.

பேங்க் ஆஃப் பரோடா & ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 7.35 - 7.95% வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கியில் செயல்பாட்டு கட்டணமாக 1500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை வசூலிக்கப்படும் என்று ம் இவ்வங்கி அறிவித்துள்ளது.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 7.3 - 7.75% வட்டி விகிதத்தில் கார் லோன் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக கடன் தொகையில் 0.5%மும், இது குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 7,500 ரூபாய் வரையில் வசூல் செய்யப்படுகிறது.

யூனியன் வங்கி & யூகோ வங்கி
யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7.4 - 7.5% வரையில் வழங்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக 1000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. யூகோ வங்கியில் வட்டி விகிதம் 7.70% ஆகும்.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா & பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.55 - 8.8% வரை வட்டி வசூல் செய்யப்படுகின்றது. இங்கு டிசம்பர் 31 வரையில் செயல்பாட்டு கட்டணம் டாக்குமென்டேஷன் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதே பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 7.7 - 8.45% வரையில் வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இங்கு நவம்பர் 30 வரையில் மற்ற கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த கட்டண விகிதம் வங்கிகளின் வலைதளத்தில் இருந்து, நவம்பர் 7 அன்று எடுக்கப்பட்டது.