உங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண்டிய சிறந்த வழிகள்..எது சிறந்த முதலீடு..! [பாகம் -2]

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அதிக லாபம் தரும் முதலீடு எது? எதில் முதலீடு செய்யலாம்? எந்த முதலீட்டு திட்டம் சிறந்தது. என தொடர்ந்து நமது முதலீட்டு கட்டுரைகளில் பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்றும் சிலவற்றை பார்க்கப் போகிறோம்.

 

நீங்கள் பேசுவது இங்கு தெரிகிறது. தற்போதைய காலத்தில் கையில் பணமே இல்லையாம்? எப்படி முதலீடு செய்வது என்பது தானே உங்கள் கேள்வி? பணம் இல்லாவிட்டால் என்ன? இப்போது தெரிந்து கொண்டால்? கையில் பணமிருக்கும் போது முதலீடு செய்து கொள்ளலாமே.

உங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண்டிய சிறந்த வழிகள்..எது சிறந்த முதலீடு..! [பாகம் -2]

இன்று நாம் பார்க்க இருக்கும் முதலீடுகளில் முதல் ஆப்சன் பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் (PPF) தான். இது குறைந்த ரிஸ்க் உள்ள ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். நீண்டகால நோக்கங்களுக்கான சேமிக்க விரும்புவோர் இதில் தங்களது முதலீடுகளை செய்யலாம். இது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் உள்ள சிறப்பு சலுகை என்னவெனில் வரி சலுகை உண்டு. இதில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ரிஸ்க் குறைந்த முதலீடு ஆதலால், நீண்டகாலம் ஆனாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் இது முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாகவும், சிறந்த சேமிப்பாகவும் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் இதன் வட்டி விகிதமாகந்து அரசின் மூலம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது, தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS). இந்த தேசிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் நீண்டகால ஓய்வூதிய திட்டமாகும். இதில் இரண்டு திட்டங்கள் உண்டு
Tier 1
இந்த முதல் திட்டத்தில் சேரும் சந்தாதாரர் கணக்கு முடியும் வரை அல்லது ஒய்வு பெறும் வரை பணத்தினை திரும்ப பெற முடியாது. இதனை ஓய்வுக் காலத்திற்கு பின்பு தான் பெற முடியும்.
Tier 2
இந்த திட்டத்தில் சேரும் சந்தாதாரர்கள், தன் விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பணத்தினை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதில் வருமான வரி சலுகை ஏதும் இல்லை.

 

இந்த திட்டத்தினை பொறுத்த வரையில் 100 சதவீதம் பங்கு முதலீடு இல்லை. நீங்கள் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் POP மூலம் முதலீடு செய்யலாம். பெரும்பாலான வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான முன்னிலை முனையங்களாக அதாவது POPக்களாக செயல்படுகின்றன. இந்த POPக்கள் சந்தாதார்கள் ஓய்வூதியக் கணக்குத் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளை செய்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top investment options in india – part 2

National pension scheme a voluntary defined contribution retirement savings scheme. It’s a long term retirement - focused investment.
Story first published: Thursday, June 11, 2020, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X