சிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) பட்ஜெட்டில் எதாவது கிடைக்குமா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். பொதுவாக இது போன்ற இடைகால பட்ஜெட்டுகள் எந்த ஒரு பெரிய கொள்கை மாற்றங்களையும் அறிவிக்காது, அறிவிக்கவும் முடியாது. இதுவரை எந்த ஒரு நிதி அமைச்சரும் தங்களுடைய இடைகால பட்ஜெட்டில் பெரிய கொள்கை முடிவுகளையோ... பெரிய திட்டங்களையோ அறிவித்தது இல்லை.

 

1

1

ஆக நம் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கும் திட்டங்கள் தொடர்பாகவும், கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் ஏதாவது சொல்கிறார்களா என எதிர்பார்க்கலாம்.

2

2

மோடி தலைமையிலான அரசு சிறு குறு தொழில்முனைவோர்களின் கடன்களை ரத்து செய்யச் சொல்லி மத்திய ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் அழுத்தம் கலந்த வேண்டு கோளுக்கு இணங்கி கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களின் கடன்களை மட்டும் மறு சீரமைப்புக்கு உட்படுத்தியது. இதனால் வட்டி பெரிய அளவில் குறைக்கப்பட்டது. எனவே அசல் தொகையோடு குறைந்தபட்ச வட்டியை மட்டும் கட்டினால் போதும். ஜனவரி 01, 2019 கணக்குப் படி வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகளில் இருக்கும் வாராக் கடன்களைத் தொடவில்லை ஆர்பிஐ.

3
 

3

வங்கி நிதி நிலை அறிக்கைகள் படி கார்ப்பரேட் நிறுவனங்கள் என்கிற பெயரில் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் மொத்த கடன் தொகையில் 25%-க்கு மேல் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

4

4

சரி அதெல்லாம் போக, மேலும் மத்திய அரசு சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையானதைச் செய்ய ஆர்பிஐ-யை வற்புறுத்தியதால் ஆர்பிஐ ஒரு புதிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு (MSME) மட்டுமே பொருந்தும். இந்த புதிய கடன் மறுசீரமைப்பின் படி 10,000 கோடி ரூபாய்க்கு மேல் MSME-க்களின் கடன்கள் மறுசீரமைக்கப்பட இருக்கின்றன.

5

5

ஏற்கனவே சொன்னது போல் இந்தைடைக்கால பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய திட்டங்கள் MSME-க்கு இல்லை என்றாலும், 2019 மக்களவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சியமைக்கு அரசு MSME-க்களுக்கான முக்கிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

6

6

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் MSME-க்களுக்கு மிகப் பெரிய வரிச் சுமை குறைப்பாக ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்க்கு மேல் டேர்ன் ஓவர் இருப்பவர்கள் மட்டுமே கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும் என கொண்டு வரப்பட்டது. இதற்கு முன் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் உள்ளவர்கள் கார்ப்பரேட் வரி செலுத்தவதாக இருந்தது. இதனால் 6.9 லட்சம் MSME-க்களுக்கு கார்ப்பரேட் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

7

7

ஒட்டு மொத்தத்தில் இடைக்கால பட்ஜெட்டை விட்டு விட்டு இறுதி பட்ஜெட்டில் (தேர்தலுக்கு பின் வரும் பட்ஜெட்டில்) MSME துறைக்கு தேவையான விஷயங்கள் வெளி வரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: msme impact of budget on sme
English summary

Can msme sector expect some good news from union budget

Can msme sector expect some good news from union budget
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X