ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. ஆனால் தற்போதைய ஐபிஎல் தொடரில் ருத்ருராஜ் கெய்க்வாட்டுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஊதியம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.
இவர் கிரிக்கெட்டில் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை ஆகிய போட்டிகளிலும், பிசிசிஐ-க்காகவும் விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடருக்காக 6 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த 2 முறையும் சிஎஸ்கே அணி இவருக்காக 6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது.
தற்போது கிரிக்கெட் உலகில் பிரபலமாக அறியப்படும் நபராக வலம் வரும் ருதுராஜ் கெய்க்வாட்டின் சொத்து மதிப்பானது 36 கோடி ரூபாயாக உள்ளது.
இவர் கேம்ஸ் 24/7, கோகிராடோஸ், எலக்ட்ரோ பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளம்பரதாரராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஸ்போர்ட்ஸ் கீடா இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இவர் ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.