காசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்களா, கார் என்று வசதியோடு வாழ்ந்தவன். தற்சமயம் திடீர் சரிவு. ஆரம்பத்தில் அன்றாடச் செலவை சரிக்கட்டிய ஊதியம் இப்போது இல்லை. தொடங்கிய கம்பெனியும் திவாலாகிவிட்டது. ஆகையால் நான் பராரியாம். இப்படித்தான் இந்த உலகமும் என்னை நோக்கி கைநீட்டுகிறது. எங்கே தவறு நடந்தது. எந்த இடத்தில் தடுமாறினேன் என்று கூற என்னிடம் சொற்கள் இல்லை.

 

வல்லுநர்களையும், தொழில் முனைவோரையும் நான் சந்தித்துக் காரணங்களைத் துழாவி கொண்டிருக்கிறேன். சம்பளத்தால் பொழுதை கழித்த நீங்கள், தொழிலைத் தொடங்கும்போது சமரசங்களையும், பின்னடைவுகளையும் சந்திக்கத்தான் வேண்டும் என்கிறார்கள். சரி, பணத்தைக் கையாள்வது எப்படி. நிதி மேலாண்மை என்றால் என்ன என்று கற்றுக்கொண்ட பாடங்களை விவரித்தார்கள்.

 இது இவரது கதை

இது இவரது கதை

அனிருததா பன்சால்கார், வயது 38. மொஞ்சின் என்ற நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித வள நிறுவனம் ஒன்று, டிஜிடடல் தளத்தின் மூலம் ஆட்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தது. ஐ.பி.எம், அஸ்ஸஞ்சரில் பணியாற்றிய போது ஒரு டீசன்டான வாழ்க்கைக்குப் பாத்தியப்பட்ட பன்சால்கருக்கு இது போராட்டமாக மாறியிருக்கிறது. மனைவி, 5 வயது குழந்தையின் தேவையைப் பூர்த்திச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதற்காக ஆரம்பத்தில் அவர் படாதபாடுபட்டார்.

அனுபவம் பேசியது

அனுபவம் பேசியது

ஊழியராகப் பணியாற்றிய காலத்தில் சொந்த செலவுகளைக் குறைத்து, கேட்ஜெட்கள் வாங்குவதைத் தவிர்த்து, விடுமுறையைத் தள்ளிப்போட்டுப் பணத்தைச் சேமிக்கலாம். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமாக அது பயன்படுகிறது. ஏனென்றால் ஒரு தொழில் முனைவோருக்கு நிறுவனமும், தொழிலாளர்களும் குடும்பத்தின் அங்கங்கள் என்றார் பல்சால்கர்.

 பணமே ராஜா
 

பணமே ராஜா

தொடங்கப்பட்ட நிறுவனம் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் எந்த வருவாயையும் ஈட்டாத நிலையில், திடீரெனப் பணியை உதறிவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார் அஸட் மேனேஜர்ஸ் பங்குதாரர் சூர்யா பாட்டியா. வேலையிலிருந்து விலகுவதற்கு முன்பு வீட்டுச் செலவினத்துக்கான நிதித் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். அது 12 லிருந்து 18 மாத நிதித்திட்டமாக இருக்க வேண்டும் என்கிறார் இவர்.

தவிர்க்க வேண்டியது இதுதான்

தவிர்க்க வேண்டியது இதுதான்

தினசரி மற்றும் உழைப்பு மூலதன தேவைகள் குறித்த பிரக்ஞை வேண்டும் என்று கூறும் அவர், மோசமான பணத் திட்டமிடலை தவிர்க்கலாம் என்கிறார். உயர கடன் செலவுகளும் எதிர்காலத்தில் கடினமாக மாறும் என்றும் அவர் கூறுகிறார்.

விஸ்டா ரூம்ஸ் உதயம்

விஸ்டா ரூம்ஸ் உதயம்

விஸ்டா ரூம்ஸ் உணவகத்தின் இணை நிறுவனர் அங்கிதா சேத், அலுவலகத்தின் செலவினங்களைப் பராமரிப்பதில் கைதேர்ந்தவர். தொழிலதிபராக இருந்தாலும் ஓயோ ரூமில் பணியாற்றிய பின் அனுபவம் மிக்கத் தொழில்முனைவோராகப் பரிணமித்தவர். இந்திய அளவில் புதுமையான உணவு வகைகளை விற்பனை செய்யும் பிரத்யேக உரிமையைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் விஸ்டா ரூம் கையெழுத்திட்டது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காகச் சேத் உட்பட இணை நிறுவனர்கள் அனைவரும் பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆரம்பத்தில் பல மாதங்கள் ஊதியத்தைத் துறக்க முடிவு செய்தனர். ஊழியர்களின் செலவினங்களைக் கூடக் குறைத்துள்ளனர். ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகுதான் தாமும், சக பங்காளிகளும் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறார் பன்சால்கார். விஸ்டா ரூம் 2018 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்தான் லாபம் ஈட்டத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விளைவுகள்

