இந்த விஷயத்தில் பெங்களூர் கொஞ்சம் வீக்.. சென்னை தெறிக்கவிடுகிறது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் SaaS மென்பொருள் சேவை (Software as a Service -SaaS) வழங்கும் நகரமாக சென்னை பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இப்படி சென்னையில் கொடிக்கட்டி பறக்கும் டாப் 15 சேஸ் (SaaS) நிறுவனங்களின் பட்டியல் உங்களுக்காக.

 சார்ஜ்பி (Chargebee)
 

சார்ஜ்பி (Chargebee)

இந்நிறுவனம் பில்லங் தளத்தை, சேஸ் மற்றும் மின்வணிகத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம் பணம் பெறுவது, இரசீது தருவது, மின்னஞ்சல் அறிவிப்பு மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை போன்றவற்றை, பேமெண்ட் கேட்வே (Payment gateway) உடன் இணைப்பதன் மூலம் தானாகவே செயல்பட வைக்கலாம்.

நிறுவனர்கள்: கிரிஷ் சுப்ரமணியம், ராஜாராம் சந்தானம், தியாகு, சரவணன்

துவங்கிய ஆண்டு : 2011

திரட்டிய முதலீடு: 24.2 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : ஆக்சில் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், இன்சைட் வென்சர் பார்ட்னர்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : 120+

கிளவுட்செர்ரி (CloudCherry)

அனுபவ மேலாண்மை தளமான கிளவுட்செர்ரி மூலம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கருத்தை பல வழிகளில் பெற முடியும். இன்றைய நிலையில் மிக கடினமாக இருக்கும் வாடிக்கையாளர்கள் உடனான உறவை , கிளவுட்செர்ரி மூலம் நெகிழ்வான, தனிப்பட்ட, சுயமாக செயல்படவைத்து, அவர்களின் கருத்தை பலவழிகளில் அறியலாம்.

நிறுவனர்கள்: நாகேந்திரா சி.எல், பிரேம் கே விஸ்வநாத், ஶ்ரீராம் சுப்ரமணியம், விஜய் லட்சுமணன் , வினோத் முத்துகிருஷ்ணன்

துவங்கிய ஆண்டு : 2014

திரட்டிய முதலீடு: 7 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : வெட்ரிக்ஸ் வென்சர்ஸ், சிஸ்கோ இன்வெல்மெண்ட்ஸ், ஐ.டி.ஜி வென்சர்ஸ், சென்னை ஏஞ்சல்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : ~80

கஸ்டமர் லேப்ஸ் (CustomerLabs)

மிண்ணனு சந்தைபடுத்தல் தளமான இது சந்தைபடுத்தும் செயல்பாடுகளை கையாள பயன்படுகிறது. வேறு எந்த விளம்பரம், சந்தைபடுத்தல், பகுப்பாய்வு தளங்களின் தொடர்பு இல்லாமலேயே, நிறுவனங்கள் கஸ்டமர்லேப்ஸ் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை அனைத்து தளங்களிலும் சரிபார்த்து ஒத்திசைக்க வைக்கும்.

நிறுவனர்கள்: வாசிம் அலி, விஷ்ணு வாங்க்யாலா

துவங்கிய ஆண்டு : 2013

திரட்டிய முதலீடு: 50000 டாலர்

முதலீட்டாளர்கள் : டைம்ஸ் இன்டர்நெட்

பணியாளர் எண்ணிக்கை : <10

 பெசிலியோ (Fecilio)
 

பெசிலியோ (Fecilio)

ஐ.ஓ.டி மற்றும் மெசின் லேர்னிங் அடிப்படையில் செயல்படும் செயலிகளை கொண்டு கட்டிடங்களின் செயல்திறனை ஒருமுகப்படுத்தலாம்.

பெசிலியோ செயலி, பெரிய கட்டிடங்களின் வசதிகள் மற்றும் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தும் பல்வேறு வசதிகளை ஒருங்கே கொண்டதாகும். இது மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களை ஒருங்கிணைத்து ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்த உதவுகிறது. இதன்மூலம் பணியாளர்களின் செயல்திறன் குறைவு, தேவையான தகவல் இல்லாமை போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாம்.

