இன்று காலை ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு- 'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' (Transparent Taxation - Honoring the Honest) திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த புதிய திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதைப் பார்ப்போம்.
1. இந்தியாவில் அடிப்படை கட்டமைப்புக் கொள்கை மாற்றங்கள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொட்டு இருக்கிறது. ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு- 'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தில் நேரில் சென்று முகத்துக்கு முகம் பார்க்காமலேயே அசெஸ்மெண்ட் (Faceless Assessment), முகம் பார்க்காமலேயே அப்பீல் (Faceless Appeal) & வரி செலுத்துவோருக்கான உரிமைகள் மற்றும் கடமை விவரங்கள் அடங்கிய சாசனம் (Taxpayer Charter) இருக்குமாம். இந்தியாவின் வளர்ச்சியில் வரி செலுத்துபவர்களுக்கான சாசனம் அவசியம் எனவும் சொல்லி இருக்கிறார் பிரதமர்.
2. இந்த மூன்றில், முகம் பார்க்காமலேயே அசெஸ்மெண்ட் (Faceless Assessment) & வரி செலுத்துவோருக்கான உரிமைகள் மற்றும் கடமை விவரங்கள் (Taxpayer Charter) ஆகிய இரண்டும் இன்று முதல் அமலுக்கு வருகிறதாம்.
3. முகம் பார்க்காமல் அப்பீல் செய்வது வரும் செப்டம்பர் 25, 2020 முதல் அமலுக்கு வரு எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்.
4. கடந்த ஆறு ஆண்டுகளில், வங்கி சேவை பெறாதவர்களுக்கு வங்கி சேவை கொடுப்பது, பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பணம் அளிக்கப்படாதவர்களுக்கு நிதியளிப்பது, தான் எங்கள் கவனமாக இருந்தது. இன்று, நாங்கள் நேர்மையானவர்களை கவுரவிக்கிறோம் என்றார் பிரதமர்.
5. ஒரு காலத்தில் நாம் சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம். அழுத்தங்களினால் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை சீர்திருத்தங்கள் என்றார்கள்.
சவுதியின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. செலவு குறைப்புக்கு திட்டமிடும் சவுதி அராம்கோ?
6. ஒரு நல்ல சீர்திருத்தம், மற்றொரு சீர்திருத்தத்தின் அடிப்படையாக இருக்கும். மற்றொரு சீர்திருத்தத்துக்கு வழி வகுக்கும். ஒரு சீர்திருத்தத்துடன் நிறுத்த முடியாது. இது ஒரு தொடர்ச்சியான செயல் என்றார் பிரதமர்.
7. இப்போது எந்த ஒரு சட்டத்தையும், விதியையும் மக்களை நோக்கியும், மக்களுக்கு நெருக்கமானதாகவும் மாற்ற வேண்டும் என்பதில் கவனம் இருக்கிறது. இது தான் புதிய ஆட்சி முறையின் பலன். இதற்கான பலனை நாடு பெற்றுக் கொண்டு இருக்கிறது என்கிறார் பிரதமர்.
8. விதிமுறைகளில் நிறைய சிக்கல்கள் இருந்தால், அதை முழுமையாக கடைபிடிப்பது சிரமம் தான். சட்டம் தெளிவாக இருந்தால், வரி செலுத்துவோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் நாடும் மகிழ்ச்சியாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்.
9. இதுவரை, நம் ஊரில் இருக்கும் வருமான வரித் துறை தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டார்கள். இனி அப்படி இருக்காது. டெக்னாலஜியின் உதவியுடன், வருமான வரி ஆய்வுகள் & விசாரணைகள் எல்லாம் ரேண்டமாக எந்த வருமான வரி அதிகாரிக்கு வேண்டுமானாலும் அசைன் செய்யப்படலாம். இனி கணிணி தான், உங்கள் வருமான வரிக் கணக்கையார் சரிபார்ப்பது என்பதை தீர்மானிக்கும்.
10 . கடந்த ஆறு ஆண்டுகளில் வருமான வரி விசாரணைகள் (Scrutiny) கணிசமாக குறைந்து இருக்கின்றன. அதே நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 கோடி அதிகரித்து இருக்கிறது. எல்லோரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அது நம் கடமை என பிரதமர் சொல்லி இருக்கிறார்.