கணவனுக்கு போட்டியாக பெண்கள் வீட்டிலிருந்தபடி லட்சகணக்கில் சம்பாதிக்க சூப்பரான ஐடியா..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வேலைக்குச் செல்லாத பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் வீட்டிலிருந்தபடியே செய்யும் தொழில்கள் நிச்சயம் ஒரு வரம் தான். இதற்குக் குறைவான முதலீடும், மிகக்குறைந்த அளவு நேரமுமே தேவைப்படும் என்பது கூடுதல் நன்மை.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருந்து செய்யும் வேலையைத் தேடுகின்றனர். குறைவான நேரமே தேவைப்படும் பகுதி நேர வேலையில் பணம் சம்பாதிக்கவே ஆர்வமாக இருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்யும் 15 சிறந்த தொழில்களை இங்குத் தொகுத்துள்ளோம்.

குடும்பத்துடன் செலவழிக்கும் நேரத்தைத் தவிர்த்து, நமக்குச் சௌகரியமான நேரத்தில் செய்யும் வகையிலேயே இந்தத் தொழில்கள் இருக்கின்றன. உங்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கும் வகையிலான இந்தத் தொழில்களின் பட்டியல் இதோ..

சமையல் சம்பந்தப்பட்ட தொழில் ஐடியாக்கள்

சாக்லேட் தயாரித்தல்

சாக்லேட் தயாரித்தல் என்பது குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த தொழிலாகும். அதுவும் வீட்டிலிருக்கும் பெண்களுக்குச் சரியான தொழில். இத்தொழிலைத் துவங்க முதலில் உணவு தயாரிப்பாளருக்கான லைசென்ஸை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் (FSSAI) பெற வேண்டும். இதில் சாக்லேட்டை தயாரித்து விற்க வேண்டும் என்பதால், சாக்லேட்டை எளிதில் கவரக்கூடிய காகிதங்களில் சுற்ற வேறு ஒருவரின் உதவி தேவை. பின்னர் அவற்றை விற்க ஷாப்பிங் மால் மற்றும் அருகிலுள்ள கடைகளுடன் ஒப்பந்தம் செய்து வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

சாக்லேட் தயாரிக்கத் தேவையான முதலீடு - ரூ5,000 -10,000

எதிர்பார்க்கும் லாபம் -20%

 

கேக் தயாரித்தல்

வீட்டிலிருந்தே செய்யும் அடுத்த எளியத் தொழில் கேக் தயாரிப்பு. இதற்காகப் பெரிய அளவில் ஆட்களோ, கருவிகளோ, இயந்திரங்களோ தேவையில்லை. கேக் தயாரிப்புக்கான திறமையும் பயிற்சியுமே அவசியம். சந்தையில் போட்டி போடுவதற்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாகக் கேக் செய்ய வேண்டும். மேலும் வீட்டிலிருந்தே கூடக் கேக்கை விற்பனையும் செய்யலாம். கூடுதலாக அருகிலுள்ள பேக்கரிகளுடன் ஒப்பந்தம் செய்து விற்பனையை அதிகரிக்கலாம்.

கேக் தயாரிக்கத் தேவையான முதலீடு - ரூ5,000 -10,000

எதிர்பார்க்கும் லாபம் - 20 முதல் 30%

 

சமையல் பயிற்சி வகுப்புகள்

வீட்டிலிருக்கும் பெண்களுக்கான மூன்றாவது சிறந்த தொழில் சமையல் பயிற்சி வகுப்புகள். இது முற்றிலும் பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில். ஆனால் உங்களின் சமையல் திறமை மிகச்சிறப்பாக இருக்க வேண்டும். இத்தொழிலைத் துவங்க பல்வேறு சமையல் வசதிகள் கொண்ட சிறிய இடம் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

சமையல் வகுப்புகள் எடுக்கத் தேவையான முதலீடு - ரூ20,000 -25,000

எதிர்பார்க்கும் லாபம் -30%

 

மெழுகுவர்த்தித் தயாரிப்பு

மதசம்பந்தப்பட்ட வழிபாடுகளுக்கு மட்டுமில்லாமல் அலங்காரங்கள் செய்யவும் இப்போது மெழுகுவர்த்திகள் பயன்படுகின்றன. இத்தொழிலைத் துவங்குவதற்கு முன் மெழுகிலிருந்து மெழுகுவர்த்திச் செய்யும் வழிமுறையை அறிந்துகொள்ள வேண்டும். புத்தகத்தின் வாயிலாகவோ அல்லது பயிற்சி வகுப்புகள் மூலமாகவோ இதைக் கற்கலாம்.

