சிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) இடைக்கால பட்ஜெட்டில் என்ன கிடைக்கும் ..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் பாஜகவின் ஐந்து ஆண்டு கால அரசின் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். பொதுவாக இது போன்ற இடைகால பட்ஜெட்டுகள் எந்த ஒரு பெரிய கொள்கை மாற்றங்களையும் அறிவிக்காது, அறிவிக்கவும் முடியாது. இந்த இடைகால பட்ஜெட்டில் msme-க்களுக்கு என்ன கிடைக்கும்.

 

1

1

இந்திய சிறு குறு தொழில் முனைவோர்கள் பெரும்பாலும் தங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். 2018 - 19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூட சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான ஃபண்டிங் குறித்து அழு த்தமாகப் பேசினார்கள். 2018 - 19 பட்ஜெட் தாக்கலின் போதே மக்களவையில் மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்தார் ஜெட்லி.

2

2

அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி "டிமானிட்டைசேஷன் என்கிற பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்பும் நிறைய சிறு குறு தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்கி வருகிறார்கள். அவர்கள் தொழில் தொடங்கும் போது அரசுக்குக் கிடைக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மூலம் சிறுகுறு தொழில் முனைவோர்களின் நிலையை உயர்த்தவும், அவர்களின் தேவைகளை (குறிப்பாக Working Capital) பூர்த்தி செய்யவும் பயன்படுத்துவோம்" என்றார்.

3
 

3

அதோடு முத்ரா திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்திருந்தர். ஆனால் இந்த இடைக் கால பட்ஜெட்டில் நம் சிறு குறு வணிகர்கள்கு அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதிகபட்சம் சிறு குறு வணிகர்களுக்கு அதிக கடன் வழங்குவது தொடர்பாக வேண்டுமானால் பேசப்படலாம்.

4

4

அதற்கும் காரணம் கடந்த காலங்களில் சிறு குறு தொழில் முனைவோர்கள் போதுமான நிதி இல்லாமல் தவித்தது தான். அதோடு வாராக் கடன் பிரச்னைகளை ஆர்பிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த வேலையை தொழில் துறையினரோடு சேர்த்து சரி செய்ய வேண்டும். ஒட்டு மொத்தமாக வரும் பட்ஜெட்டில் சிறு குரு தொழில்முனைவோர்கள் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

5

5

பெரும்பாலான வரி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எல்லாம் இப்போது சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் போய்விட்டது. ஆக சரக்கு மற்றும் சேவை வரி வரம்பைக் கூட இனி ஜிஎஸ்டி கவுன்சிலின் தான் தீர்மானிக்கும் என்பதால் பட்ஜெட்டில் இந்த வரி விதிப்புகள் குறைப்பையும் எதிர்பார்க்க முடியாது.

6

6

ஆக, சிறு குறு தொழில் முனைவோர்கள் விஷயத்தில் அரசு செயல்படுத்தவிருக்கும் புதிய திட்டங்கள், சில புதிய கொள்கைகளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: msme impact of budget on sme
English summary

What Can msme sector expect from the union budget

What Can msme sector expect from the union budget
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X