2024-25 க்கான புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய வருமான வரித்துறை அறிவித்துள்ள சில முக்கிய பணிகளுக்கான கடைசி தேதிகளை இப்போது பார்ப்போம்.
மார்ச் 2024 இல், அரசு அலுவலகத்தால் விதிக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட வரிகளை செலுத்துவதற்கான கடைசித் தேதியாகும்.
பிப்ரவரி 2024 இல் பிரிவு 194-IA, 194-IB, 194M மற்றும் 194S ஆகிய பிரிவுகளின் கீழ் கழிக்கப்பட்ட வரிக்கான TDS சான்றிதழை வழங்குவதற்கான கடைசித் தேதியாகும்.
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு டீலரிடமிருந்து பெறப்படும் நிதி குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை வருமான வரித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 2024 வரையிலான காலத்தை உள்ளடக்கிய 3 மாத கால அறிக்கை அளிக்க கடைசி தேதியாகும்.
அரசு அலுவலகங்கள் மார்ச் 2024 மாதத்திற்கான வரி பிடித்தம் (TDS/TCS) செலுத்தப்பட்டு, பிரிவு 194-IA, 194-IB, 194M, 194S (குறிப்பிட்ட நபரால்) கீழ் சலான் வழங்கப்படவில்லை என்றால், அந்த வரித் தகவலை 'படிவம் 24G’ மூலம் தாக்கல் செய்ய கடைசி தேதியாகும்.
அக்டோபர் 1, 2023 முதல் மார்ச் 31, 2024 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட படிவம் எண். 60 இன் விவரங்கள் அடங்கிய படிவம் எண். 61- ஐ இ-ஃபைலிங் செய்வதற்கான கடைசி தேதியாகும்.