Sidhanathan K       Mar 20, 2024

அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலின் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

ரிலையன்ஸ் எனும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானி ஆவார்.

ஒரு காலத்தில் அனில் அம்பானி உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர். அவரது சொத்து மதிப்பு 1.83 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் அனில் அம்பானி திவாலாகி விட்டதாக அறிவித்தார்.

அனில் அம்பானி மற்றும் டீனா அம்பானிக்கு ஜெய் அன்மோல் அம்பானி மற்றும் ஜெய் அன்ஷுல் அம்பானி என இரண்டு மகன்கள் உள்ளனர். 

தந்தை அனில் அம்பானி திவாலான பிறகு, மூத்த மகன் ஜெய் அன்மோல் குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார். 

அவர் படிக்கும் போதே, 18 வயதிலேயே ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் இன்டர்ன்ஷிப் செய்தார். பிரிட்டனில் பட்டப்படிப்பு முடிந்ததும், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் பணியாற்ற தொடங்கினார். 

பின்னர் 2017ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். தற்போது ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசட் மேனேஜ்மெண்ட் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸின் இயக்குநராகவும் உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.2000 கோடி ஆகும். மேலும், லம்போர்கினி , ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சொந்தமாக வைத்துள்ளார்.