நிறுவனர்கள்: ராஜவேல் சுப்ரமணியம், பிரபு ராமசந்திரன், யோகேந்திரபாபு வெங்கிடபதி

துவங்கிய ஆண்டு : 2017

திரட்டிய முதலீடு: 1.5 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : ஆக்சில் பார்ட்னர்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : ~24

ஃபோர்கைட்ஸ் (Fourkites)

இது ஒரு நிகழ்நேர வழங்கல் சங்கிலி தளம் (Real time supply chain visibility platform). இதன் மூலம் 500 நிறுவனங்கள் தங்கள் அனுப்பிய பொருட்கள் எங்கிருக்கின்றன, வெப்பநிலை என்பதை கண்டறியவும், கையாளவும் பயன்படுகிறது. திறமையான அல்கோரிதம் மூலம் பொருள் வந்துசேரும் நேரத்தை சரியாக கணிப்பதால் , ஃபோர்கைட் வாடிக்கையாளர்களின் செயல்பாட்டு செலவுகளை குறைந்து பயனாளர்களின் உறவை வலுவாக்குகிறது.

நிறுவனர்கள்: மேத்யூ இலஞ்சிகல்

துவங்கிய ஆண்டு : 2014

திரட்டிய முதலீடு: 51.5 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : எச்.பி.எஸ் ஏஞ்சல் சிகாகோ, ஹைடுபார்க் ஏஞ்சல்ஸ், ஹைடுபாரக் வென்சர் பார்ட்னர்ஸ், ஓட்டர், ஆகஸ்ட் கேபிட்டல்

பணியாளர் எண்ணிக்கை : 160+

ப்ரெஷ்வொர்க்ஸ் (Fresh works @ Freshdesk)

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் விற்பனை மற்றும் உதவி மையத்திற்கான தீர்வை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.

வாடிக்கையாளர் உதவி மென்பொருள் நிறுவனமான ப்ரெஸ்டெஸ்க், ப்ரெஸ்வொர்க்ஸ் என பெயரை மாற்றியது. ப்ரெஸ்டெஸ்க், ப்ரெஸ்சர்வீஸ், ப்ரெஸ்சேல்ஸ், ப்ரெஸ்காலர், ப்ரெஸ்சேட், ப்ரெஸ்மார்க்கெட்டர், ப்ரெஸ் போன்றவை இதன் தயாரிப்புகள் ஆகும்.

நிறுவனர்கள்: கிரீஷ் மாத்ருபூதம், ஷான் கிருஷ்ணமூர்த்தி

துவங்கிய ஆண்டு : 2010

திரட்டிய முதலீடு: 149 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : ஆக்சில் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், கேபிட்டல்ஜி, சிகீயோ கேப்பிட்டல்

பணியாளர் எண்ணிக்கை : 1200+

ஹேப்பிபாக்ஸ் (Happy Fox)

உதவி மையத்திற்கான டிக்கெட் வழங்கும் தளமான இது மின்னஞ்சல், லைவ்சேட் மற்றும் அழைப்புகள் மூலம் வரும் வாடிக்கையாளர் உதவி விண்ணப்பங்களை கையாள உதவுகிறது. ஹேப்பிபாக்ஸ் 35 மொழிகளில் சர்வதேச உதவிமைய சேவை வழங்குகிறது.

மற்றவற்றிலிருந்து மாறுபட்டும், எளிமையான வடிவமைப்பும் கொண்டிருப்பதால், ஹேப்பிபாக்ஸ் ஆயிரக்கானக்கான நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.

நிறுவனர்கள்: சலின் ஜெயின்

துவங்கிய ஆண்டு : 2011

திரட்டிய முதலீடு: இல்லை

பணியாளர் எண்ணிக்கை : ~20

ஹிப்போவீடியோ (HippoVideo)

இது மிகவும் எளிதான மற்றும் விரைவான வீடியோ பதிவு செய்து பகிரும் மென்பொருள். இதில் எளிதாக வீடியோக்களை உருவாக்கல், மாற்றம் செய்தல், சேமித்தல், பகிரல், கண்காணித்தல் போன்றவற்றை செய்யலாம். பணம் செலுத்தி பெறுவதன் மூலம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பதிவு செய்து, Mp4 வடிவில் மாற்றி கூகுள் டிரைவ், யூடியூப், விமியோ, கூகுள் க்ளேஸ்ரூமில் சேமிக்கலாம்.

நிறுவனர்கள்: கார்த்தி மாரியப்பன்

துவங்கிய ஆண்டு : 2016

திரட்டிய முதலீடு: வெளியிடப்படவில்லை

முதலீட்டாளர்கள் : கே கேபிட்டல்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : <10

இன்டிக்ஸ் (Indix)

பொருட்களுக்கான தளமான இது, பொருட்களின் தகவல்கள் மற்றும் வணிகம் சார்ந்த சேவைகளை வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவுடன், பொருட்களின் விலை, இருப்பு, விற்பனையாளர் தகவல், குறியீடுகள் போன்றவற்றை இணைத்து இன்டிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தங்கள் பொருட்களின் தகவல்களை துல்லியமாக காட்டி வர்த்ததம் செய்ய மிக உதவிகரமாக இருக்கும்.

