இனி யாரிடமும் கைக்கட்டி வேலை பார்க்க தேவையில்லை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இன்றளவில் சிறு வியாபாரத்தை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பல இளைஞர்களைப் பார்க்க முடிகிறது, இதற்குக் காரணம் இளைஞர்கள் மத்தியில் உதித்துள்ள ஆர்வமும், மன தைரியமும் தான். இப்படி ஆர்வமோடு இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகக் குறைந்த முதலீட்டோடு 40 சிறு வியாபாரங்கள் குறித்த தகவல்களைத் திரட்டியுள்ளோம்.

நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும் சரி, பகுதி நேர வேலை செய்பவராக இருந்தாலும் சரி, அல்லது வேலை தேடுபவராக இருந்தாலும் சரி இந்தக் கட்டுரையில் உள்ள சிறந்த வியாபார யோசனைகளால் நீங்களும் ஒரு சிறு தொழிலதிபர் ஆகலாம்.

நடமாடும் ஹோட்டல்

மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவை அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்றால் என்ன? என்ற ஐடியாதான் நடமாடும் ஓட்டல். ஒரு குறிப்பிட்ட இடங்களுக்குத் தொடர்ந்து சென்றால் இந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்

கேட்டரிங் தொழில்

திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்குச் சமைத்து பரிமாறும் தொழிலான இந்தத் தொழில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நல்ல உணவு, அருமையான பரிமாறும் திறமை உள்ளவர்களை வைத்து ஆரம்பிக்கப்படும் கேட்டரிங் நிலையங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் அருமையாகச் சமைக்கும் சமையல்காரர்களை உங்கள் தலைமையில் ஒருங்கிணைத்து இயக்கினாலும் நல்ல லாபம் கிடைக்கும்.

 

டியூசன் வகுப்பு

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் பல மாணவர்கள் செல்வது டியூஷன் வகுப்புதான். குறிப்பாகப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது மிகச்சிறந்த தொழில் மட்டுமின்றி ஒரு நல்ல மாணவரை உருவாக்கினோம் என்ற பெருமையும் கிடைக்கும்

தற்போது டிஎன்பிஎஸ்சி, நீட் தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வுகளுக்குக் கூட நீங்கள் வகுப்புகள் நடத்தலாம்.

 

குழந்தையைப் பாதுகாக்கும் சேவை

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளைப் பாதுகாத்துப் பராமரிக்கும் வேலை என்பது ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்யும் தொழில் ஆகும். குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்ற இந்தத் தொழில் வீட்டில் இருந்து கொண்டே ஆயிரக்கணக்கில் எந்தவித முதலீடும் இல்லாமல் சம்பாதிக்க உதவும்

போட்டோகிராபி

குறைந்த முதலீட்டில் திருப்தி தரும் வகையில் ஒரு தொழில் வேண்டுமென்றால் அது போட்டோகிராபர் பணிதான். நீங்கள் ஒரு நல்ல போட்டோகிராபராக இருந்தால் இந்தத் தொழிலை முயற்சிக்கலாம், ஆனால் இன்று இத்துறையில் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் திறமையை அதிகம் வளர்த்துக்கொண்டு தனித்துத் தெரிந்தால் வெற்றி நிச்சயம்.

மனமகிழ் மையம்

இன்றைய பரபரப்பான உலகில் பலருக்கும் தேவைப்படுவது மனநிம்மதி. இதனைக் கருத்தில் கொண்டு மனதை ரிலாக்ஸ் செய்யும் மனமகிழ் மையத்தை ஆரம்பிப்பது ஒரு திருப்தியான தொழில் ஆகும்

சாக்லேட் மற்றும் ஸ்வீட் கடை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் மற்றும் ஸ்வீட்டை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. நல்ல ருசியுடன் கூடிய இந்தப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

அதேபோல் ஹோம்மேட் அதாவது வீட்டிலேயே சிறந்த தரத்துடன் தயாரிக்கப்படும் சாக்லேட்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது.

 

வீடு மாறுபவர்களுக்கான பேக்கர்ஸ் தொழில்

வீடு மாறுபவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை பொருட்களைப் பேக்கிங் செய்து புதிய வீட்டிற்குக் கொண்டு செல்வதுதான். இந்தத் தொழிலை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செய்தால் குறுகிய காலத்தில் நீங்களும் ஒரு தொழிலதிபர்தான். மேலும் சென்னை, பெங்களூர் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இது மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு.