விளைவுகள்

குடும்பத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை வர்த்தகத்தில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி எழும். இதில் நேரெதிரான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார் பீக் அல்பா முதலீட்டுச் சேவை நிறுவனத்தின் ஷியாம்சுந்தர்.வணிகத்தை விட வீட்டுத் தேவைகள் பெரிய பிரச்சினையை உருவாக்கும் என்று கூறும் அவர், பணத்தைச் செலவழிப்பதற்கான சரியான திட்டமிடல் தேவை என்கிறார்.

தனிப் பணப்பெட்டிகள்

தனிப் பணப்பெட்டிகள்

துணிகர மூலதன நிறுவனங்களும், புதிய முதலீட்டாளர்களும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். இதில் வரி விதிப்புகளில் சலுகைகளும், எளிதாக இயக்குவதற்கும் பொருத்தமாக இருக்கிறது என்கிறார் கன்சல்டேசன் புளூ பங்குதாரர் மிதுல் மேத்தா. வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் ரிஸ் குறைவாக இருப்பதோடு கஜானாக்கள் தனித்தனியாகப் பராமரிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இயக்குநரை நியமிக்க உரிமை பெற்றுள்ளதோடு, ஆரம்பக்காலப் பங்கு மற்றும் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளில் மட்டுமே இருப்பதாக மேத்தா தெரிவித்தார்.

கஜானாக்களின் பயன்கள்

கஜானாக்களின் பயன்கள்

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் இரண்டு கஜானாக்கள் பராமரிக்கப்படுகிறது. சொந்தமாக ஒன்றும், நிறுவனத்துக்காக ஒன்றும் உள்ளது. கம்பெனி நெருக்கடியில் சிக்கும்போது பர்ஷனல் கஜானாவில் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்கிறார் வல்லுநர் மேத்தா.

குடும்பத்தின் பங்களிப்பு

குடும்பத்தின் பங்களிப்பு

குடும்பத்தில் கணவனும் மனைவியும் வருவாய் ஈட்டினால் உதவிக்கரமாக இருக்கும் என்று தெரிவித்த அங்கிதா சேத், விஸ்டா ரூம்ஸ் தொடங்கிய காலத்தில் கணவனிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகத் தெரிவித்தார். கணவரின் சம்பளம் வீட்டுத்தேவைகளைப் பூர்த்திச் செய்யப் போதுமானதாக இருந்ததாகவும் கூறினார்.

தன் மனைவியும் சம்பளம் கூட ஒருவிதத்தில் உதவியதாகத் தெரிவிக்கிறார் பன்சால்கார். வீட்டுத் தேவைகளுக்கு அவரது சம்பளம் உதவியதாகக் கூறினார்.

 

இழப்புகளைத் தவிர்க்கும் தந்திரம்

இழப்புகளைத் தவிர்க்கும் தந்திரம்

நிறுவனம் குறித்த காலத்தில் லாபம் ஈட்டத் தவறிவிட்டால், கஜானாவுக்குள புயல் வீச வாய்ப்பு உள்ளது. ஆகையால் தொழில் முனைவோர்கள் நம்பகத் தன்மையுடன் இருக்க வேண்டும். வர்த்தகம் தொடர்ந்து முடங்கி எந்தவித பிரயோஜமும் இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால், அதிலிருந்து வெளியேறுவது பற்றிச் சிந்திக்க வேண்டும் என்கிறார் மிட்ராஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அணுப் பன்சால்.

தீர்வு இதுதான்

தீர்வு இதுதான்

திட்டமிட்டபடி வருவாய் ஈட்ட முடியவில்லை. இழப்புகளை நேர் செய்ய முடியவில்லை என்கிறபோது தொழிலை கைவிட்டு, வேறு நிறுவனங்களில் ஊழியராகப் பணியாற்றுவதற்கு முன்வர வேண்டும் என்கிறார் ஷியாம் சுந்தர். வேலை வாய்ப்புகள் வித்தியாசமான முறையில் இருக்கின்றன. ஆதனால் 40 லிருந்து 50 வயதுக்குள் இதனை முடிவு செய்யுமாறு வலியுறுத்துகிறார்.

அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இப்போது மீண்டும் வேலைவாய்ப்பைத் தேடி புறப்படுகிறேன். ஆகையால் நான் இப்போது பராரி இல்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Money lessons for your start up dream

Money lessons for your start up dream
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X