Tap to Read ➤

கணவர் இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு மெளனம் கலைத்த ஹர்ஷத் மேத்தா மனைவி!

பங்குச்சந்தை மோசடி ஹர்ஷத் மேத்தாவின் மனைவி ஜோதி மேத்தா
Sidhanathan K
இந்திய பங்குச்சந்தையில் 20 ஆண்டுக்கு முன்பு மிகப் பெரிய மோசடி செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹர்ஷத் மேத்தா.
1987-ம் ஆண்டு தனது சகோதரர் துணையோடு க்ரோ மோர் என்ற பங்குத்தரகு நிறுவனத்தை தொடங்கினார் ஹர்ஷத் மேத்தா.
ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார் என்பது 1992ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.
பங்குகளை வாங்குவதற்கு வங்கியில் இருந்த பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை மோசடி இந்தியாவின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்தது. அதன் பின்னர்தான் பங்குச்சந்தைக்கு புதிய சட்ட திட்டங்கள் வழங்கப்பட்டது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் எந்த அளவுக்கு உச்சத்துக்கு சென்றாரோ அதே அளவுக்கு அவர் படு பாதாளத்துக்கும் சென்றார் ஹர்ஷத் மேத்தா.
ஹர்சத் மேத்தா கடந்த 2001 ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா சிறையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கணவருக்கு ஏற்பட்ட விசாரணை குறித்தும், அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் மெளனம் கலைத்த ஹர்ஷத் மேத்தா மனைவி ஜோதி.
ஹர்ஷத் மேத்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட முதல் 4 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று சிறை காவலர்களுக்கு தெரிந்திருந்தும் அவருக்கு சிகிச்சை வழங்கவில்லை.
அடுத்த அறையில் இருந்த தனது சகோதரரிடம் கூட அவருக்கு நேர்ந்த மாரடைப்பு குறித்து எந்தவிதமான தகவலையும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
சிறை மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது மாரடைப்பிற்கு உரிய எந்த மருந்து மாத்திரைகளும் அவர்களிடம் இல்லை.
தனது மெடிக்கல் பாக்ஸில் உள்ள மருந்தை தரும்படி ஹர்ஷத் மேத்தா கேட்ட பிறகுதான் அதை அவர்கள் கொடுத்ததாகவும் அந்த மருந்து தான் அவரை நான்கு மணி நேரத்திற்கு உயிரோடு வைத்திருந்தது.
அதன் பிறகு தானே மருத்துவமனைக்கு அவரை நடக்க வைத்து அழைத்து சென்றனர் என்றும் அப்போது தான் அவருக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு சக்கர நாற்காலியிலேயே உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையின் அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை.
என் கணவர் இறக்கும் போது அவருக்கு கடைசி நேரத்தில் எங்களால் பக்கபலமாக இருக்க முடியவில்லை.
எங்களது நிலைமை எங்களது எதிரிக்குக் கூட வரக்கூடாது என்றும் ஹர்ஷத் மேத்தாவின் மனைவி அதில் பதிவு செய்துள்ளார்.