ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தோல்வி அடைந்தால் நிச்சயம் இதுதான் காரணம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடத் தோல்வியைத் தழுவுகின்றன என்பதைக் கேள்விப்பட்டீர்களா? ஒரு நாட்டின் பொருளாதாரத்தை இரட்சிக்க வந்த மீட்பராகக் கருதப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீதான கவர்ச்சி படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. எனவே இவற்றின் தோல்விக்கான காரணத்தை ஆராய்வது மிகவும் அவசியமாகின்றது.

உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்விகளை ஆராய்ந்து, தோல்விகளுக்கான காரணங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்கே பட்டியலிடப்பட்டுள்ள காரணங்கள் உலகெங்கிலும் உள்ள சுமார் 101 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வியை அலசி ஆராய்ந்து பகுப்பாய்வு செய்த பின்னர்த் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 15 காரணிகளை நாங்கள் இங்கே உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.

சந்தையில் தேவை இல்லை: 42%

ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் மிகவும் சுவாரசியமானது மற்றும் குறிப்பிடத்தக்கது இந்தக் காரணி. எந்த ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருளுக்கும் சந்தையில் தேவை இருக்க வேண்டும். எனவே உற்பத்தி பொருளுக்கான சந்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பாதிக்கும் காரணிகளில் முதலிடம் வகிக்கின்றது.

ரொக்க பற்றாக்குறை : 29%

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்விக்கு இது இரண்டாவது முக்கியக் காரணமாக விளங்குகின்றது. எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுடைய நிதியை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும்.

திறமையான அணி அமையாதது: 23%

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகச் சரியான அணி அமைவது மிகவும் கடினமாக இருக்கின்றது. இதுவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய மிக முக்கியக் காரணமாக விளங்குகின்றது. எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மிகச் சரியான கலவையில் பல்துறை வல்லுனர்கள் இடம் பெறுவது மிகவும் அவசியம்.

போட்டியாளர்களின் திறனை குறைத்து மதிப்பிடுவது : 19%

இது நான்காவது காரணமாக இருக்கின்றது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுடைய போட்டியாளர்களின் திறனை கனிக்கத் தவறி விடுகின்றன. அல்லது அவர்களைத் தங்களுக்கான போட்டியாளர்களாகக் கருதவில்லை. அதீத நம்பிக்கை மிகவும் ஆபத்தானது.

உற்பத்திச் செலவு/ பொருளுக்கான சந்தை விலை சிக்கல்கள்: 18%

இப்பட்டியலில் மேற்கோள் காட்டப்பட்ட ஐந்தாவது காரணம் உற்பத்திச் செலவு/ பொருளுக்கான சந்தை விலை சிக்கல்கள்' ஆகும். எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு / தயாரிப்புகளுக்கான விலையை மிகச் சரியாக நிர்ணயிப்பது மிகவும் முக்கியம்.

பொருளுக்கு மிக உயர்ந்த விலை அல்லது மிகவும் குறைவான விலை நிர்ணயிப்பது மிகவும் ஆபத்தானது.

 

பயனாளிகளின் ஆர்வத்தை தூண்டாத தயாரிப்பு: 17%

இந்தப் பட்டியலில் ‘பயனாளிகளின் ஆர்வத்தை தூண்டாத தயாரிப்பு' ஆறாவது இடத்தில் உள்ளது.

வாடிக்கையாளர்கள்தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான ராஜா சொல்வதைப் போல், பயனர்களின் தேவை மற்றும் கோரிக்கைகளை மனதில் வைத்துப் பொருட்களைத் தயாரிப்பது எப்போதும் முக்கியம்.

 

வணிக முன் மாதிரி இல்லாதது: 17%

ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஏழாவது பெரிய காரணம் இது. ஒரு வணிகத்திற்கு முறையான வணிக முன் மாதிரி மிகவும் முக்கியம்.

ஒரு புதிய வணிகத்தைத் துவக்க இது தேவையில்லை என்ற போதிலும், சந்தையில் நிலைத்து இருக்க ஒரு நிலையான வணிக முன் மாதிரி மிகவும் முக்கியமானது.

 

மோசமான மார்க்கெட்டிங்: 14%

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்விக்குப் பின்னால் இந்த மோசமான மார்க்கெட்டிங் பிரச்சனை உள்ளது. வணிகர்கள் தங்களுடைய பயனாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் வணிகர்கள் தங்களுடைய பயனாளர்களின் கவனத்தை ஈர்க்க இயலும்.

மாற்றத்தை விரும்பாமல் இருப்பது மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்க மறுப்பது : 14%

வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது ஒரு வணிகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதற்கு மாறாக ‘மாற்றத்தை விரும்பாமல் இருப்பது மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்தை ஏற்க மறுப்பது', ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைக் குப்புறக் கவிழ்க்கும் ஒன்பதாவது காரணியாக இருக்கின்றது. எனவே எப்போதும் உங்களுடைய வாடிக்கையாளரை அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களின் கருத்துக்களுக்குக் காது கொடுங்கள்.

தவறான நேரம்: 13%

சரியான நேரத்தில் சந்தையில் பொருட்களை அறிமுகப்படுத்துவது முக்கியம். மிகவும் அவசரமாக அல்லது தாமதமாகச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டிப்பாகத் தோல்வியைச் சந்திக்கும்.

தவறான நேரத்தில் தயாரிப்புப் பொடுட்களைச் சந்தைப்படுத்துவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்விக்கு உதவும் பத்தாவது மிகப் பெரிய காரணமாக இருக்கின்றது.

 

கவனச் சிதறல்: 13%

உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியுற்றதற்கு மற்றொரு காரணம் இந்தக் கவனச் சிதறல் அல்லது இழப்பு ஆகும். சில காரணங்களால், சில நேரங்களில், நிர்வாகத்தினரின் கவனம் தங்களுடைய வணிகத்தில் இருந்து விலகிப் பிற செயல்களில் ஈடுபடத்தொடங்கும். இது கண்டிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பாதிக்கின்றது.

முதலீட்டாளர்கள் / இணை நிறுவனர்களுக்கு இடையான கருத்து வேறுபாடு : 13%

முதலீட்டாளர்கள் / இணை நிறுவனர்களோடு பிளவுபடுவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பாதிக்கும் மற்றொரு காரணம். இது மிகவும் விரைவாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தகர்த்துவிடும்.

முக்கிய அச்சு சில நேரம் தவறாகலாம்: 10%

நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களால் சில நேரங்களில் நன்மை விளையலாம். அவர்களே சில நேரங்களில் சொதப்பி விடலாம். எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு சிலரை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. இதற்குத் தகுந்தவாறு நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

ஆர்வம் மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் இல்லாதது: 9%

பட்டியலின் பதினான்காம் இடத்தில் ஆர்வம் மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் இல்லாதது உள்ளது. நல்ல யோசனைகள் எப்போதுமே வெற்றிகரமான வணிகங்களாக மாற்றப்படுவதில்லை. எனவே ஆர்வம் மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் வணிகத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம்.

மோசமான இடம்: 9%

பட்டியலின் 15 வது இடத்தில் 'மோசமான இடம்' இடம் பெற்றுள்ளது. ஒரு வணிகத்தின் வெற்றி அல்லது தோல்வி அது இடம் பெற்றுள்ள இடத்தைச் சார்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reasons behind startups fail: New entrepreneurs checkout this

Reasons behind startups fail: New entrepreneurs checkout this
Story first published: Wednesday, November 15, 2017, 12:07 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns