தங்கம் ஒரு கிராம் ரூ.6,545க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு படு ஜோராக விற்பனை செய்யப்படும் தங்கத்தை அறை முழுவதும் பூசியுள்ள ஹோட்டல் இருப்பது உங்களுக்கு தெரியுமா..?
ஹனோய் கோல்டன் லேக் (Hanoi Golden Lake) ஹோட்டல் தான் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டலாகும். லாபி, சீலிங், லிஃப்ட் கதவுகள் என ஹோட்டலின் முழு உட்புறமும் 24K தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டல் வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 27 தளங்கள், 342 தங்கும் அறைகள், 8 மீட்டிங் ஹால், தங்கத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை மற்றும் 3 உணவகங்கள் அமைந்துள்ளன.
2009 இல் கட்டப்பட்ட இந்த ஹோட்டலில், தங்க கப்பில் காபி, தங்க தட்டில் சோறு என விருந்தினர்களை ராஜ மரியாதையுடன் கவனிக்கிறார்கள். அதுபோக, பரிமாறப்படும் கரண்டி, உண்ணும் ஸ்பூன் என எல்லாமே தங்கம் தான்.
குளிக்கும் பாத் டப் முதல் நவீன கழிப்பறை வரை தங்க முலாம் பூசப்பட்டிருப்பது தான் ஹலைட். தங்கம் மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பப்படுவதால்தான் ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 312 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.26,050) முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.