நிறுவனர்கள்: ராஜேஸ் முப்பாலா, சஞ்சய் பார்த்தசாரதி, சத்யா கலிகி, ஶ்ரீதர் வெங்கடேஷ்

துவங்கிய ஆண்டு : 2010

திரட்டிய முதலீடு: 30.9 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் :அவலான் வென்சர்ஸ், அன்தமிஸ் குரூப்ஸ், என்.ஜி.பி கேபிடல், நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : ~70

கிஸ்ப்ளோ (KiSSFLOW)

தானியக்க (Automation)தளமான இதன் மூலம் சிறிய நடுத்தர நிறுவனங்கள் தங்களின் உள் வேலைகள் மற்றும் வர்த்த செயல்பாடுகளை தானியக்கம் செய்ய முடியும்.

நிறுவனர்கள்: சுரேஷ் சம்பந்தம்

துவங்கிய ஆண்டு : 2013

திரட்டிய முதலீடு: 1 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : வெளியிடப்படவில்லை

பணியாளர் எண்ணிக்கை : ~150

கிலின்டி (Klenty)

விற்பனை பிரதிநிதிகளுக்கான மென்பொருளான இது, அவர்களின் விற்பனை அளவை கணக்கிட, இலக்குகளை அடைய, பிற செயல்பாடுகளை மனித முயற்சியின்றி சேகரிக்க உதவுகிறது.

இதன் மூலம் மக்கள் அதிகம் விரும்பும் பொருள்/சேவை எது என அறிந்து உடனே சந்தைபடுத்தலாம். அதன் மூலம் வர்த்தகத்தை எளிதாகவும் திறமையாகவும் கையாளலாம்.

நிறுவனர்கள்: பிரவீன் குமார்,வெங்கட் கிருஷ்ணராஜ்

துவங்கிய ஆண்டு : 2015

திரட்டிய முதலீடு: - மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் :-

பணியாளர் எண்ணிக்கை : ~20

ஆக்டோஸ் (Octoze)

SaaS ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் இதன் மூலம் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை திறமையாக இயக்க முடியும். நிர்வாகம், ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோரை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட வைக்கும்.

நிறுவனர்கள்: சுவாமிநாதன் அருணாச்சலம், வெங்கடேஸ்வர ராவ், மௌலி குமார்

துவங்கிய ஆண்டு : 2014

திரட்டிய முதலீடு:-

பணியாளர் எண்ணிக்கை : ~40

பேப்பர்ப்ளைட் (Paper Flite)

மொபைல் மூலம் விற்பனையை செயல்படுத்திய முதல் தளமான இது, நிகழ்நேரத்தில் விற்பனை முகவர்களுக்கு சரியான சொத்து தகவல்களைஅனுப்புவதன் மூலம், சிறப்பான சேவை வழங்க உதவும்.

அனைத்து தளங்களில் உள்ள தகவல்களை சேகரித்து, ஒழுங்குபடுத்தி, பகிர பயன்படுகிறது. இதன் மூலம் முற்றிலும் புதிய வழிமுறையில் உங்கள் இலக்குகளை அடைய வழிகாட்டுகிறது.

நிறுவனர்கள்: வினோத் குமார், ஆனந்த பாட், யேகா குமரப்பன்

துவங்கிய ஆண்டு : 2016

திரட்டிய முதலீடு: 4,00,000 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : சென்னை ஏஞ்சல்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : ~20

பைப்கேண்டி (Pipecandy)

தகவல் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் விற்பனை பிரதிநிதிகளுக்கான வாய்ப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கான துறையில் அந்த வாய்ப்புகளை செயல்படுத்த உதவுகிறது.

நிறுவனர்கள்: அஸ்வின் ராமசாமி, ஶ்ரீகாந்த் ஜெகன்நாதன், முரளி விவேகானந்தன்

துவங்கிய ஆண்டு : 2016

திரட்டிய முதலீடு: 1.1 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க், ஆக்சிலார் வென்சர்ஸ், டைகர் குளோபல், ஐ.டி.ஜி மற்றும் எமர்ஜென்ட் வென்சர்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : ~30

ராம்கோ சிஸ்டம்ஸ் (Ramco Systems)

கிளவுட் அடிப்படையாக கொண்ட மென்பொருள் நிறுவனமான இது, பெருநிறுவனங்களுக்கு பேரோல், பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து திட்டமிடல் தளம் போன்ற பல்வேறு துறைகளின் மென்பொருட்களை வாடகைக்கு தருகிறது.

