இந்திய பங்குச்சந்தையில் இன்று முதல் (மார்ச் 28, 2024) ஒரே நாளில் பரிவர்த்தனையை முடிக்கும் T+0 Settlement முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது T+0 முறை என்றால் என்ன என்று பார்ப்போம்.
T+0 முறை என்பது பங்குச்சந்தையில் செய்யப்படும் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை தொகையை அதே நாளில் முதலீட்டாளர்களுக்கு செட்டில் செய்வதாகும்.
தற்போது வரை, இந்தியாவில் T+2, T+1 போன்ற செட்டில்மென்ட் முறை தான் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, T+1 முறையில் பங்குகளோ, பணமோ அடுத்த நாளில் டெபாசிட் செய்யப்படும்.
இதில் T என்பது பரிவர்த்தனை நாள், 0 என்பது செட்டில் செய்ய தேவைப்படும் நாள். செபி இதை மேம்படுத்தும் விதமாக, இந்த T+0 முறையை கொண்டு வந்துள்ளது.
செபி இந்த T+0 முறையை பரிசோதனை திட்டமாக செயல்படுத்த உள்ளது. இந்த பீட்டா வெர்ஷன் பரிசோதனை திட்டத்தின் கீழ், T+0 முறையில் பரிவர்த்தனை செய்யும் பங்குகளுக்கான வர்த்தக நேரம் காலை 9:15 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மட்டுமே இருக்கும்.