பரிசு இல்லாமல் செல்ல முடியுமா?

திருமணம் உள்ளிட்ட எந்த விழாவுக்குச் சென்றாலும் பரிசுப்பொருட்கள் இல்லாமல் செல்ல முடியுமா? அதிலும் நாம் கொடுக்கும் பரிசு, பெறுபவர்களை அசத்த வேண்டாமா? அதற்கு ஒரு நல்ல பரிசு விற்பனை கடை தேவை. பெரும்பாலான பரிசுக்கடைகளில் ஒரே மாதிரியான பரிசு பொருட்கள் இருப்பதால் கொஞ்சம் வித்தியாசமாகத் தனித்தன்மையுடன் கூடிய பரிசுக்கடை வைப்பது ஒரு சிறந்த தொழிலாகும்

உடம்பை கும்முன்னு வைக்க வேண்டுமா?

இன்றைய இளைஞர்களுக்கு உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிக இருப்பதால் அனைவரும் ஜிம்மை தேடிச் செல்கின்றனர். சகல வசதிகளுடன் கூடிய ஜிம் தொடங்குதல் ஒரு நல்ல தொழில் ஆகும்

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பது சாதாரண விஷயமல்ல. எனவே இதனை மொத்தமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் தற்போது ஒப்படைத்து விடுகின்றனர். எனவே இந்தத் தொழில் ஒரு சிறந்த தொழிலாகும்

உள்கட்டமைப்பு வடிவமைப்பு

இண்ட்ரீயர் டெக்கரேஷன் என்பது இன்றைய நாகரீக உலகின் அவசிய தேவை. எந்த இடத்தில் எந்தப் பொருள் வைப்பது உள்ளிட்ட இந்த இண்ட்ரீயர் டெக்கரேஷன் தொழிலில் நல்ல அனுபவம் பெற்று தொடங்குவது சிறப்பானது

சின்ன மளிகைக் கடை

அதிக முதலீடு இல்லாத, அதிக அனுபவம், அறிவு தேவைப்படாத ஒரு தொழில் ஒரு பெட்டிக்கடை வைப்பது. சின்னப் பெட்டிக்கடையில் ஆரம்பித்துப் பின்னர்க் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் பெற்றுப் பின்னர்ப் பெரிய கடையாக விரிவுபடுத்தலாம்

திருமண ஒருங்கிணைப்பாளர்

கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்பதெல்லாம் பழைய பழமொழி. தற்போது திருமணம் என்பது வெகு எளிதான விஷயம். மொத்த திருமண வேலையையும் திருமண ஒருங்கிணைப்பாளர் ஏற்றுக்கொண்டால் மாப்பிள்ளையும் பொண்ணும் வரவேண்டியது ஒன்றுதான் பாக்கி. இந்தத் திருமண ஒருங்கிணைப்பாளர் தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது

மொபைல் கடை

மொபைல் என்பது மனிதனின் இன்றியமையாத தேவையாகிவிட்டது. எனவே ஒரு மொபைல் கடையை வைத்து அதில் லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன்களை அவ்வப்போது வரவழைத்து விற்பனை செய்தால் நீங்களும் ஒரு சிறந்த தொழிலதிபர்தான்

ஐஸ்க்ரீம் பார்லர்

ஐஸ்க்ரீமை விரும்பாதவர்கள் உலகில் உண்டா? குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பிடித்த இந்த ஐஸ்க்ரீம் பார்லரை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்

ஜெராக்ஸ் கடை

மாணவர்கள், அலுவலகங்கள் ,தொழிற்சாலை முதல் அனைத்துப் பிரிவினர்களுக்கும் தேவையான ஒன்று ஜெராக்ஸ். குறிப்பாகப் பள்ளி, கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை வைத்தால் நீங்கள் தொழிலில் ஒரு ராஜாதான்

நகை உற்பத்தியாளர்கள்

நகைகளை டிசைன் டிசைனாகச் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் நகைக்கடைக்குச் செல்லாமல் தாங்கள் விரும்பியபடி டிசைன் செய்ய நகை உற்பத்தியாளர்களைத்தான் அணுகுவார்கள். இதற்கான படிப்படை முடித்து நகை செய்வதில் நீங்கள் விற்பன்னர் என்றால் யோசிக்காமல் இந்தத் தொழிலில் இறங்கலாம்

