குழந்தையின் எதிர்காலத்திற்காக மாதம் ரூ.5000 முதலீடு.. எதில் செய்யலாம்.. எது சிறந்தது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். எனது 6 வயது குழந்தைக்காக மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்ய நினைக்கிறேன். எதில் முதலீடு செய்யலாம். எது பாதுகாப்பானது?

 

தற்போது நான் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன். ஆக என் குழந்தையின் கல்வி, திருமணம் மற்றும் எனது ஓய்வுகாலத்திற்கு எதில் முதலீடு செய்யலாம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் நான் ஒரு வீடுகட்டவும் நினைக்கிறேன். ஆக எனக்கும், என் குழந்தைக்கும் ஏற்ற முதலீட்டு திட்டம் எது? எனக்கும் எனது குழந்தைக்கும் பாதுகாப்பான ஹெல்த் பாலிசி திட்டம் எது?

முதலீடு செய்ய விருப்பம்?

முதலீடு செய்ய விருப்பம்?

தற்போது எனது மாத செலவு 8,000 ரூபாய்க்கு கீழ் தான் உள்ளது. ஆக தற்போது எனது முதலீட்டினை மாதம் 5,000 ரூபாய் செய்ய விரும்புகிறேன். படிப்படியாக இதனை அதிகரிக்கவும் விரும்புகிறேன். எனக்கு சம்பளம் தவிர வேறு வருமானம் கிடையாது? ஆக எனக்கும் என் குழந்தைக்கும் ஏற்ற முதலீடு எது? எதில் முதலீடு செய்யலாம்? எவ்வளவு வருமானம் கிடைக்கும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்

டெப்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு

டெப்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு

அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீங்கள் மாதத்திற்கு 5,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதனை கடன் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் வருமானம் சுமார் 12% என வைத்துக் கொண்டாலும் கூட, உங்களது கார்பஸ் அளவு 25 லட்சம் ரூபாயாகத்தான் இருக்கும்.

எஸ்ஐபி முதலீடு
 

எஸ்ஐபி முதலீடு

இதே எஸ்ஐபி-யில் மாதம் 5,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக முதலீட்டினை அதிகரித்தால், உங்களது கார்பஸ் 15 ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆக உங்களது மகளின் எதிர்காலம் கருதி, படிப்படியாக எஸ்ஐபி முதலீட்டினை 8,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம். ஆக இது உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

இன்சூரன்ஸ் திட்டம்

இன்சூரன்ஸ் திட்டம்

இதே உங்கள் உடல் நல காப்பீட்டு தேவைகளை கவனித்துக் கொள்ள, ஏதேனும் நல்லதொரு மெடிக்ளைம் பாலிசியை எடுக்கலாம். இதே ஓய்வுகாலத்திற்காக HDFC Retirement Savings Fund - Hybrid Equity Plan. என்ற ஃபண்டினை தேர்வு செய்யலாம். எதில் முதலீடு செய்தாலும் சரி, வருடத்திற்கு ஒரு முறையாவது அதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் முதலீடுகளை அவ்வப்போது கவனித்துக் கொள்ள வேண்டும். முதலீடு செய்யும் முன் நிச்சயம் உங்களுக்கு நம்பிக்கையான ஆலோசகர்களுடன் இணைந்து, இறுதி முடிவினை நீங்கள் எடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the best way to invest Rs.5000 per month to gain good returns?

Investment updates.. What is the best way to invest Rs.5000 per month to gain good returns?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X