மெழுவர்த்தித் தயாரிக்கும் தொழிலுக்குத் தேவையான முதலீடு - ரூ10,000 -15,000

எதிர்பார்க்கும் லாபம் -15 முதல் 30%

 

வாழ்த்து அட்டைத் தயாரித்தல்

வாழ்த்து அட்டைக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைத்து விதமான விழாக்களுக்கும் வாழ்த்து அட்டை என்பது அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. எனவே, வாழ்த்து அட்டை தயாரிக்கும் தொழிலை ஆரம்பிப்பது மிகவும் சிறப்பான ஒன்று.இந்த தொழிலுக்குக் குறைவான முதலீடும் அதிகக் கற்பனைத்திறனும் வேண்டும்.

வாழ்த்துஅட்டை தொழிலுக்குத் தேவையான மூலதனம் : ரூ.500- 2,500

எதிர்பார்க்கும் லாபம் - 40%

 

கஸ்டமைஸ் ஆடை தயாரிப்பு

வீட்டிலிருந்தபடியே செய்யும் தொழில்களில் மகளிருக்கான சிறந்த தொழில் ஆடை வடிவமைப்பு. ஆடைகளில் அலங்காரங்கள் செய்யப் பலவித கருவிகளும், நிறைய ஆட்களும் தேவை என்பதால் அதிக முதலீடு தேவை. பேஸ்புக் பக்கம் அல்லது வாட்ஸ்ஆப் குரூப் மூலமோ ஆடைகளை விற்பனை செய்யலாம்.

இத்தொழிலுக்குத் தேவையான மூலதனம் : ரூ.1லட்சம்

எதிர்பார்க்கும் லாபம் - 30%

 

ப்ளாக்கிங் (Blogging)

ப்ளாக்கிங் என்பது பெண்கள் உள்பட அனைவரும் வீட்டிலிருந்தபடியே செய்யும் ஒரு எளிதான தொழில். இந்தத் தொழில் வெற்றி பெற நீங்கள் நல்ல உள்ளடக்கத்தை எழுதுபவராகவும், அதைப் பற்றிய அறிவுமிக்கவராகவும் இருத்தல் அவசியம். பலருக்கு இன்று ப்ளாக்கிங் தான முதன்மையான வருமானமாக இருக்கிறது.

ப்ளாக்கிங்க்கு தேவையான மூலதனம் : ரூ.5,000

எதிர்பார்க்கும் லாபம் - நம் செயல்பாடுகளைப் பொறுத்தது

 

வெள்ளி நகை தொழில்

ஆபரணங்கள் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிரியமான ஒன்று. நகைகளை உங்களுக்கு மிகவும் பிடித்து, ஒரு சிறிய முதலீடும் செய்யத் தயாராகவும் இருந்தால் வெள்ளி ஆபரணங்கள் தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாம். ஆனால், தொழில் நன்கு கட்டமைக்க அதிகக் காலம் தேவைப்படும்.

தொழிலுக்குத் தேவையான மூலதனம் : ரூ.1லட்சம்

எதிர்பார்க்கும் லாபம் - 40%

 

திருமணத் தரகர் (Match Making)

வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்யக்கூடிய இத்தொழிலைத் துவங்க, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களின் ஜாதகங்கள் (பயோடோட்டா) மட்டுமே தேவை. குறிப்பிட்ட அளவு நேரத்தைச் செலவிட்டால் போதுமானது.

தொழிலுக்குத் தேவையான மூலதனம் : மூலதனம் தேவையில்லை

எதிர்பார்க்கும் லாபம் - மாறுபடும்

 

கணக்குகளைப் பராமரித்தல் (Account keeping)

வணிகவியல் பட்டதாரியாக இருந்து கணக்குப் பார்ப்பதில் வல்லவராக இருந்தால் வீட்டிலிருந்தபடியே இந்தத் தொழிலை ஆரம்பித்துவிடலாம். கணக்குகளைத் திறமையாகக் கையாண்டு இருப்புநிலை கணக்கை தயாரிப்பவர்களைப் பல சிறிய நிறுவனங்கள் தேடி வருகின்றன. எந்தவித முதலீடும் இல்லாமல் எளிதில் செய்யும் தொழில் இது.