இன்சூரன்ஸ் ஆலோசகர்

இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகம் இருப்பதால் இந்தத் தொழில் ஒரு சி'றந்த தொழிலாகக் கருதப்படுகிறது

பகுதி நேர பணியாளர்

வீட்டில் இருந்து கொண்டே பகுதி நேர பணியாளராக வேலை செய்யப் பல இணையதளங்கள் வாய்ப்புக் கொடுக்கின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு இந்தத் தொழில் மிகவும் ஏற்றது

புத்தகக்கடை

என்னதான் இண்டர்நெட் வந்துவிட்டாலும் புத்தகம் படிக்கும் அனுபவமே தனிதான். இன்னும் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கும் வழக்கமுடையவர்கள் அதிகம் உள்ளனர். எனவே புதிய புத்தகக்கடையும் ஒரு நல்ல தொழில் ஆகும்

கம்ப்யூட்டர் பயிற்சி

கம்ப்யூட்டரில் நீங்கள் வல்லவர் என்றால் நீங்கள் கற்ற கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லி கொடுக்கும் வாய்ப்புதான் இந்தத் தொழில். பலர் ஆரம்பநிலை முதல் கம்ப்யூட்டர் மொழி வரை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில் இந்தத் தொழிலை தொடங்குவது நல்லது

யோகா மையம்

இன்றைய இறுக்கமான வாழ்க்கையில் பலர் யோகாவிற்குச் செல்ல விரும்புகிறார்கள், எனவே யோகா மையம் நல்ல வியாபார விருப்பமாக இருக்கும்.

ரியல் எஸ்டேட் ஆலோசகர்

ரியல் எஸ்டேட் எப்போதும் வளர்ந்து வரும் வியாபாரமானது, ரியல் எஸ்டேட் பற்றி வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது சிறந்த வியாபார விருப்பமாக உள்ளது.

கேம் பார்லர்

இன்றைய இளையதலைமுறையினர் விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதால் அவர்களைத் திருப்தி செய்யும் வகையில் பிளே ஸ்டேஷன் மற்றும் கேம் ஸ்டேஷன் விளையாட்டு மையத்தை ஆரம்பிப்பது ஒரு சிறந்த ஐடியா ஆகும்.

நகரத்தில் இருப்போருக்கு இந்தத் தொழில் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

 

உற்சாகமூட்டும் பேச்சாளர்

நீங்கள் பேச்சுத்திறமை உள்ளவரா? உங்கள் பேச்சால் மற்றவரின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியுமா? அப்படியென்றால் உங்களுக்கு இந்தத் தொழில் ஏற்றது

டிராவல் ஏஜென்ஸி

இந்தத் தொழில் குறைந்த முதலீட்டில் மக்களின் பயணத் தேவையைப் பூர்த்திச் செய்யும் ஒரு நல்ல தொழிலாகும்

கம்ப்யூட்டர் ஷாப்

ஐடி குறித்த அனுபவம் மற்றும் தெளிவு இருந்தால் நீங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாகங்கள் குறித்த கடையை வைக்கலாம். இது முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல தொழில் ஆகும்

கூரியர் சர்வீஸ்

நீங்கள் ஒரு பெரிய கூரியர் நிறுவனத்துடன் தொடர் வைத்திருந்தாலோ அல்லது தனியாகவோ ஒரு கூரியர் நிறுவனத்தைத் தொடங்கலாம். மக்கள் சேவையுடன் கூடிய மனதிருப்தி இந்தத் தொழிலில் கிடைக்கும்.

இதுமட்டும் அல்லாமல் தற்போது பெரு நகரங்களில் டோர் டெலிவரி சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், தனிப்பட்ட டெலிவரி நிறுவனத்தைத் துவங்கி பெரிய நிறுவனங்களுக்குக் கான்டிராக்ட் முறையில் வர்த்தகம் செய்யலாம்.

 

பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்தல்

புதிய வாகனங்கள் வாங்க முடியாத பலர் நல்ல தரமான பழைய வாகனங்களை வாங்க விரும்புவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்தத் தொழிலை ஆரம்பிப்பது நன்று

வேலைவாய்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருதல்

வேலை என்பது இன்றைய இளைஞர்களின் முக்கியப் பிரச்சனை. இதனைத் தீர்க்கும் வகையில் பெரிய , சிறிய நிறுவனங்களில் வேலை பெற்று கொடுக்கும் ஆள்சேர்ப்பு நிறுவனம் தொடங்கினால் லாபத்துடன் கூடிய சமூகச் சேவையாக இருக்கும்

செக்யூரிட்டி ஏஜென்சி

பல பெரிய சிறிய நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சியுள்ள செக்யூரிட்டிகளைச் சப்ளை செய்வது ஒரு நல்ல லாபகரமான தொழில். அதேபோல் துப்பறியும் நிலையங்களையும் அமைக்கலாம்

விளம்பர நிறுவனங்கள்

விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கிப் பெரிய, சிறிய நிறுவனங்களின் விளம்பரத்தைப் பெறும் இந்தத் தொழில் உண்மையில் நல்ல லாபகரமான தொழிலில் ஒன்று.

வெப் டிசைனிங் மற்றும் ஹோஸ்டிங்

இன்றைய கம்ப்யூட்டர் உலகில் மிக அவசியமான தேவையான வெப்சைட் உருவாக்குதல், சர்வர் பெற்று தருதல் உள்ளிட்ட இந்தத் தொழிலை இதில் அனுபவம் மற்றும் அறிவு உள்ளவர்கள் ஆரம்பித்தால் இதைவிட வேறு நல்ல தொழில் இல்லை

ஆன்லைன் பிளாக்

நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர், கற்பனை வளம் மிக்கவர் என்றால் ஆன்லைனில் பிளாக் ஆரம்பித்து அதில் மக்களுக்குத் தேவையான கருத்துக்களைப் பதிவு செய்து வந்தால் கூகுள் ஆட் உள்ளிட்ட பல வருமானங்கள் உங்களைத் தேடி வரும்

பழங்காலக் கலைப்பொருட்கள் விற்பனை

பழங்காலக் கலைப்பொருட்களைத் தேடிப்பிடித்து வாங்கிச் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர்கள் இன்னும் அதிகம் உள்ளனர். அவர்களைத் திருப்தி செய்யும் வகையில் இந்தத் தொழிலை ஆரம்பிப்பது சிறப்பான ஒன்று

ஃபாஸ்புட் கடை

இன்றைய இளையதலைமுறையினர் ஃபாஸ்ட்புட் எந்தக் கடையில் நன்றாக இருக்கும் என்று தேடி அலைகின்றனர். அவர்களைக் கவரும் வகையில் ஒரு நல்ல ஃபாஸ்ட் புட் கடையை வைத்தால் நீங்களும் தொழிலதிபர்தான்

டேட்டா எண்ட்ரி பணி

எந்தவித டென்ஷனும் இல்லாமல் பார்க்கும் பணிகளில் ஒன்று டேட்டா எண்ட்ரி. பெரிய நிறுவனங்கள் பல இதற்கான வேலைவாய்ப்பைத் தருவதற்குத் தயாராக உள்ளதால் இந்தத் தொழிலும் ஒரு சிறந்த தொழில் ஆகும்

விண்ணப்ப எழுத்தாளர்

வேலைக்குச் செல்பவர்களுக்குக் கவர்ச்சியான விண்ணப்பங்களைத் தயார் செய்து கொடுக்கும் இந்தத் தொழில் ஒரு நல்ல வருமானத்தைக் கொடுக்கும் தொழில் ஆகும்

எஸ்.இ.ஓ ஆலோசகர்

இன்றைக்கு அதிகம் தேவைப்படும் ஒரு நபராக எஸ்.இ.ஓ உள்ளார். இணையதளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் இந்த எஸ்.இ.ஓ ஆலோசகர் ஒரு நல்ல தொழில். ஆனால் இந்தத் தொழிலை நன்கு அனுபவம் பெற்ற பின்னரே ஆரம்பிக்க வேண்டும்

முயற்சி

இங்கு தரப்பட்ட ஐடியாக்கள் அனைத்தும் ஆரம்பகட்ட துவக்கத்திற்கானது மட்டுமே, இந்த தொழில்களில் நீங்கள் வெற்றி அடைந்தால் உடனடியாத சரியான திட்டமிடல் உடன் விரிவாக்கம் செய்யுங்கள். இதன் மூலம் பெரிய அளவிலான லாபத்தையும் வர்த்தகத்தையும் பெற முடியும்.

இன்று நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் அனைவரும் துவக்கத்தில் சிறிய அளவில் தொழில் செய்தவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Small Business Ideas for energetic youngsters with low investment

Small Business Ideas for energetic youngsters with low investment
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns