Sidhanathan K       Apr 10, 2024

உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன்கோர்ட்-ன் சொத்து மதிப்பு..!!

தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் பணக்கார பெண்மணியாக ஃபிரான்ஷுவா பெட்டன்கோர்ட் (francois bettencourt) மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் பிரஞ்சு பியூட்டி நிறுவனமான எல் ஓரியால் (L'Oreal SA) நிறுவனத்தின் இணை உரிமையாளர் ஆவார். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் பியானோ இசைக் கலைஞரும் ஆவார்.

70 வயதான ஃபிரான்ஷுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸின் நிகர சொத்து மதிப்பு ரூ.83,000 கோடி ஆகும்.

கடந்த ஆண்டு இவர் 100 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் பெண்மணியாக உருவெடுத்தார். இதன்மூலம் புளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில் அவருக்கான உயர்ந்த இடத்தை தக்க வைத்து கொண்டார்.

எல் ஓரியால் நிறுவனத்தில் மேயர்ஸ் ரூ.22321 கோடி மதிப்புள்ள அதிக பங்குகளை வைத்துள்ளார். அவரது கணவர் ஜான் பியரி மேயர்ஸ் அந்நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார்.

ஃபிரான்ஷுவா மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் எல் ஓரியால் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வைத்துள்ளனர்.