நம்மில் பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் அது சிக்கலானதாகவும் அல்லது பாதுகாப்பற்றதாகவும் தோன்றலாம். பொதுவான முதலீட்டு நோக்கத்தினைக் கொண்ட முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தினை, ஈக்விட்டி, பத்திரங்கள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள், பிற செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
அப்படி மியூச்சுவல் பண்ட் முதலீடு என வரும் போது, எஸ்ஐபி மூலமாக செய்யப்படும் முதலீடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
ஏனெனில் மியூச்சுவல் பண்ட் முதலீடு சிக்கலானது என நினைப்பவர்கள் கூட, இவற்றில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாக, எஸ்ஐபி என கருதப்படுகிறது.
இந்தியாவைத் தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..!

SIP என்றால் என்ன?
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (systematic investments plan - SIPs) என்பதனையே சுருக்கமாக எஸ்ஐபி என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என, குறிப்பிட்ட காலக்கெடுவில், தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் யூனிட்களாக வாங்கப்படுவதால், ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற அளவு யூனிட்கள் வாங்கப்படும்.

எஸ்ஐபி-யால் என்ன பலன்?
எஸ்ஐபி முதலீடு என்பது ஒரு சீரான முதலீட்டிற்கு வழிவகுக்கும். மேலும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் குறித்தெல்லாம் பதற்றம் அடையாமல் சீரான முதலீடு செய்ய வழிவகுக்கிறது. சாதாரணமாக நாம் மாதாமாதம் முதலீடு செய்வதாக இருந்தால், அதற்கான நேரம் கிடைக்காமல் தள்ளிப்போடும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் சந்தை நிலைக்கு ஏற்பவும் தள்ளிப் போடலாம். ஆனால் எஸ்ஐபி முறையில் தொடர்ந்து சீராக முதலீடு செய்து கொண்டிருக்கலாம்.

சாதகம் என்ன?
எஸ்ஐபி முதலீட்டின் மிகப்பெரிய சாதகம், சராசரி பலன் மூலம், நிறைந்த பலனை பெறுவதாகும். அதாவது, இந்த முறையில் ஒவ்வொரு தவணைக்கும் ஏற்ற யூனிட்கள் வாங்கப்படும். சந்தை ஏற்றத்தில் இருந்தால், குறைவான யூனிட்களும், இறக்கத்தில் இருந்தால், அதிக யூனிட்களும் கிடைக்கும். மொத்தத்தில் சராசரியாக பார்க்கும் போது, சற்று லாபம் உள்ளதாக இருக்கும். இதனையே நீண்டகால முதலீடாக செய்யும் போது, கூட்டு வட்டி முறையின் பலனையும் பெறலாம்.

இந்த எஸ்ஐபி திட்டம் யாருக்கு ஏற்¬றது??
எல்லா வகையான முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்கலாம். குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்பது மிக சிக்கலானவை என நினைப்பவர்கள், இந்த முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். சமபங்கு சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம். தேவை எனில் எப்போது வேண்டுமானாலும், முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம். இலக்கை அடைந்தவுடன் உங்களது முதலீட்டினை எடுத்துக் கொள்-ளலாம்.

25% லாபம் கொடுத்த ஃபண்டுகள்
அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 எஸ்ஐபி அஃபண்டுகளை பார்க்கலாம். பிஓஐ ஆக்சா டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் (BOI Axa tax advantage fund), இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்(investco india contra fund), கனரா ரோபேகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட் ( canara robeco equity tax saver fund), மைரே அசெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட் (mirae asset tax saver fund)

பிஓஐ ஆக்சா டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்
பிஓஐ ஆக்சா டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 26 சதவீத லாபம் கொடுத்துள்ளது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் இதற்கு பண்டிற்கு 5 ஸ்டார் ரேட்டிங்ஸ் கொடுத்துள்ளது.

இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்ட்
இன்வெஸ்கோ இந்தியா கான்ட்ரா ஃபண்டினை நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு எஸ்ஐபியாக தொடங்கியிருந்தால், அது கடந்த ஒரு வருடத்தில் 21 சதவீத லாபம் கொடுத்துள்ளது. இதில் முதலீடு செய்ய மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் தேவை.
இந்த ஃபண்ட் போர்ட்போலியோவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை உள்ளன. இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 5000 கோடி ரூபாய்க்கு அருகில் உள்ளது.

கனரா ரோபேகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர்
கனரா ரோபேகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃப்ண்டுக்கு கிரிசில் நிறுவனம் 5 ஸ்டார்களை வழங்கியுள்ளது. இந்த எஸ்ஐபி ஃபண்ட் ஒரு வருடத்தில் 22 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
இந்த ஃபண்ட் போர்ட்போலியோவில் இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி உள்ளிட்டவை உள்ளன. இந்த ஃபண்டுக்கு பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.