அவசர தேவைக்கு பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட்.. என்ன சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் நமக்கெல்லாம் அவசரத் தேவைக்கு பணம் தேவை எனில், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பர்சனல் லோன் எனப்படும், தனிநபர் கடன்கள் தான்.

ஏனெனில் இந்த தனிநபர் கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில்லை. அதோடு மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு வட்டி சற்று அதிகம் என்றாலும், பிணையமாக எதுவும் தேவையில்லை என்பதால், இதனை மிக அதிகமாக மக்கள் விரும்புகின்றனர்.

தங்கம், சொத்து, மியூச்சுவல் ஃபண்டு, பிக்ஸட் டெபாசிட், கார் உள்ளிட்ட பல முதலீடுகள் போன்றவற்றை பயன்படுத்தி கடன் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இவை இல்லாத பட்சத்தில் மக்கள் தனிநபர் கடன்களை பயன்படுத்தலாம்.

EMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..!

எஸ்பிஐ தான் பெஸ்ட்
 

எஸ்பிஐ தான் பெஸ்ட்

ஆக இப்படி நீங்கள் தனிநபர் கடன்களை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அது இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறந்த ஆப்சனாக இருக்கும். ஏனெனில் மற்ற தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் குறைவு. அதோடு மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது செயல்பாட்டுக் கட்டணமும் குறைவு.

செயல்பாட்டுக் கட்டணம் & வட்டி விகிதம் குறைவு

செயல்பாட்டுக் கட்டணம் & வட்டி விகிதம் குறைவு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் செயல்பாட்டுக் கட்டணம் 1.50% கீழ் குறைவாகவே உள்ளது. இதுவே மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் செயல்பாட்டுக் கட்டணம் 2.5% ஆகும். இது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவினை விட 1 சதவீதம் அதிகம் உள்ளது. தனிநபர் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதங்களும் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.

வட்டி எவ்வளவு?

வட்டி எவ்வளவு?

இது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, மற்ற வங்கிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 3 சதவீதத்திற்கும் மேலாக இருக்கலாம். இதே தனியார் வங்கிகளில் 4 சதவீதத்திற்கு மேலாக வசூலிக்கப்படுகிறது.

கணிசமான தொகை மிச்சம்
 

கணிசமான தொகை மிச்சம்

அதோடு மற்ற கடன் விண்ணப்பங்களை சரிபார்க்க வங்கிகள் அவகாசம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் வங்கிகளில் தனிநபர் கடனை விரைவில் கொடுக்கின்றன. அதோடு பெரியளவில் நீங்கள் பர்சனல் லோன் வாங்கும் போது, உங்களுக்கு தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணத்தில் கணிசமான தொகை மிச்சமாகும்.

இரண்டாம் பட்சமான எடுத்துக் கொள்ளுங்கள்

இரண்டாம் பட்சமான எடுத்துக் கொள்ளுங்கள்

எனினும் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆனால் மேற்கண்ட சலுகைகளை பெற சற்று காத்திருப்பதில் தப்பேதும் இல்லையே. ஆனால் நிபுணர்கள் பர்சனல் லோனை இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஏனெனில் மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது, இதில் வட்டி விகிதம் அதிகம். அதாவது கிரெடிட் கார்டு கடன்களுக்கு அடுத்த வட்டி விகிதம், இந்த பர்சனல் கடன்களுக்கு தான் அதிகம்.

எஸ்பிஐ சிறந்த ஆப்சன்

எஸ்பிஐ சிறந்த ஆப்சன்

எளிதாகக் கூறவேண்டுமானால், தனிநபர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வங்கிகள் அல்லது வங்கியில்லா நிதி நிறுவனங்களில் வாங்கும் பாதுகாப்பற்ற கடன். ஆக இந்த தனிநபர் கடன் வருவாய் மட்டம், கிரெடிட் ஸ்கோர், வேலை மற்றும் திருப்பி செலுத்தும் திறன் போன்ற அடிப்படை காரணிகளை வைத்து வழங்கப்படுகிறது. ஆக இதற்கு வட்டி விகிதம் அதிகம் என்பதால் முடிந்தமட்டில் வேறு வகையான கடனை நாடலாம். அப்படி வாங்கியே ஆக வேண்டும் எனும் பட்சத்தில் எஸ்பிஐ சிறந்த ஆப்சனாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which bank is best for personal loans?

Are you looking at personal loans, SBI is a best option, the interest rates are lower, when compared to most private banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X