தொழிலுக்குத் தேவையான மூலதனம் : மூலதனம் தேவையில்லை

எதிர்பார்க்கும் லாபம் - மாறுபடும்

 

படிவங்கள் பூர்த்தி செய்தல் அல்லது தரவுகளை உள்ளிடுதல் (Form Filling or Data Entry)

கணினிகளை உபயோகிக்கத் தெரிந்த சூப்பர் மம் நீங்களா? உங்களுக்காகக் காத்திருக்கிறது படிவங்கள் பூர்த்தி செய்தல் அல்லது தரவுகளை உள்ளிடும் வேலை. நிறைய இணையதளங்கள் இது சம்பந்தப்பட்ட பணிகளை வழங்குகின்றன. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடித்த உடனேயே சம்பளம் வழங்கப்படும்.

தேவையான மூலதனம் : மூலதனம் தேவையில்லை

எதிர்பார்க்கும் லாபம் - மாறுபடும்

 

அழகு நிலையம் (Beauty parlor)

பெண்களுக்கு மிகப் பொருத்தமான, வீட்டிலிருந்தபடியே செய்யும் தொழில் அழகு நிலையம் தான். இத்தொழிலை ஆரம்பிக்கும் முன் நன்கு பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் உங்களை நல்ல அழகு கலை நிபுணராக நிரூபிக்கச் சில காலம் தேவைப்படும்.

பியூட்டி பார்லருக்கு தேவையான மூலதனம் : ரூ25,000

எதிர்பார்க்கும் லாபம் - மாறுபடும்

பெண்களுக்கான பிற தொழில்கள்

 

டியூசன் வகுப்புகள்

இத்தொழிலைத் துவங்க படித்தல் மற்றும் கற்பித்தல் திறன் மிக முக்கியமாக அவசியம். சில மாணவர்களை வைத்து டியூசனை துவங்கி பின்னர்த் தேவைக்கேற்ப பெரிய கோச்சிங் கிளாஸாக மாற்றலாம்.

தொழிலுக்குத் தேவையான மூலதனம் : ரூ5000

எதிர்பார்க்கும் லாபம் - மாற்றத்திற்குரியது

 

PTC வேலை

PTC (pay to click) என்பது கிளிக் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலை. உங்களுக்குக் கணினியைத் திறமையாகக் கையாளத்தெரிந்தால் பல்வேறு இணையதளங்கள் இந்த வேலையைத் தர தயாராக இருக்கின்றன. இதில் கிளிக் செய்வதன் மூலமும் விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் பணம் ஈட்டலாம்.

தேவையான மூலதனம் : மூலதனம் தேவையில்லை

எதிர்பார்க்கும் லாபம் - மாறுபடும்

 

ப்ளே ஸ்கூல் (Play school)

ப்ளே ஸ்கூலுக்கான தேவை இந்தியாவின் பல நகரங்களில் அதிகரித்து வருகின்றன. தேவையான அளவு இடமும் முதலீடும் இருந்தால் இது உங்களுக்கு ஏற்ற வேலை. இத்தொழிலைத் துவங்க ப்ளே ஸ்கூல் படிப்பை முடிவு செய்து அரசிடம் தேவையான அனுமதி பெறவேண்டும். அதற்குப் பிறகு பள்ளிக்குத் தேவையான பர்னிச்சர், பொம்மைகள், கற்பிக்கும் சாதனங்களை வாங்க வேண்டும். அதற்குப் பிறகு பள்ளிக்குத் தேவையான பணியாளர்களை நியமித்துப் பள்ளியை துவங்கலாம்.

தேவையான மூலதனம் : ரூ2 லட்சம்

எதிர்பார்க்கும் லாபம் - மாறுபடும்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

15 Best Home Based Business Ideas for Housewives & Moms

15 Best Home Based Business Ideas for Housewives & Moms
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns