Tap to Read ➤

இனி ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் அபராதம்!

விமானம் போல ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.

Your browser doesn't support HTML5 video.

ரயிலில் அதிக லக்கேஜ்களை எடுத்து சென்றால் கூடுதல் கட்டணம் மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Your browser doesn't support HTML5 video.

கடந்த பல ஆண்டுகளாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இஷ்டத்திற்கு ஏராளமான லக்கேஜ்களை எடுத்து செல்வார்கள்.

Your browser doesn't support HTML5 video.

ரயில் பயணத்தின் போது அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அதிகமான லக்கேஜ் இருந்தால் பயணத்தின்போது அசௌகரியம் அதிகமாக ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Your browser doesn't support HTML5 video.

ஒருவேளை அதிக லக்கேஜ் எடுத்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டால் பார்சல் அலுவலகத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
முன்பதிவில்லா ரயில் பட்டிகளில் ஒருவருக்கு 35 கிலோ மட்டுமே அனுமதி.
ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் ஒருவருக்கு 40 கிலோ வரையில் மட்டுமே அனுமதி.
ஏசி 2 டைர் வகுப்பில் செல்பவர்களுக்கு 50 கிலோ வரை அனுமதி. ஏசி முதல் வகுப்பு பயணிகளுக்கு 70 கிலோ அவரை அனுமதி.
அதிகப்படியான லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு பார்சல் சர்வீஸ் கட்டணத்தைவிட 6 மடங்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உதாரணமாக 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்திற்கு 40 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை பார்சல் சர்வீஸில் புக் செய்தால் ரூபாய் 109 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
ஆனால் அதே எடையுள்ள லக்கேஜ்களை விதிகளை மீறி ரயிலில் எடுத்து சென்றால் 109 x 6 = 654 என ஆறு மடங்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.