6 ஆண்டுகளில் வீடு வாங்கணும்.. ஓய்வுகாலத்திற்கு ரூ.3 கோடி சேமிக்க வேண்டும்.. எதில் எவ்வளவு முதலீடு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் சேமிப்பின் அவசியத்தை பலரும் நிச்சயம் உணர்ந்திருப்பர். ஏனெனில் அந்தளவுக்கு கொரோனா மக்களை பாடாய்படுத்தி எடுத்து வருகின்றது. பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்து, வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் 25 வயதான சுந்தர், தனது வாழ்வில் உள்ள இரு முக்கிய லட்சியங்களுக்காக முதலீடு செய்ய நினைக்கிறார்.

குஜராத் அரசின் உத்தரவால் நிறுவனங்கள் ஷாக்..!

ஒன்று வீடு ஒன்றினை வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். இரண்டாவது அவரின் ஓய்வுகாலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பது தான்.

முதல் இலக்கு இதுதான்

முதல் இலக்கு இதுதான்

இந்த இரு இலக்குகளை அடைய ஸ்மால் கேப் ஃபண்டுகள் போதுமானதா? முதல் இலக்கான வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய், 6 ஆண்டுகளில் வாங்க வேண்டும். 6 ஆண்டுகள் என்பது 8 - 10 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. ஆனால் இந்த இலக்கினை அடைய எதில் முதலீடு செய்யலாம். எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதே அவரின் கேள்வி.

இரண்டாவது இலக்கு என்ன?

இரண்டாவது இலக்கு என்ன?

அதே போல சுந்தரின் ஓய்வுகாலத்திற்காக 3 கோடி சேமிக்க நினைக்கிறார். அதுவும் 50 வயதில் இலக்கினை அடைய வேண்டும் என திட்டமிடுகிறார். தற்போது அவர் வயது 25. ஆக இதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே அவரின் கேள்வி.

இது மிக நல்ல விஷயம்
 

இது மிக நல்ல விஷயம்

சுந்தரின் இந்த கேள்விகள் உண்மையில் வரவேற்க தக்கதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் முன் கூட்டியே திட்டமிடுதல் என்பது மிக நல்ல விஷயம். அதுவும் குறைந்த வயதில் திட்டமிடுவது என்பது மிக நல்ல விஷயம். ஏனெனில் கால அவகாசம் நிறைய இருக்கிறது. உங்களது தேவைக்கான கார்ப்பஸினை அடைய பல வழிகள் உள்ளது.

வீடு இலக்கு

வீடு இலக்கு

ஆறு ஆண்டுகளில் வீடு வாங்குவது உங்களின் முன்னுரிமை எனில், வீட்டுகடனுடன் செய்யலாம். 2 கோடி இலக்கினை அடைய 10% வருமான வரிக்கு பிந்தைய வருமானம் ஈட்டினால், நீங்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். குறிப்பாக லார்க் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளில் மாதம் 25,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

முதலீட்டினை அதிகரிக்கலாம்

முதலீட்டினை அதிகரிக்கலாம்

இந்த வீடு இலக்கினை அடைய இன்னும் இரு வருடங்கள் நீட்டிக்க தயாராக இருந்தால், மாத முதலீட்டு தொகையினை 21,000 ரூபாயாக குறைக்கலாம். இதே ஆண்டுக்கு ஆண்டு உங்கள் முதலீட்டு தொகையில் 5% அதிகரித்துக் கொண்டே சென்றால், இது உங்கள் கார்ப்பஸினை கொஞ்சம் முன் கூட்டியே அடைய உதவும்.

கார்ப்பஸினை எளிதில் அடையலாம்

கார்ப்பஸினை எளிதில் அடையலாம்

அதாவது முதல் ஆண்டில் 21,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் எனில், இரண்டாவது ஆண்டில் 22,050 ரூபாயாக அதிகரித்தால் நன்றாக இருக்கும். 25 வயதில் நீங்கள் வாங்கும் சம்பளத்தினை விட, அடுத்தடுத்த வருடங்களில் முதலீட்டினை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும்போது எளிதில் கார்பஸினை அடையலாம்.

ஓய்வுகாலத்திற்காக முதலீடு

ஓய்வுகாலத்திற்காக முதலீடு

பணவீக்கத்தின் அடிப்படியில் 1 லட்சம் ரூபாய் செலவினை பூர்த்தி செய்ய நீங்கள் 3.75 லட்சம் ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் 50 வயது வரையில், மாதம்தோறும் 23,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த இலக்கினை அடைய 100% ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். அதோடு நீங்கள் 50 வயதினை எட்டும்போது, இதனை 30% ஆக குறைக்க வேண்டும். இதே 70 வயதில் 0% குறைக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் முற்றிலும் பூஜ்ஜிய கடன் இல்லாத வருமானத்திற்கு மாற வேண்டும்.

ஓய்வுகால திட்டத்திலும் முதலீட்டினை அதிகரிக்கலாம்

ஓய்வுகால திட்டத்திலும் முதலீட்டினை அதிகரிக்கலாம்

ஓய்வுகால திட்டத்திலும் செய்யும் முதலீட்டில் வருடத்திற்கு வருடம் உயர உயர, உங்களது முதலீட்டினையும் அதிகரிக்கலாம். இதே வீட்டுக்கடன் செலுத்தப்பட்டவுன், இந்த கடன் விகித தொகையினையும் சேர்த்து முதலீடாக அதிகரிக்கலாம்.

எதில் முதலீடு செய்யலாம்?

எதில் முதலீடு செய்யலாம்?

நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் இலக்குகளை அடைய முதலீடு மட்டும் அல்ல, நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்டுகளும் மிக முக்கியம். குறிப்பாக உங்கள் முதலீடுகளில் 80% லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கும், மீதமுள்ளவற்றை ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். ஸ்மால் கேப் ஃபண்டுகள் ஓரளவு லாபத்தினை கொடுக்கலாம் என்றாலும், நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளன. ஆக முடிந்த மட்டில் அவற்றை தவிர்க்கலாம். இந்த கட்டுரையானது (BT)யினை அடிபபடையாகக் கொண்டு எழுதப்பட்டது.

நீங்கள் முதலீடு செய்யும் முன் தகுந்த நம்பிக்கையான ஆலோசகரை ஆலோசித்து முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Where should i invest to buy house in 6 years, save for retirement? Check here full details

Investment latest updates.. Where should i invest to buy house in 6 years, save for retirement? Check here full details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X