தெலுங்கு திரைப்படத்துறையில் 21 ஆண்டுகள் வெற்றிகரமாக ஹீரோவாக வளம் வரும் அல்லு அர்ஜூன் ஏப்ரல் 8 ஆம் தேதியன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
அவரது முழு உருவ மெழுகுச் சிலை துபாயில் உள்ள மேடம் துஸாண்ட்ஸ் மியூசியத்தில் திறக்கப்பட்டுள்ளது. 2021இல் வெளியான புஷ்பா படம் மெகா ஹிட்டான நிலையில் இப்படத்தில் 2வது பாகம் ஆகாத மாதத்தில் வெளியாக உள்ளது.
இவர் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்றுள்ளார். அல்லு அர்ஜுனின் நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.460 கோடி) ஆகும்.
அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு ரூ.65 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் புஷ்பா தி ரூல் படத்திற்கு ரூ.100 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜூன் கூல்ட்ரிங்க்ஸ், ஓடிடி தளங்கள், உணவு விநியோக பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பிராண்டு அம்பாசிடர் ஆக ரூ.4 கோடி சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு வருமானம் ரூ.90 கோடியாக உள்ளது.
அவர் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் வைத்திருக்கிறார். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வைத்திருக்கிறார்.
அல்லு அர்ஜூன், ஒரு பிரைவேட் ஜெட், ஆடம்பரமான வேனிட்டி வேன் மற்றும் பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார்.