Sidhanathan K       Apr 18, 2024

நம் நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு..?

ஐஏஎஸ் அதிகாரிகளின் சம்பள அமைப்பு பல்வேறு ஊதிய நிலைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு அதிகாரியின் குறிப்பிட்ட நிலை (லெவல்)க்கு ஏற்றாற்போல் வழங்கப்படுகிறது.

ஐஏஎஸ் (லெவல் 10) பதவிக்கான அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.56,100இல் தொடங்குகிறது. இது பதவி, அனுபவம், சர்வீஸ் காலம் அடிப்படையில் வேறுபடும். 

கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (லெவல் 11) பதவிக்கான அடிப்படை ஊதியம் ரூ.67,700 ஆக உள்ளது.

மாஜிஸ்திரேட் மற்றும் அதற்கு அப்பால் (லெவல் 13)  உள்ளவர்களுக்கு ரூ.1,18,500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

டிவிஷனல் கமிஷனர் (லெவல் 14) அடிப்படை ஊதியம் ரூ.1,44,200 ஆக உள்ளது.

முதன்மைச் செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர் (லெவல் 15) போன்ற பதவிகளுக்கு ரூ.1,82,200 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.

கூடுதல் தலைமைச் செயலாளர் (லெவல் 16) அடிப்படை ஊதியம் ரூ. 2,05,400 ஆக உள்ளது.

ஐஏஎஸ் பதவியில் உச்சத்தில் இருக்கும் இந்திய கேபினட் செக்ரட்டரி (லெவல் 17 மற்றும் 18)க்கு மாதச்சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக, அவர்களின் பதவியிடம் மற்றும் பிற காரணிகளுக்கு ஏற்ப பலவிதமான அலவன்ஸ் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.