நிறுவனர்கள்: வெங்கட்ராம ராஜா

துவங்கிய ஆண்டு : 1999

திரட்டிய முதலீடு: 52 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : ஏக்சிஸ் மியுட்சுவல் பண்ட்,எச்.டி.எப்.சி, அமன்சா ஹோல்டிங், கோல்டு மேன் சேக்ஸ்

பணியாளர் எண்ணிக்கை : ~3000

ரெபரல்யோகி (Referral Yogi)

SaaS அடிப்படையாக கொண்ட வாடிக்கையாளர் அறிவுரை தளமான இது, நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு உதவுகிறது. நிறுவனங்களுக்கு விளம்பரபடுத்த, பரிந்துரைகளை ஊக்கப்படுத்த, சமூகத்தில் பிரபலபடுத்த உதவுகிறது.

நிறுவனர்கள்: காந்தி கோபிநாத், ஶ்ரீராம் வெங்கடாசலம்

துவங்கிய ஆண்டு : 2017

திரட்டிய முதலீடு: -

முதலீட்டாளர்கள் : -

பணியாளர் எண்ணிக்கை : <10

டேக்லேஸ் (Tagalys)

மிண்ணனு வணிகத்தின் பொருட்களின் பட்டியலை உருவாக்கி, தேர்வு செய்து, மாற்றங்கள் செய்ய இது பயன்படுகிறது.

நிறுவனர்கள்: ஆண்டனி கட்டுகாரன், பழனியப்பன் செல்லப்பன்

துவங்கிய ஆண்டு : 2015

திரட்டிய முதலீடு: -

முதலீட்டாளர்கள் : -

பணியாளர் எண்ணிக்கை : ~10

அன்மெட்ரிக் (Unmetric)

சமூகவலைதள நுண்ணறிவு தளமான இது, பிராண்டுகளில் கவனம் செலுத்துகிறது.பிரபலமான நிறுவனங்கள் தங்களின் போட்டியாளர்களின் புதிய முயற்சிகள், திட்டங்களை தரவுகள் மூலம் புரிந்து கொள்ள உதவுகிறது.மக்கள் சக்தி மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து 30 துறைகளின் 30000 பிராண்டுகளின் இணையதள செயல்பாடுகளை கணிக்க அன்மெட்ரிக் பயன்படுகிறது.

நிறுவனர்கள்: ஜோ வர்கிஷ், குமார கிருஷ்ணசாமி, லட்சுமணன் நாராயண்

துவங்கிய ஆண்டு : 2011

திரட்டிய முதலீடு: 8.7 மில்லியன் டாலர்

முதலீட்டாளர்கள் : நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ், JAFCO ஆசியா

பணியாளர் எண்ணிக்கை : ~85

ஜோபின் (Xobin)

பணியாளர்தேர்வு மென்பொருளான இது, 70% செலவை குறைத்து தேர்வின் தரத்தை இரு மடங்கு உயர்த்துகிறது. மூலத்தரவுகள் கொண்டு மதிப்பீடுகள் செய்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய ஜோபின் திறன்மிகு பணியாளர் தேர்வு மென்பொருள் உதவுகிறது.

நிறுவனர்கள்: அமித் ஆச்சார்யா, குருபிரகாஷ் சிவபாலன்

துவங்கிய ஆண்டு : 2016

திரட்டிய முதலீடு: வெளியிடப்படவில்லை

முதலீட்டாளர்கள் : ஆக்சிலர் வென்சர்ஜ்

பணியாளர் எண்ணிக்கை : 11

ஜோஹோ (Zoho)

இந்நிறுவனம் தொழில், வர்த்தகம் மற்றும் உற்பத்திற்கான பல்வேறு செயலிகளை வைத்துள்ளது. சமூகவலைதள மேலாண்மை, மின்னஞ்சல் சந்தைபடுத்துதல், இரசீது தயாரித்தல், அலுவலக செயல்பாடுகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு 30 இணையதள செயலிகளை கொண்டுள்ளது.

ஜோஷோ ரைட்டர், ஜோஹோ மீட்டிங், ஜோஹோ டாக்ஸ், ஜோஹோ பீபிள், ஜோஹோ மெயில், ஜோஹோ ரிப்போர்ட், ஜோஹோ புக்ஸ், ஜோஹோ கனெக்ட், ஜோஹோ சைட் போன்றவை அவற்றுள் சில.

நிறுவனர்கள்: ஶ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ்

துவங்கிய ஆண்டு : 1996

பணியாளர் எண்ணிக்கை : 5500+

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Chennai Based SaaS Startups

Top Chennai Based SaaS Startups
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more