பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் 2022 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு காதல் பரிசாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள தங்களது பாரம்பரிய பங்களாவை மகள் ரஹா கபூர்-க்கு எழுதி வைக்க ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்பீர் கபூரின் தாத்தா பாட்டிக்கு சொந்தமான இந்த கிருஷ்ண ராஜ் பங்களா, அவர்களுக்கு பின் ரன்பீர் கபூரின் பெற்றோருக்கு எழுதி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாரம்பரியமிக்க இந்த பங்களாவை ரன்பீர் கபூர் தனது மகள் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்.
இதன் மதிப்பு ரூ.250 கோடி என தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரன்பீர் கபூர் மகள் ரஹா கபூர் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக மாற உள்ளார்.
இந்த பங்களா தவிர மும்பை பாந்த்ரா பகுதியில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அடுக்குமாடி குடியிருப்புகளை ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.