Tap to Read ➤

குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் டாப் 10 வங்கிகள்!

இந்தியன் ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. விரைவில் மேலும் 0.40% சதவீதம் வரை வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. | Top 10 Banks Offers Lowest Interest Rates On Education Loan
Tamilarasu Janakiraman
கல்விக் கடனுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மாணவர்களுக்கு குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சிக்கலாகிவிடும்.

Your browser doesn't support HTML5 video.

ஒரு சில வங்கிகள் 7.3 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதங்களை கல்வி கடனுக்காக வழங்கிவருகின்றன.
ஐடிபிஐ வங்கி

 6.75 சதவீதத்தில், இந்த பொதுத்துறை வங்கி கல்விக்கடன் வழங்குகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப்

இந்தியா சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ.20 லட்சம் கல்விக்கடனை 6.85 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
இந்தியன் வங்கி

கல்விக்கடனுக்கு 6.9 சதவீத வட்டி பெறுகிறது.
ஆந்திரா வங்கி, கார்ப்பரேசன் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளும் 7 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகின்றன.
பாங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் 7.15 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக உள்ளது.
கனரா வங்கி கல்விக் கடனுக்கு 7.30 சதவீத வட்டியை பெறுகிறது.