Sidhanathan K       Mar 28, 2024

வெறும் 30 ஆயிரம் ரூபாயில் துவங்கிய ப்ளூடார்ட் நிறுவனத்தின் வருவாய் 50 ஆயிரம் கோடி..!!

இந்தியாவில் 1980 களில், நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்ட சமயத்தில் உருவானது தான் ப்ளூடார்ட் நிறுவனம்.

சிறு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு போதிய வசதிகள் இல்லாத அந்த காலத்தில், 30 வயதான துஷார் ஜானி தனது நண்பர்களோடு இணைந்து, 30 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ப்ளூடார்ட் நிறுவனத்தை தொடங்கினார்.

1983 ஆம் ஆண்டு 200 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்ட புளூடார்ட் நிறுவனம், விமானம் மூலம் சிறிய பேக்கேஜ்களை டெலிவரி செய்வதற்காக UK-ஐ தளமாகக் கொண்ட கால்கோ எக்ஸ்பிரஸ் உடன் ஒப்பந்தம் செய்தது.

அந்த சமயத்தில் கொரியரை டிராக் செய்வதற்கான வசதி இல்லை. எனவே இதற்காக காஸ்மட் என்ற ஒரு ட்ராக்கிங் மென்பொருளை உருவாக்கினார். இந்த மென்பொருள் மூலம் கொரியர் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதனால் ப்ளூ டார்ட் பெரும்பாலான மக்களின் விருப்பமான கொரியர் சேவை நிறுவனமாக மாறியது. 1994 ஆம் ஆண்டு ப்ளூ டார்ட் நிறுவனம் பொது நிறுவனமாக அறிவிக்கப்பட்டு ஐபிஓ வெளியிட்டது.

இதன் மூலம் இந்த நிறுவனம் 38,000 கோடி ரூபாயை திரட்டியது. இதனை அடுத்து அதுவரை வெளிநாடுகளுக்கு மட்டுமே கொரியர் டெலிவரி செய்து வந்த ப்ளூ டார்ட் நிறுவனம் உள்நாட்டிலும் கொரியர் சேவையை தொடங்கியது.

1995 இல், ப்ளூ டார்ட் 2 போயிங், 2 சரக்கு விமானங்களை வாங்கியது. இந்தியாவில் சரக்கு விமானத்தை சொந்தமாக வைத்து இயக்கிய ஒரே நிறுவனம் (அரசு சாரா) என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தின் மதிப்பு 100 கோடியாக உயர்ந்தது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 இடங்களிலிருந்து ப்ளூ டார்ட் நிறுவனம் சேவையை வழங்கியது. 2001 ஆம் ஆண்டு 3ஆக ஒரு விமானத்தை வாங்கினார் துஷார். இதன் மூலம் ப்ளூ டார்ட் நிறுவனத்தின் வருமானம் 287 கோடியாக உயர்ந்தது.

2004ஆம் ஆண்டு டிஎச்எல் நிறுவனம் ப்ளூடார்ட்டை 730 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது இந்தியாவில் நம்பர் 1 டெலிவரி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 2023இல் இந்த நிறுவனத்தின் வருவாய் 5000 கோடி என உயர்ந்தது. நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்தும் நம்பர் 1 இடத்தில் நீடித்து வருகிறது.