உண்மையான மகிழ்ச்சி எது..? நைஜீரிய பணக்காரர் பெமி ஓடெடோலா கூறுவது இதுதான்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016 போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 1011வது இடத்தைப் பிடித்தார் நைஜீரியாவைச் சேர்ந்த பெமி ஓடெடோலா, ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... ஏன் தெரியுமா..?

 

அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்...

"உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு.. பெமி கூறிய பதில் உண்மையான மகிழ்ச்சி எது எனக் காட்டியுள்ளது.

மகிழ்ச்சியின் 4 நிலைகள்

மகிழ்ச்சியின் 4 நிலைகள்

"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளைக் கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன்."

1.முதல் கட்டமாகச் செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்தக் கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கவில்லை.

விலை உயர்ந்த பொருட்கள்

விலை உயர்ந்த பொருட்கள்

2.பின்னர் மதிப்புமிக்கப் பொருட்கள் மற்றும் பொருட்களைச் சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்கப் பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.

பெரிய வர்த்தகம்
 

பெரிய வர்த்தகம்

3.பின்னர்ப் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கவே இல்லை.

ஊனமுற்ற பிஞ்சு குழந்தைகள்

ஊனமுற்ற பிஞ்சு குழந்தைகள்

4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்குத் தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்குச் சக்கர நாற்காலி வாங்கிக் கொடுக்கச் சொன்னான், சுமார் 200 குழந்தைகள்.

என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாகச் சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.

ஆனால் நண்பனோ நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளைக் குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன்.

குழந்தைகளின் முகத்தில் விசித்திரமான பிரகாசம்

குழந்தைகளின் முகத்தில் விசித்திரமான பிரகாசம்

அங்கே நான் சக்கர நாற்காலிகளைக் குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்தக் குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

விவரிக்கவே முடியாத ஆனந்தம்

விவரிக்கவே முடியாத ஆனந்தம்

அது எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாகப் பிடித்துக் கொண்டது, நான் சிரித்துக் கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே விடாமல் இறுக்க பிடித்துக் கொண்டது.

அணுகு முறையை மாற்றியது.

அணுகு முறையை மாற்றியது.

நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?

இந்தக் குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியைத் தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.

குழந்தையின் பதில்

குழந்தையின் பதில்

அந்தக் குழந்தை கூறியது இது தான்:

‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களைச் சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காகக் கடவுளிடம் பேசி நான் உங்களுக்குப் பிடித்ததை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அந்தச் சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: பணக்காரர்
English summary

What is real happiness? Does money give you happiness? See what Femi Otedola says

What is real happiness? Does money give you happiness? See what Femi Otedola says
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X