ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி வாட்ஸ் அப் போதும்.. வங்கி சேவைகள் வாட்ஸ் அப்பில்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இணையத்தின் உதவியோடு உலகின் எல்லை வரைக்கும் நாம் சென்று வர முடியும். அப்படி சென்று வர நமக்கு மிக உதவியாக இருப்பது ஸ்மார்ட்போன்கள் தான். ஆனால் அதை இன்னும் எளிதாக்கும் விதமாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் வலம் வருகின்றன.

அதிலும் தற்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாகி வரும் வங்கித் துறைக்கு, இது பெரும் உதவியாகவே இருந்து வருகிறது எனலாம்.

ஏனெனில் வங்கிக்கு சென்று க்யூவில் நின்று பணத்தினை எடுத்து, அதன் பிறகு செலவு செய்வது என்பது பழைய கதையாகிவிட்டது.

ஹெச்டிஎஃப்சி வாட்ஸ் அப் சேவை
 

ஹெச்டிஎஃப்சி வாட்ஸ் அப் சேவை

தற்போதெல்லாம் இணைய வங்கி, மொபைல் வங்கி என பல வசதிகள் உள்ளன. ஆனால் அதில் பெறும் சேவைகளை விட இன்னும் எளிதாக மக்களுக்கு சென்று அடையும் வகையில், ஹெச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ் அப்பில் சேவைகளை கொடுத்து வருகிறது. அதன் மூலம் பல சேவைகளையும் அளித்து வருகிறது. அதனை பற்றித் தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.

வங்கி சேவையை எளிதில் பெறலாம்

வங்கி சேவையை எளிதில் பெறலாம்

இன்றைய நாளில் ஸ்மார்ட்போன் இல்லாதோர் இல்லை எனலாம். அதிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தாதோர் மிக குறைவாக உள்ளனர். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஹெச்டிஎஃப்சி வங்கி, வங்கி சேவையை இன்னும் எளிதாக்கும் விதமான இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது எனலாம். இது பழைய சேவை தான் எனினும் இன்றளவிலும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எப்படி இந்த வாட்ஸ் அப் வங்கி சேவையில் இணையலாம்

எப்படி இந்த வாட்ஸ் அப் வங்கி சேவையில் இணையலாம்

சரி முதலில் இந்த வாட்ஸ் அப் சேவையில் எப்படி உங்களை இணைத்துக் கொள்ளலாம். ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 7065970659 என்ற மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது SUB என்ற மெசேஜ்ஜினை வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் வாட்ஸ் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வங்கி சேவையினை பெற முடியும்.

என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
 

என்னென்ன சேவைகள் கிடைக்கும்?

சரி என்னென்ன சேவைகள் இந்த வாட்ஸ் அப் மூலம் கிடைக்கும். ஹெச்டிஎஃப்சி வழங்கும் வாட்ஸ் அப் சேவையில் வங்கி கணக்கு இருப்பு (account balanace), அதாவது உங்களது பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ள முடியும். அதோடு கிரெடிட் கார்டு நிலுவை (credit card outstanding balance) தொகை ஆகியவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற சேவைகளையும் பெற முடியும்?

இது போன்ற சேவைகளையும் பெற முடியும்?

அதுமட்டும் அல்ல இன்னும் பல சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெற முடியும். குறிப்பாக ஐஎப்எஸ்சி கோடு, வங்கி விடுமுறை நாட்கள் என பலவற்றை அறிந்து கொள்ள முடியும். இதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இது வங்கி விடுமுறை நாட்களிலும் கூட சில அடிப்படை சேவைகளை பெறுவதற்கு மிக முக்கியமாக உதவும்.

மினி ஸ்டேட்மென்டினையும் பெறலாம்

மினி ஸ்டேட்மென்டினையும் பெறலாம்

ஹெச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ் அப் வங்கி சேவை மூலம் சேமிப்பு கணக்கில் பேலன்ஸினை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அதோடு மினி ஸ்டேட்மென்ட்டையும் பெற்றுக் கொள்ள முடியும். அதோடு இணைய வங்கியில் உள்ளதைப் போலவே ஸ்டேட்மென்ட் மற்றும் செக் புக்கிற்காக விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றை கூட நாம் இதில் இருந்து விண்ணபித்துக் கொள்ள முடியும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

குறிப்பாக கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் நிலுவையில் உள்ள பேலன்ஸ் தொகை மற்றும் கார்டு ஸ்டேட்மென்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் எஃப்டி சம்மரி மற்றும் வீட்டுக் கடன், வாகன கடன் பெற என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும் போன்ற சேவைகளையும் இதில் அறிந்து கொள்ள முடியும். அதோடு முக்கியமான அப்டேட்ஸ் மற்றும் அலர்ட்டுகளை இதன் மூலம் பெற முடியும்.

எப்படி பெறுவது?

எப்படி பெறுவது?

சரி எப்படி இதில் நான் எப்படி இணைத்துக் கொள்வது? இந்த சேவையில் பதிவு செய்வதற்கு ஒருவர் 7065970659 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது SUB என்ற குறுஞ்செய்தியினை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும். அதன் பிறகு 7065970659 என்ற எண்ணினை உங்களது காண்டக்ட் லிஸ்டில் சேர்த்து பின்னர் HI என்று அனுப்பவும்.

இந்த சேவை எனக்கு வேண்டாம்?

இந்த சேவை எனக்கு வேண்டாம்?

ஆக இப்படி ஒரு முறை நீங்கள் பதிவு செய்து கொண்டாலே போதும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு வேளை இந்த சேவை உங்களுக்கு வேண்டாம் என்றாலும் UNSUB என்று டைப் செய்து 7065970659 என்ற எண்ணிக்கு செய்தி அனுப்பலாம்.

இதனை செய்ய வேண்டாம்

இதனை செய்ய வேண்டாம்

இந்த வாட்ஸ் சேவையில் உங்களது வங்கி கணக்கு குறித்தான சேவைகளை யாரிடமும் பகிரப்படாது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. மேலும் உங்களது ரகசிய விவரங்களான பின் எண்களை பாஸ்வேர்டை பதிவு செய்ய தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும் நீங்கள் இந்த சேவையினை பாதுக்காப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Whats app banking services in HDFC bank, here all details

Whatsapp banking services facility of HDFC is a simple and easy way to conduct certain basic banking services.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more