பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி, 2023-2024 நிதியாண்டில், கிட்டத்தட்ட 3.7 கோடி டிமேட் கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 4.33 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன், இந்தியாவின் பங்குச் சந்தை, உலகின் 4வது பெரிய பங்குச் சந்தையாக மாறியுள்ளது.
மேலும், பங்கு தரகர்கள் தங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பங்கு தரகர்களின் பட்டியலை பார்ப்போம்.
குரோவ்
வாடிக்கையாளர்கள் - 9.54 மில்லியன்
ஜீரோதா
வாடிக்கையாளர்கள் - 7.29 மில்லியன்
ஏஞ்சல்ஒன்
வாடிக்கையாளர்கள் - 6.11 மில்லியன்
அப்ஸ்டாக்ஸ்
வாடிக்கையாளர்கள் - 2.52 மில்லியன்
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்
வாடிக்கையாளர்கள் - 1.85 மில்லியன்