Tap to Read ➤

பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்ந்து லாபம் அளிக்கும். கடன் திட்டங்கள் வட்டி விகிதம் அதிகரித்து செலவு உயரும்.
Tamilarasu Janakiraman
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக ஜூன் 8-ம் தேதி உயர்த்தியது.
ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்ந்ததால், வங்கி நிறுவனங்களும் விரைவில் பிக்சட் டெபாசிட், கடன் திட்டங்கள் மீதான வட்டியை உயர்த்தி அறிவிக்கும்
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், ஆர்பிஐயிடமிருந்து பெரும் கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும்.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளிடமிருந்து ஆர்பிஐ பெரும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் அதிக கடனில் இயங்கும் நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும். எனவே கடனில் உள்ள நிறுவன பங்குகள் சரியும்.
தனிநபர்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றின் வட்டி விகிதம் அதிகரித்து, மாத செலவுகள் அதிகரிக்கும்.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.